Saturday, September 26, 2009

இந்து மதம் - கேள்வி பதில்

சிறுதெய்வ வழிபாடு என்பதை ஹிந்து மதம் ஏற்றுக்கொள்கிறதா?பதில் : ஆம். அதிலென்ன சந்தேகம். சிறு தெய்வ வழிபாடு நமது வழிபாட்டு முறையின் பிரிக்கவியலா அங்கம்.பாரதி ஒரு இந்துத்துவ தீவிரவாதி என்று ஆகப்பெரியஎழுத்தாளர் ஒருவர் கூற, இன்னொரு எழுத்தாளர் ஆதரிக்கவும் செய்கிறாரே? பாரதிஉண்மையில் ஒரு தீவிரவாதியா?


பதில் : இந்துத்துவம் பற்றி மேலே கொடுத்துள்ளவிளக்கத்தை படித்தால் இந்த கேள்வியே எழாது. பாரதி தீவிரமானவர். பாரதிஉறுதியாக தம்மை இந்துவாக அடையாளம் காட்டிக்கொண்டவர். தொடர்ந்து வரும்யோகிகளின் பரம்பரையில் வந்தவராக தம்மையும் அடையாளப்படுத்திக் கொண்டவர்.இந்து சமூகத்தை சீர்படுத்த, மேம்படுத்த இடையறாது சிந்தித்து உழைத்தவர்.புராணங்கள் உண்மையா பொய்யா?பதில் : உண்மை. பல சமயங்களில் அவற்றில் உயர்வுநவிற்சியும், சில கதைகளும், கற்பனைகளும் கலந்திருக்க வாய்ப்புண்டு.புராணம் என்றாலே சரித்திரம் என்றுதான் அர்த்தம்.சுவர்க்கம், நரகம் என்பது என்ன?பதில் :நமது நல்லது கெட்டதற்கு தகுந்தாற்போல், நமது மனம் அனுபவிக்கும் உணர்வுகளேசுவர்க்கம், நரகமாக குறிப்பிடப்படுகின்றன. சஞ்சலப்பட்ட மனம் கனவு நிலையில்துக்கமான விஷயங்களை கண்டு விசனப்படுவது போல, நமது மனோநிலைக்கு தகுந்தவாறுநமது கர்மபலன்களை மனம் நுகர்ந்து மகிழவோ, வருந்தவோ செய்கிறது. இதுவேசுவர்க்கம், நரகம்.ஆபிரகாமியத்துவத்தின் இந்த சுவர்க்கம் நரகம் திரிந்துபோய், அடியார்களைமிரட்டி தம்மிடமே வைத்துக்கொள்ளவும், எதிராளிகளை மிரட்டி தம் பக்கம்சேர்க்கவும் ஒரு மிரட்டல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்து மதத்தில்அப்படி கிடையாது. நல்லது செய்தால், மகிழ்சியை அனுபவிப்போம். கெட்டதுசெய்தால் துக்கத்தை அனுபவிப்போம். இதில் ஜாதி - மத பாகுபாடெல்லாம்கிடையாது.மேலும் இந்து மதத்தில் நிரந்தர சொர்க்கம், நிரந்தர நரகம் கிடையாது.அந்த நிலைகள் Transit Lounges போன்றவையே. நிரந்தரமாக நல்லவர்களும் இல்லை,நிரந்தரமாக கெட்டவர்களும் இல்லை, எல்லா மனிதர்களுக்குள்ளும் இறைவன்இருக்கிறான் எனவே எப்போது வேண்டுமென்றாலும் ஒரு தீயமனிதன் திருந்தலாம்என்பதே இந்துமதம் சொல்வது.எனவே, சொர்க்கம் அல்லது நரகத்தை நமது கர்மபலன்களுக்கேற்றவாறு நாம்அனுபவித்துவிட்டு மீண்டும் பூமியில் பிறப்போம். பூமி-சொர்க்கம் - நரகம்எல்லாவற்றிலுமிருந்து விடுபடுவதே முக்தி. இதுவே இலக்காக பெரும்பாலானஇந்துத்துவ ஆசான்களால் சொல்லப்படுகிறது.




புண்ணியம் - பாவம் என்பது என்ன?


