Monday, November 2, 2009

ஹிந்து மதத்தின் எதிரி சாதி வேறுபாடுதான்!

ஹிந்துக்கள் ஹிந்துக்காளாலேயே வஞ்சிக்கப்படுகிறார்கள். 1986-ல் இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தில் நான் பணியாற்றினேன். அப்போது சில பிரிட்டிஷ் அதிகாரிகளை விருந்துக்கு அழைத்திருந்தேன். அந்த அதிகாரிகள் 1947-க்கு முன் இந்தியாவில் பணியாற்றியவர்கள். '200 ஆண்டு காளம் பாரதத்தை எப்படி ஆண்டீர்கள்' என்று அவர்களைக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'பாரதத்தில் பல இந்துக்கள் அடிமைத்தனத்தை நியாயப்படுத்துகிறார்கள். இதுவே எங்கள் ஆட்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இப்படிப் பட்டவர்கள் இருக்கும்போது பாரதத்தை அடிமைப் படுத்தவோ தொடர்ந்து அடிமையாக வைத்திருக்கவோ நாங்கள் சிரமப்பட வேண்டியதில்லை' என்றனர்.



ஆங்கிலேய அதிகாரிகள் சொன்ன இந்தக் கருத்தை ஆர்.எஸ்.எஸ் மற்றும் தேசிய சக்திகள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். ஹிந்துக்கள் அனைவரும் சமமானவர்கள்; சம உரிமையுடைய குடிமக்கள். இது உறுதிப்படாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். ஹிந்துக்களில் ஒரு பகுதியினர் இரண்டாந்தர குடிமக்கள் என்றால் அதற்குக் காரணம் ஹிந்துக்களே தவிர வேறு யாருமில்லை.


இந்தக் கேள்விக்கு விடை தேட வேண்டிய பொறுப்பு தேசிய எண்ணம் கொண்டவர்களுக்கு உல்ளது. யாரையும் இகழ்வாக நினைக்கக் கூடாது என்ற எண்ணத்தை பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அடிமையாக இருக்க மாட்டோம் என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும். சம உரிமையுள்ளவர்களாகச் செயல்படும்போதுதான் எழுச்சி மிக்க பாரதத்தை உருவாக்குவது சாத்தியமாகும்.





(ஜூன் 16-ம் தேதி டில்லியில் நடை பெற்ற ஆர்.எஸ்.எஸ் சிறப்பு பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் ஓய்வு பெர்ற I.F.S அதிகாரி ஓ.பி.குப்தா அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.)

மதம் மாற்றுவதே மத நம்பிக்கையானால்....

ஒரு

வேண்டுகோள், இதைப் படிக்கும்போது கிறிஸ்த்ஹுவ மத நம்பிக்கைகளை நான்

விமர்சனம் செய்வதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. எந்த கிறிஸ்துவ மத

நம்பிக்கைகள் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களைப் பாதிக்கிறதோ, எந்த

நம்பிக்கைகள் மற்ற மதத்தினருக்கும் கிறிஸ்துவ ஸ்தாபனங்களுக்கும் கிடையே

பிரச்சினைகளை உருவாக்குகின்றனவோ, அவைகளைப் பறித்தான் இங்கு

குறிப்பிடுகிறேன். ஒவ்வொரு மதத்திற்கும் நம்பிக்கை மாத்திரம் உண்டு.

ஆனால் அது மற்ற மதங்களைப் பாதிக்கக்கூடாது அவ்வளவுதான்.



ஜெயலலிதா

கொண்டு வந்த கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் ஆசை காட்டி, மோசம் செய்து,

மிரட்டி எவரையும் மதமாற்றம் செய்யக்கூடாது என்றுதானே கூறுகிறது. இது எல்லா

மதத்திற்கும் நல்லதுதானே! எப்படி எல்லா மதத்தினரையும் ஒரே மாதிரி

பாதிக்கும் ஒரு சட்டத்தைப் பற்றி, எதிரும் புதிருமான கருத்துகள்

நிலவுகின்றன - அதுவும் ஆன்மீக வாதிகளிடையே அரசியல்வாதிகள் கூட ஒருவர்

ஆதரித்தால், மற்றவர் எதிர்க்கவேண்டும் என்று வேண்டுமென்றே எதிர்க்கலாம்.

ஆனால் கிறிஸ்துவ ஸ்தாபனங்கள் ஏன் இந்தச் சட்டத்தை எதிர்க்கவேண்டும்?
இந்த

கேள்விகளுக்கு சரியான விடை வேண்டுமானால், இந்தப் பிரச்சினையைத் தெளிவாக

அலசவேண்டுமானால், ஒரு நிபந்தனை, கிறிஸ்துவ ஸ்தாபனங்களைப் பற்றிப் பொதுவாக

இருக்கும் ஒரு கற்பனைக்கு அப்பாற்பட்டு - அவர்கள் செய்யும் சேவை என்னும்

போர்வையை நீக்கிவிட்டு - உலக கிறிஸ்துவ மத ஸ்தாபனங்களின் ஆதார

நம்பிக்கைகளை ஆராய்ந்து பார்த்தால் தான், ஏன் கட்டாய மதமாற்றத்

தடைச்சட்டத்திற்கு நம்நாட்டு கிறிஸ்துவ அமைப்புகள் இவ்வளவு எதிர்ப்பு

தெரிவிக்கின்றன என்பது புரியும்.



மேலும் நடைமுறையில் மாத்திரம்

இல்லாமல், நம்பிக்கை அடிப்படையிலும் கிறிஸ்துவ மதம், ஹிந்து மதத்தை எந்த

கண்ணோட்டத்தோடு பார்க்கிறது, அதற்கு மாறாக ஹிந்து மதம் கிறிஸ்துவ மதத்தை

எப்படிப் பார்க்கிறது - என்பதனையும் பட்டவர்த்தனமாக எடுத்துச்

செல்லவேண்டும். மத மாற்றம் செய்யும் அகில உலக கிறிச்துவ நிறுவனங்கள்

எப்படி செயல்படுகின்றன; அவர்கள் மதத்தை எப்படி வியாபாரப் பொருளாக்கி,

மதங்களின் உறவுகளை சந்தைக் கலாசாரமாக்கி தங்கள் மதத்திற்கு ஆள் சேர்ப்பது

ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்கள்; எப்படி இந்த

குறிக்கோளுக்கு அவர்கள் எது செய்தாலும் - பள்ளிக்கூடமோ ஆஸ்பத்திரியோ

குஷ்ட ரோக நிவாரணமோ - அது பக்க வாத்யம்தான் என்பது புரியும்.



அது

மாத்திரம் அல்ல, கிறிஸ்துவ ஸ்தாபனங்களுக்கு உலக அளவிலான திட்டங்கள்,

ஒவ்வொரு நாட்டிலுள்ள கிறிஸ்துவ ஸ்தாபனங்களும், உலக கிறிஸ்துவ

ஸ்தாபனங்களின் வரையறையில்தான் இயங்கும். அது தானாக ஒன்றும் செய்யமுடியாது.

இந்தில் எந்தத் தனி நாட்டின் கிறிஸ்துவ நிறுவனங்களுக்கும் சுதந்திரம்

கிடையாது.



எல்லா சர்சுகளும், உலக சர்ச் அமைப்புக்குக் கீழேதான்.

உலக சர்ச்சுகளின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டுத்தான் நம் நாட்டு

சர்ச்சுகள், (ஆர்ச் பிஷப்புகள்) செயல்படுகின்றன. உலக சர்ச்சுகள் மதமாற்றம்

செய்யவேண்டிய கட்டாயத்தினால், சந்தைக் கலாசாரத்தை மதத்துடன்

இணைத்துவிட்டார்கள். இந்த மதச்சந்தை வியாபாரத்தின் தாத்பர்யத்தையும்,

விளைவையும் பற்றித் தனியாக விளக்கி எழுதியிருக்கிறேன். இந்த மத சந்தைக்

கலாசாரத்திற்கு ஆரம்பக் காரணம், மற்ற மதத்தலைவர்களை எப்படியாவது மதம்

மாறாச் செய்து, தன் மதத்தில் சேர்த்துவிட வேண்டுமென்கிற கட்டாய தர்மம்

கிறிஸ்துவ மத நம்பிக்கையில் இருப்பதுதான். இதுதான் இப்போது

மதங்களூக்கிடையே தீவிர போட்டியை உருவாக்கியிருக்கிறது.



இந்தப்

போட்டியை சர்வதேச அளவில் முதலில் ஆரம்பித்து, மிகவும் வெற்றிகரமாக

நடத்திவருவது கிறிஸ்த்ஹுவ மத ஸ்தாபனங்கள். அவர்கள் ஏன் கிறிஸ்துவர்களாக

அல்லாதவர்களை கிறிஸ்துவர்களாக மாற்றுவதை ஒரு தர்மமாக, கடமையாக

நினைக்கிறார்கள்? இதற்கான காரணங்கள் என்ன? இதை அலசிப்பார்த்தால் நம்முடைய

பல கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும். இரண்டு காரணங்களால் பிற

மதத்தவர்களை கிறிஸ்த்ஹுவர்களாக மாற்றவேண்டும் என்கிற கட்டாயம், மத ரீதியாக

கிறிஸ்துவ மத ஸ்தபானங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.



முதல் காரணம்:

கிறிஸ்த்துவ மதத்தின் மாற்ற முடியாத அடிப்படையான நம்பிக்கை, கிறிஸ்துவ

மதம் மாத்திரம்தான் உண்மையான் மதம், அது ஒன்றுதான் வழி; மற்ற மதங்கள்

எல்லாம் பொய்; அவை சாத்தானின் சதி - என்பதுதான்.