பதில் : நல்லது செய்தால் புண்ணியம். கெட்டது செய்தால் பாவம்.மகாபாரதம் கூறுகிறது -श्रूयतां धर्मसर्वस्वं श्रुत्वा चैव अवधार्यताम् ।परोपकार: पुण्याय पापाय परपीडनम् ॥ஸ்ரூயதாம் தர்ம ஸர்வஸ்வம், ஸ்ருத்வா சைவாவதார்யதாம் ப்ரோபகார: புண்யாய, பாபாய பரபீடனம் “தர்மத்தின் சாரம் முழுவதையும் கூறுகிறேன், கேள், கேட்டு அதன்படி நட.பிறருக்கு நன்மை செய்தல் புண்ணியம். பிறருக்கு தீமை செய்தல் பாவம்”தர்மம் என்பது எது?பதில் : இயல்பாக இருப்பது தர்மம். இயல்பை மாற்றி ஆசையின், கோபத்தின், மனமாச்சர்யங்களின் உந்துதலால் செய்பவை எல்லாமே அதர்மமாகும்.ஏன் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள்? தீயவர்கள் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்கிறார்கள்?பதில் : நல்லது , கெட்டது குறித்த myopic பார்வையேஇது குறித்த கேள்வியை எழுப்புகிறது. நாமெல்லாம் ஒரு பெரும் பிரபஞ்சத்தின்அங்கங்கள். இங்கே செய்யும் செயல்கள் பலன்களை தருவதற்கு காலம்பிடிக்கின்றன. இந்த சுழற்சியில் கெட்டது செய்துவிட்டு தப்புபவர்கள் நரகநிலையிலோ அல்லது அடுத்த பிறவியொலோ தமது தீய செயல்களுக்கான பலன்களைஅனுபவிக்கின்றார்கள்.நான் ஒரு முஸ்லீம்/கிறிஸ்தவன். என்னால் ஹிந்து மதத்துக்கு மாற முடியுமா? பதில் : ஓ தாராளமாக. அப்படி மாறிய பலலட்சக்கணக்கானோர் இருக்கின்றனரே. சாகர்களிலிருந்து, ஹூனர்களிலிருந்து,யவனர்களிலிருந்து, இன்று மதம் மாறும் இஸ்கான்(ISKCON) வெள்ளைக்காரர்கள்வரை எத்தனையோ கோடி நபர்கள் சரித்திரமெங்கும் இந்துக்களாக மாறிஇருக்கின்றனர்.சோதிடம் உண்மையா?பதில் : உண்மைதான் என்று அனுபவப்பட்ட பலர் சொல்கிறார்கள். உண்மையில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். இது அவரவர் அனுபவம் சார்ந்தது.“சாமி” வந்து விட்டது என்று ஆவேசம் வந்து ஆடுபவர்களை நம்பலாமா?பதில் : அது ஆவேசம் வந்து சாமி என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது.தீமிதித்தல், அலகு குத்தி காவடி எடுத்தல் போன்றவை தேவைதானா?பதில் : மற்றவர்களை தீயில் தள்ளாதவரை, மற்றவர்களை குத்தாதவரை - நம்மை வருத்தி இறைவனை அடைய முயற்சிக்கும் முயற்சிகளில் என்ன தவறு இருக்கிறது?




ஹிந்து என்றால் உண்மையில் என்ன அர்த்தம்?


பதில் : இயல்பானவர்கள் என்றர்த்தம்.ஜாதிகளைப் பற்றி வரலாறு உண்டா? உண்மையில் ஜாதிகள் எப்படி தோன்றின?பதில் : இந்து மதத்தின் சகிப்புத்தன்மையின் அடையாளமேஜாதிகள். பல குழுக்கள் தத்தமது கலாச்சாரங்களை பின்பற்ற முனைகிறபோது இந்துமதம் அந்தக்கலாச்சாரங்களை அழிக்க முயல்வதில்லை. அதனாலேயே ஜாதிகள் எழுந்தன.இன்றைய காலகட்டத்தில் ஜாதி என்பது தேவைதானா என்பது நம்மையே நாம்கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.வர்ணாஸ்ரம தர்மம் என்பது என்ன? பதில் : வர்ணம் வேறு, ஆசிரமம் வேறு. ஒருவரின் இயல்பு - தேர்வு - விருப்பத்திற்கேற்றவாறு செயல்புரிவது வர்ணம், ஆசிரமம்.வேதகால சமூகத்தில் இந்த வித்தியாசங்கள் எல்லாம் வெறும் வித்தியாசமானபாதைகளாகவே இருந்தன. உயர்வு தாழ்வு இல்லை. ஒரே குடும்பத்திலிருந்து தமதுவிருப்பத்திற்கேற்றவாறு பல வர்ணங்களை சார்ந்திருந்தார்கள். ஆன்மீகநாட்டமுடையவன் அந்தணன் ஆனான் என்பதை வேதகாலத்திற்குப் பிறகும் காண்கிறோம்.இன்றும் பழைய இந்துமதத்தைப் பின்பற்றும் பாலித்தீவு ஹிந்துக்களிடையேஇப்படிப்பட்ட முறையே காணப்படுகிறது. அங்கே வர்ணங்கள் நான்கும்இருந்தாலும், உயர்வு தாழ்வு இல்லை, மணவுறவுக்கு இந்த வர்ணங்கள்தடையாயில்லை.அதே போல,வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆசிரமங்களை அன்றுமனிதர் ஏற்றனர். படிக்கிற காலத்தில் மாணவனாகவும், மணம் புரிந்துபொருளீட்டிய காலத்தில் இல்லறமென்னும் ஆசிரமத்திலும், அதற்குப் பிறகுவனப்பிரஸ்தம் என்ற நாடோடி-சிந்தனையாளன் நிலையிலும், கடைசியாக அனைத்தின்மீதும் உள்ள பற்றைத் துறந்து, துறவறம் மேற்கொள்வன் அதற்குரிய ஆசிரமமானசந்நியாச ஆசிரமத்தை சார்ந்தவனாக காணப்படுகிறான்.ஆனால், தோற்றங்கள் எப்படி இருந்தாலும் ஜாதிகளைப் போலவேஇவையும்(வர்ணம்+ஆசிரமம்) இன்றைய காலகட்டத்தில் தேவையா என்பது நம்மையே நாம்கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.ஏழைகள் பசியில் வாட, ஹிந்துக்கள் கோவிலில் மட்டும்நகையாகவும், பணமாகவும் குவிக்கலாமா?