கிறிஸ்துவ

மதத்தின் மூலமாக மனிதன் மோட்சம் அடைய முடியும். வேறு மதத்தைப்

பின்பற்றுகிறவர்கள் சாத்தானின் கும்பல்கள். அவர்களுடன் உறவோ, பழக்கமோ

கூடாது. மேலும் இந்த ஒரே உண்மையான மதத்தை உலகம் முழுவதும் பரப்ப,

எல்லோரையும் கிறிஸ்துவர்களாக மாற்ற, கிறிஸ்துவ மதம், கிறிஸ்துவப்

பாதிரிகளுக்குக் கட்டளையிடுகிறது. இந்த அடிப்படையான நம்பிக்கையைக் காரணம்

காட்டித்தான் Encyclopaedia of Britannica என்கிற அறிவுக் களஞ்சியமான

தொகுப்பு, கிறிஸ்துவ மதத்தை 'சகிப்புத் தன்மையில்லாத' மதம் என்று

வர்ணிக்கிறது. 'இந்தத் தொகுப்பின் முக்கியத்துவம் என்னவென்றால், இது

கிறிஸ்த்ஹுவ அறிஞர்களால் தொகுக்கப்பட்டது. அதனால், இதுபற்றிக் குற்றம்,

குறை கூற முடியாது.ல் உன்னுடைய மதம் மாத்திரம்தான் உண்மை. மற்றதெல்லாம்

பொய் என்கிற நம்பிக்கை, அந்த உண்மையான மதம் எங்கும் பரவ வேண்டுமென்றால்,

பொய்யான மதங்கள் அழியவேண்டும். இந்த அடிப்படையிலே, கிரேக்க, ரோமானிய

மதங்களிலிருந்து சாமானியமான பழங்குடி மதங்கள், ஐரோப்பா வடக்கு அமெரிக்கா,

தெற்கு அமெரிக்கா, அப்பிரிக்கா போன்ற இடங்களில் அடியோடு அழிக்கப்பட்டன.

இந்த அழிவுகள் பற்றி நூற்றுக்கணக்கான ஆய்வுகளும், புத்தகங்களும் வந்த

வண்ணம் இருக்கின்றன. இதற்குக் காரணம், மற்ற மதங்களெல்லாம் பயனற்ற மதங்கள்

என்பது கிறிஸ்த்ஹுவ போதகர்களின் நம்பிக்கை. (இந்த அழிவுகள் பற்றி மேலும்

விபரங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் Encyclopedia of

Britannica-வின் 4வது தொகுப்பில் பல இடங்களில் குறிப்பாக பக்கங்கள்

491-492ல் காணலாம்.).


.இரண்டாவது காரணம்: கிறிஸ்துவ மதத்தில் மற்றொரு

நம்பிக்கை இயேசு கிறிஸ்து மீண்டும் உலகுக்கு வருவார், வந்து 1000 ஆண்டுகள்

ஆட்சி செய்வார் என்பது. அதன் பிறகு பிரளயம் வரும். அப்போது

புதைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்துவர்கள் எல்லாம் உயிர் பெற்று வருவார்கள்,

யார் யார் நல்லது செய்திருக்கிறார்களோ அவர்கள் சொர்க்கத்திற்கும்

மற்றவர்கள் நரகத்திற்கும் செல்வார்கள். (ஆனால் கிறிஸ்துவர்கள்

அல்லாதவர்கள் நல்லது செய்தாலும் நரகத்திற்குத்தான் செல்வார்கள், இது

காந்திக்கும் பொருந்தும்.) ஆனால் இவ்வளவும் நடக்க, இயேசு கிறிஸ்த்ஹு

உலகிற்கு திரும்பவும் வந்து ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்யவேண்டும்.

(இதைத்தான் Millennium என்று கூறுகிறார்கள்.)



ஆனால் இயேசு எப்போது

திரும்ப வருவார்? எப்போது உலகம் முழுவதும் பரவி கிறிஸ்துவ மதம் மாத்திரம்

நிலவுகிறதோ அப்போதுதான் திரும்ப வருவார். சாத்தான் நம்பிக்கைகள் உலகின்

எந்தப் பாகத்திலிருந்தாலும் அவை இருக்கும் வரையில் இயேசு கிறிஸ்து திரும்ப

வரமாட்டார் என்பதுதான் அந்த நம்பிக்கை. இந்த நம்பிக்கையை Eschatological

expectation என்று கிறிஸ்துவ மறையில் கூறுவார்கள். இப்போது புரிகிறதா

மதமாற்றம் செய்வதில் கிறிஸ்துவ ஸ்தாபனங்களும் பாதிரிகளும் ஏன்

புரியாததொரு வேகங்காட்டுகிறார்கள் என்று? இயேசுவை உயிருடன்

பார்க்கவேண்டுமென்கிற ஆவல், மற்ற மதத்தவர்கள் எல்லோரையும்

கிறிஸ்துவர்களாக மாற்ற வேண்டும் என்கிற கட்டாயமாக மாறி, அதுவே மதமாற்ற

வெறியாக உருவெடுக்கிறது.



இந்த Eschatological நம்பிக்கை, கிறிஸ்துவ

மதத்தை, மதமாற்றத்தின் மூலமாக, காட்டுத் தீ போல உலகில் எப்படி பரவ

வைத்தது என்பது, அதே Encyclopaediaவில் விவரமாக எழுதப்பட்டுள்ளது.

சொல்லப்போனால் மற்ற மதங்கள் எல்லாம் இயேசு உலகில் வருவதற்குத்

தடங்கல்கள் என்கிறா Eschatological நம்பிக்கைதான் கட்டாய மதமாற்றத்திற்கு

உந்துதலாக இருக்கிறது. எப்படி இந்த Eschatological நம்பிக்கை, வெறியாக

மாறி, கிறிஸ்துவ மதம் பரவ உதவியிருக்கிறது என்பதைக் காட்ட Encyclopaedia

தொகுப்பில் கூறப்பட்டுள்ள சரித்திர பூர்வமான ஒரு நிகழ்ச்சியை - அதுவும்

நம் நாடு சம்பந்தப்பட்டது - இங்கு நினைவு கூரலாம் என நினைக்கிறேன்.



கொலம்பஸ்

அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்று வெள்ளைக்காரர்கள் நமக்கு எழுதி

வைத்ததை, இதுவரை வரலாற்றுப் புத்தகத்தில் நாம்படித்து வருகிறோம். ஆனால்,

கொலம்பஸ் அமெரிக்காவைத் தேடிப் போகவில்லை. கப்பலில் ஏறிய அவர் பாரத

நாட்டுக்குச் செல்லவேண்டுமென்றுதான் புறப்பட்டார். ஏன் அவர் பாரத

நாட்டுக்குப் புறப்பட்டார்? இயேசு கிறிஸ்து உலகுக்கு மறுபடியும் வரவேண்டிய

தருணம் வந்துவிட்டதாக கொலம்பஸ் நம்பினார். ஆனால் ஒரு தடங்கல் இருப்பதால்,

இயேசு வரமுடியவில்லை என்றும வர் நம்பினார். அது என்ன தடங்கல்? பாரத

நாட்டில் சாத்தான் (ஹிந்து மதம்) குடி கொண்டு, இயேசு வருகையைத் தடுத்துக்

கொண்டிருக்கிறது என்பதுதான். அதனால் எப்படியாவது (வாஸ்கோடகாமா சென்ற

நீண்ட வழியில் செல்ல நேரமில்லாததால்) ஒரு குறுக்கு வழியில் பாரத தேசம்

சென்று, இயேசு வருவதற்கு தடங்கலாக இருக்கிற சாதாரண ஹிந்து மதத்தை,

கிறிஸ்துவ வழிமுறைகளால் விலக்கிவிடவேண்டும் என்கிற வெறியிலேதான், அவர்

பாரதநாடு செல்லக் கீளம்பி, அமெரிக்காவில் போய் இறங்கினார். (இது

பற்றிEncyclopacdia-வில் தொகுப்பு 4-இல் பக்கம் 504-இல்

குறிப்பிடப்பட்டுள்ளது.)



அதையே இந்தியா என்று நம்பி, அங்கிருக்கும்

மக்களை இந்தியர்கள் என்று நினைத்து, அவர்களை மிருகங்களை வேட்டையாடுவது

போல தீர்த்துக்கட்டினார். அப்போது கிறிஸ்துவ நிறுவனங்கள் இந்த

வழிமுறையைக் கையாண்டனர். அவர் துவக்கி வைத்த இந்தப் பணி 2 நூற்றாண்டுகளிலே

பூர்த்தியடைந்து வடக்கு, தெற்கு அமெரிக்காவிலிருந்தே, பழங்குடியினர்

முழுமையாக தீர்த்துக்கட்டப்பட்டனர். கிட்டத்தட்ட 11கோடி பேரிலிருந்து

20கோடி பேர் வரை தீர்த்துக் கட்டப்பட்டிருக்கலாம் என்பது இப்போதைய

கணிப்புகள். மயன் கலாச்சாரம், செவ்விந்தியர்கள் கலாச்சாரம் எல்லாம் இன்று

உயிருடன் இல்லை. அவைகளை மியூஸியத்தில்தான் பார்க்க வேண்டும்..

.இது போன்ற ஒரு கொடுமை உலக வரலாற்றிலேயே நடந்தது

கிடையாது. கி.பி 1500-ஆம் ஆண்டு அந்த பழங்குடியினரின் எண்ணிக்கை 13.5

கோடி என்று கணிக்கப்பட்டது - கிட்டத்தட்ட அன்றைய பாரதத்தின் (பாகிஸ்தான்,

வங்காளதேசம் உட்பட) ஜனத்தொகையும் அந்த அளவுதான். நாம் இப்போது

கிட்டத்தட்ட 125கோடி. ஆனால் அமெரிக்கப் பழங்குடியினரின் எண்ணிக்கை

50,000-க்குக் கீழே. அதாவது 125கோடியாகி இருக்க வேண்டியவர்கள், இப்போது

50,000 பேர் மட்டும்தான் உள்ளனர். இந்த விவரங்கள் American Indiao

Holocaust and Survival என்கிற புத்தகத்தில் தரப்பட்டுள்ளது. ஆனாலும் இதை

அதிகம் பேருக்குத் தெரியாமலேயே மறைத்து வைத்திருந்தார்கள்.