கோவில்களுக்கு ஏன் காணிக்கை செலுத்தவேண்டும்?

அதனால் பயன் என்ன?

அதற்கு பதிலாக கோவில் பணத்தை எல்லாம் எடுத்துஏழைகளுக்கு உதவினால் என்ன?


பதில் : கோவில்களுக்கு கொடுப்பதைவிட ஏழைகளுக்குகொடுப்பது சாலச்சிறந்தது. ஆனால், எவருக்குமே கொடுக்காமல் இருப்பதைவிடகோவில்களுக்கு கொடுப்பது மேல். குறைந்த பட்சம், ஒரு சக்தி மேலே இருக்கிறதுஎன்பதையாவது இந்த சுயநலமிகள் ஏற்கின்றனர் இல்லையா

3 comments:

  1. சகோ இந்த சந்தேகத்திற்கு விளக்கம் தாங்கள்.

    மரணத்தை பற்றி முழுமையாக இந்து மதம் என்ன கூறுகிறது

    ReplyDelete
    Replies
    1. மா+ ரணம் = மரணம்
      ஆக - மாரணத்தில் இருந்து தப்பி பூ ரணத்தில் சேர வேண்டும்.

      அதற்க்கு கட்டாயம் மெய் குரு வேண்டும்.

      Delete
  2. //எல்லா மனிதர்களுக்குள்ளும் இறைவன்இருக்கிறான் எனவே எப்போது வேண்டுமென்றாலும் ஒரு தீயமனிதன் திருந்தலாம்என்பதே இந்துமதம் சொல்வது.எனவே, சொர்க்கம் அல்லது நரகத்தை நமது கர்மபலன்களுக்கேற்றவாறு நாம்அனுபவித்துவிட்டு மீண்டும் பூமியில் பிறப்போம். பூமி-சொர்க்கம் - நரகம்எல்லாவற்றிலுமிருந்து விடுபடுவதே முக்தி. இதுவே இலக்காக பெரும்பாலானஇந்துத்துவ ஆசான்களால் சொல்லப்படுகிறது.//

    மேற்படி உங்கள் கருத்துக்கு இந்து மதத்தின் உண்மையான இறை வேதங்களில் இருந்து ஆதாரம் காட்ட முடியுமா உங்களால்.?

    உங்கள் கருத்துக்கள் எல்லாம் கேள்வி ஞானமாக உள்ளதே தவிர உண்மையான இறை வேதங்களின் அடிப்படையில் ஆதாரங்களை முன்வைத்து எந்த பதிலையும் நீங்கள் கூறவில்லை. அத்தோடு சில முன்னோர்கள் கூறியதாக, பாடியுள்ளதாக புராணங்களில் உள்ளதாக கூறுகிறீர்கள் அவற்றிலும் வெறும் கற்பனைகள் கலந்திருப்பதாக நீங்களே கூறும்போது அந்த விளக்கங்களில் எதுவித உண்மையும் இல்லை என்பதை நீங்களே ஏற்றுக் கொள்கிறீர்கள்.

    எனவே தயவுசெய்து இந்து மதத்தின் உண்மையான இறை வேதங்களில் இருந்து தெளிவாக படித்து உண்மைகளை யாருக்கும் பயறாமல் முக்கியமாக உங்கள் உங்களை படைத்த ஏக இறைவன் ஒருவனுக்கு மாத்திரம் கட்டுப்பட்டு முன்வையுங்கள் அது யார் வெறுத்தபோதிலும் சரியே.

    ReplyDelete