அமெரிக்காவில்

செப்டம்பர் 11, 2001-அன்று நடந்த பயங்கரத்தைப் பற்றி கிளின்டன் அவர்கள்

பேசும்போது, "நாம் முன்னால் செய்த கொடுமையின் கர்மம்தான் நம்மைத்

தாக்குகிறது போல இருக்கிறது." என்று கூறினார். இந்தக் கொடுமைக்கெல்லாம்

அடிப்படையான காரணம், கிறிஸ்துவ நம்பிக்கையில் மற்ற மதங்கள் தேவையற்றவை,

சாத்தானின் விஷமங்கள் என்பது மாத்திரம் இல்லாமல்-அவை இயேசுவின்

வருகைக்குத் தடங்கல்கள் என்ற தீவிர நம்பிக்கைதான். மதமாற்றத்தின்

அடிப்படைக் காரணமும் இதுதான்.



இந்த தீவிரமான நம்பிக்கை ஏதோ 400

ஆண்டுகளுக்கு முன்னால் இருந்திருக்கும் தவறான எண்ணம்; அது இப்போது இல்லை:

என்று நினைக்க வேண்டாம். 20-ஆம் நூற்றாண்டிலே கூட இதே தீவிரமான

நம்பிக்கைதான் கிறிஸ்துவ ஸ்தாபனங்கள் பலவற்றையும் உந்துகிறது - என்று

கூறுகிறது. Encyclopacdia தொகுப்பு (P-504, Vol-iv).

இதை

வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் - என்ன

செய்தும் மதம் மாற்றலாம், தவறு இல்லை. ஏனென்றால் மற்ற மதங்கள் எல்லாம்

சாத்தான் மதங்கள்தானே; அதற்கு இந்தச் சட்டம் தடங்கல். இதுது¡ன் உண்மையான

காரணம்- ஜெயலலிதா கொண்டு வந்துள்ள சட்டத்தை எதிர்ப்பதற்கு! மதச்சார்பற்ற

தலைவர்களும், கட்சிகளும் இந்த உண்மைகளை வெளிவர விடமாட்டார்கள். ஆனால்

வெளிவராத குற்றத்தினால் உண்மையை மறைக்க முடியாது.



அடுத்ததாக மதமாற்றம் செய்ய என்னென்ன மாதிரியான உத்திகளை, கிறிஸ்துவ ஸ்தாபனங்கள் கையாளுகின்றன என்று பார்ப்போம்.



இது வியாபார தந்திரம்தானே



ஆன்மீக

விஷயமான மத நம்பிக்கையில், எப்படி சந்தை கலாச்சாரம் வந்து சேர்ந்தது? இதை

சிறிது விளக்கமாகவே பார்க்க வேண்டும். மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை

எப்படியாவது மதம் மாற்றி தன் மதத்தில் சேர்த்து விட வேண்டும்- என்று மதம்

மாற்றுவதைய தர்மமாக ஒரு மதம் கொண்டால், அந்த மதம் மற்றும் அந்த மதத்தை

சார்ந்த ஸ்தாபனங்கள் எப்படி நம் நாட்டில் தொன்றுதொட்டு இருந்துவரும்

ஆன்மீக கலாசார முறையிலிந்து மாறுபட்டு இருக்கும். இயங்கும் என்று

பார்ப்போம்.



முதலில் மதம் மாற்றுவதே அந்த மதத்தின் தொழிலாக

மாறும். அதிலிருந்து ஆன்மீகம் மறையும். பிறது அந்த தொழிலுக்கான குணங்கள்

வழி, விதி முறைகள், அமைப்புகள் பயிற்சிகள், பயிற்சி பெற்ற ஊழியர்கள்,

பிரசுரங்கள் மற்ற மதத்தைப் பற்றிய இழிவான எண்ணத்தை தங்கள் மனதிலும்,

தங்களுடைய மத்தை சேர்ந்தவர்களின் மனதிலும் ஏற்படுத்துவது; இது போன்ற

பெரிய திட்டத்திற்கான பணம், நெருக்கம், பணப்புழக்கம்... இப்படியெல்லாம்

பிரம்மாண்டமான போட்டி தயாரிப்புகள் எல்லாமே, இந்த மதத்தின் ஆத்மாவிலும்

வழிமுறைகளிலும் புகுந்து விடுகிறது. இப்படித்தான் மதம் என்பது வியாபார

பொருளாகிறது. மத ஸ்தாபனங்கள், வியாபார ஸ்தாபனங்கள் ஆகின்றன.



சந்தையில்

வியாபாரிகளுக்கிடையே எப்படி பொறாமை, போட்டி, சதி, ஒருவர் மற்றவரை குறை

சொல்வது மற்றவர்களின் பொருள் பற்றி இழிவாகப் பேசுவது என்பவை சர்வ

சாதாரணமாக ஆகிறதோ, அதேபோல் மதங்களுக்கிடையே அதீத உறவு முறைகள்

பரவுகின்றன. ஒரு மதம் இந்த சந்தை கலாச்சாரத்தை கண்டு பிடித்தால், மற்ற

மதங்களும் அதையே செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. ஒரு துளி விஷம்

கலந்தால் எப்படி ஒரு குடம் பாலும் விஷமாகிறதோ, அதுபோல ஒரு மதம் சந்தை

கலாச்சாரத்தை கடைபிடித்தால், அந்த விஷம் எல்லா மதங்களுக்கும் பரவுகிறது.



பின்னர்,

வியாபாரிகள் எப்படி பிறருடைய வாடிக்கைக்காரர்களைத் தம்மிடம் இழுப்பது

என்பது பற்றியே சிந்தித்து, அதற்கான விதிமுறைகளை, விளம்பரங்களை

கையாள்கிறார்களோ அதேபோல் மத ஸ்தாபனங்கள் தங்களுடைய மதத்திற்கு மக்களை

ஈர்க்கவும், வந்தவர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், என்ன வேண்டுமானாலும்

செய்யலாம் என்றும் - அதற்காக எது செய்தாலும் அது தர்மமே என்றும் - அந்த

வியாபார முறைகளை எல்லாம் மதத்தின் தார்மீக முறைகளாக அங்கீகரித்து

அனுசரிக்கின்றனர்..

.இதனால்தான் மதங்கள் வியாபாரம் போல சந்தை

கலாசாரத்திற்கு ஆளாகின்றன. விளைவு மதமாற்றம். மதம் (அல்லது கடவுளே கூட)

வியாபார பொருளாக ஆகிவிடுகின்றது. அதாவது மதத்தைவிட மதமாற்றம்

முக்கியமாகிவிடுகின்றது. மதத்தின் அடிப்படை நம்பிக்கைகளைவிட, அதனால்

ஏற்படவேண்டிய குணங்களை விட, ஏன் ஆன்மீகத்தின் வளர்ச்சியைவிட, நம் மதத்தில்

எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது, அதாவது ஆன்மீகத்தைவிட எத்தனை தலைகள்

என்கிற எண்ணிக்கைதான் முக்கியமாகி விடுகிறது.



மற்ற மதங்களைப்

பற்றித் தவறான, தாழ்வான எண்ணம் இல்லாமல், அப்படிப்பட்ட எண்ணங்களைத்

தன்னுடைய அமைப்பைச் சார்ந்தரவர்கள் மனதில் உருவாக்காமல், மந்தையாகவோ

அல்லது மற்ற பெரிய அளவிலோ மதம் மாற்றுவது என்பது இயலாத காரியம். அதாவது

எல்லா மதங்களும் சமமே என்று நினைக்கும் எந்த மதமும், மதம் மாற்றுதலில்

ஈடுபடாது. என்னுடைய மதம் உயர்ந்த மதம் என்று நினைப்பது தவறல்ல. ஆனால்

மற்றவர்கள் மதம் காட்டுமிராண்டு மதம், அதை எப்படியாவது தீர்த்துக் கட்ட

வேண்டும் என்று நினைப்பதிலேதான் தீவிரவாதம் வளருகிறது; வன்முறை பிறக்கிறது.



மேலும்,

பிற மதங்களிலிருந்து எப்படி ஆள் பிடிப்பது, அவர்களை எப்படித் தன்

மதத்திற்குக் கொண்டுவருவது என்பன போன்ற நடவடிக்கையெல்லாம், மதத்தை

வியாபாரமாக்குவது மட்டுமல்லாமல், அரசியலாக்கவும் செய்கிறது! ஆள்

சேர்பதற்கு அரசியல் கட்சிகள் என்ன செய்கின்ற்னவோ, அதையே மதங்களும்

செய்யவேண்டி வருகிறது. இப்படித்தான் தெய்வங்கள், மார்க்கெட்டிற்கு,

சந்தைக்கு இழுக்கப்படுகிறார்கள். இதைத்தான் தன் சட்டத்திற்கு ஆதரவாகப்

பேசும்போது ஜெயலலிதாவும் குறிப்பிட்டிருக்கிறார்.



மதம் மாறுவது தவறு!



எப்படியாவது

மற்றவரை மதம் மாற்றிவிடவேண்டும் என்கிறா வெறி ஒரு பக்கம் இருக்க மதம்

மாறுவது, மதம் மாற்றுவது பற்றி ஹிந்து தர்மத்தின் நிலை என்ன? கிறிஸ்துவ

மதத்திற்கும், ஹிந்து தர்மம் அது சார்ந்த மற்ற மதங்களுக்கும் எதிர்மாறான

நிலைகள். ஹிந்து மதத்தின் புராதனமான நிலையை சிருங்கேரி சங்கராச்சாரியராக

இருந்த சந்திரசேகர பாரதி (இப்போதைய மகா சன்னிதானத்தின் குருவின் குரு)

அவர்களுக்கும், கிறிஸ்துவரான ஒரு வெள்ளைக்காரருக்கும் நடந்த சம்பாஷணை

மூலம் அறியலாம்.



அந்த கிறிஸ்துவர், தான் ஹிந்துவாக மாறவேண்டும்

என்று விரும்பி சங்கராச்சாரியை வழிகேட்டபோது, சந்திரசேகர பாரதி கூறியது

(சுருக்கமாக) இதுதான். "நீங்கள் உங்கள் மதத்திலிருந்து மாறவேண்டும் என்று

நினைப்பதே தவறு. உங்கள் மதத்திலிருந்து கொண்டே, அந்த நம்பிக்கையைப்

பின்பற்றியே, ஹிந்து மதத்தின் மூலமாக எந்த நிலையை அடையவேண்டும் என்று

நினைக்கிறீர்களோ அதை அடைய முடியும்" என்று கூறி, அவரை கிறிஸ்துவராகவே

இருக்கும்படி வேண்டினார் சங்கராச்சாரியார். அதாவது மதம் மாறுவதே தவறு

என்று நினைக்கும் ஒரு மதம், அதில் மதமாற்றம் என்னும் பேச்சுக்கே இடமில்லை;

ஆனால் மறுபுறமோ மதமாற்றத்தையே கடமையாக்கிக் கொண்டுள்ள ஒரு மதம்.

இதனால்தான் ஹிந்து ஸ்தாபனங்கள் கட்டாய மதமாற்றத் தடையை வரவேற்கின்றன;

கிறிஸ்துவ ஸ்தாபனங்கள் எதிர்க்கின்றன.



இப்போது ஹிந்துவாக மதம்

மாறுவது என்பதெல்லாம் ஹிந்து ஸ்தானங்கள் தற்காப்பு நடவடிக்கையாகச்

செய்கின்றனவே தவிர, மற்ற மதத்தை அங்கீகரிக்கும் எந்த ம்தமும், மற்ற மதத்தை

மதிக்கும் எந்த மதமும், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடவே முடியாது.

மதமாற்றுவதை மத நம்பிக்கையாகக் கொண்டால் அது மதவெறியாகிறது. கிறிஸ்துவ மத

ஸ்தானங்களுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் நிலை இதுதான்..
.

Tuesday, September 29, 2009

பகவத் கீதை - அத்தியாயம் 1 - 18



பகவத் கீதை - அத்தியாயம் 1

அர்ஜூன விஷாத யோகம்

திருதராஷ்டிரர் அமைச்சர் சஞ்சயனிடம் கூறினார் : சஞ்சயா, அறத்துக்குப் பெயர் பெற்ற குரு நிலத்தில் போர் புரியத் திரண்டிருந்த என் மக்களும் பாண்டு புத்திரர்களும் என்ன செய்கிறார்கள்?

சஞ்சயன் : பாண்டுவின் சேனையைப் பார்த்தவாறு, துரியோதனன் தன் ஆசாரியரிடம் கூறுகிறான்.

குருவே, உங்கள் சீடன் துருபத குமாரனால் நன்றாக அணிவகுக்கப்பட்டுள்ள பாண்டவ சேனையைப் பாருங்கள்.

பீமனுக்கும் அர்ஜூனனுக்கும் சமமான வீரர்கள் அங்கு பலர் உள்ளனர். யுயுதானன், விராடன், துருபதன் போன்ற மஹாரதர்களும் உள்ளனர்.

த்ருஷ்டகேது, சேகிதானன், காசிராஜன், புருஜித், குந்திபோஜன், ஷைப்யன் போன்ற பலவான்களும், யுதாமன்யும், உத்தமவ்ஜன் மற்றும் திரவுபதி, சுபத்ரையின் புதல்வர்கள் உள்ளனர்.

சிறந்தவரே, இனி நமது சேனைத் தலைவர்களை உமக்குத் தெரியப்படுத்துகிறேன். எப்போதும் வெற்றி வீரரான நீர், பீஷ்மர், கர்ணன், கிருபர், அஸ்வத்தாமன், விகர்ணன், பூரிசிரவஸ் மற்றும் எனக்காக பிராண தியாகம் செய்யக்கூடிய - வல்லமை வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர். பீஷ்மர் தலைமை ஏற்றுள்ள நமது படைபலம் அளவிட இயலாதது. ஆனால் பீமனின் படையோ சிறியது.

முக்கியமான போர் முனைகளிலிருந்து நீங்கள் முதியவரான பீஷ்மருக்கு பாதுகாப்பு கொடுங்கள்.

பின்னர் குருவம்சத்து வீரரான பிதாமஹர் பீஷ்மர் தமது சங்கை, சிம்ம கர்ஜனை போல் முழங்கி துரியோதனனை மகிழ்வித்தார். தொடர்ந்து சங்குகள், குழல்கள், பறைகள், முரசுகள், கொம்புகள் ஒரே சமயத்தில் முழங்கின.

மறுபுறத்தில், வெண்குதிரைகள் கொண்ட தேரில் இருந்தபடி பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் அர்ஜூனனும் தமது தெய்வீகமான சங்குகளை முழங்கினர்.

கிருஷ்ணர் பாஞ்சஜன்யம் எனும் சங்கையும், அர்ஜூனன் தேவதத்தம் எனும் சங்கையும், சாகச வீரனான பீமன் பெளண்ட்ரம் எனும் சங்கையும் முழங்கினர். யுதிஷ்டிரர் அனந்த விஜயம் எனும் சங்கையும், நகுலனும் சகாதேவனும் ஸூகோஷம், புஷ்பகம் எனும் சங்குகளையும் மற்றும் காசிராஜன், சிகண்டி, த்ருஷ்டத்யும்னன், விராடன், ஸாத்யகி, துருபதன், திரவுபதியின் புதல்வர்கள், சுபத்ரையின் புதல்வன் அபிமன்யு போன்றோரும் தமது சங்குகளை முழங்கினர்.

சங்கொலிகளால் பூமியும் வானமும் நடுங்கின. திருதராஷ்டிரனின் மகன்களது இதயங்கள் நொறுங்கினது போலாயின.

திருதராஷ்டிர மன்னனிடம் அமைச்சர் சஞ்சயன் கூறினான். : மன்னா, ஹனுமன் கொடி பறக்கின்ற ரதத்தில் இருந்த அர்ஜூனன் உமது படைகளை நோக்கி வில்லேந்தியபடி கிருஷ்ணரிடம் கூறினான்.

அச்யுதா, எவருடன் நான் போரிட வேண்டும் என்பதைக் காண்பதற்கேதுவாக என்னை படையிடையே ரதத்துடன் நிறுத்துவீராக. துர்மதியனான துரியோதனனை மகிழ்விக்கும்பாங்கில் போருக்கு வந்திருப்போரை நான் காண வேண்டும்.

இதைத் தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணர் தமது சிறந்த ரதத்தினை சேனைகளின் நடுவே நிறுத்தினார். பீஷ்மர், துரோணர் மற்றும் சேனைத் தலைவர்கள் முன்னிலையில் "பார்த்தா, கூடியிருக்கும் குருவம்சத்தினரைப் பார்" என்று கூறினார்.

சேனைகள் நடுவே நின்ற அர்ஜூனன், எதிரணியில் தாய் - தந்தை, பாட்டனார், குருமார், சகோதரர், புத்திரர், பேரன்மார் வழியிலான உறவினர்களையும், தோழர்களையும் கண்டு அதிர்ந்தான். பின்னர் இரக்கத்துடன் கூறினான்.

அன்பிற்குரிய கிருஷ்ணா, போரிடும் எண்ணத்துடன் இங்கு கூடியிருக்கும் உறவினர்களையும், நண்பர்களையும் கண்டு என் உடல் நடுங்குகிறது. வாய் உலர்கிறது. ரோமம் சிலிர்க்கிறது, சருமம் எரிகின்றது, காண்டீபம் நழுவுகின்றது. இனியும் என்னால் இங்கு நிற்க முடியாது. குழப்பத்தால் என்னை மறக்கின்றேன். கேசியை அழித்தவரே, கெட்ட சகுனங்களைக் காண்கின்றேன்.

கோவிந்தா, உறவினரை அழிப்பதால் எனக்கென்ன லாபம்? அப்படியொரு வெற்றியையோ, அரசையோ, இன்பத்தையோ நான் விரும்பவில்லை.

அரசும், சுகவாழ்வு அடைவதற்கும், யாருக்காக வாழவும் விரும்புவோமோ அவர்களையெல்லாம் கொன்றுவிட்டு சுகமாயிருக்க முடியுமா? மூவுலகும் கிடைத்தாலும் நான் இவர்களை இழக்க மாட்டேன். நான் கொல்லப்பட்டாலும் இவர்களைக் கொல்ல மாட்டேன். அல்ப பூமியைப் பெற நான் இதைச் செய்வேனா?

ஜனார்த்தனா, இந்த ஆக்கிரமிப்பாளர்களைக் கொல்வதால் நமக்கு பாபம்தான் வரும். திருமகள் கணவா, உறவுகளை அழித்துவிட்டு எப்படி மகிழ்வாய் இருக்க முடியும்?

பேராசையினால் கலகம், குலநாசம் இவைகளைச் செய்வதில் இவர்கள் பாபத்தைக் காணாவிடிலும் நாம் ஏன் பாபச்செயல்களில் ஈடுபடவேண்டும்?

குலம் அழிவதால் குலதர்மம் கெடும். இதனால் மீந்திருப்பவர்களும் அறமற்ற செயல்களைச் செய்வார்கள். குலத்தை அதர்மம் சூழ்ந்தால் குலப்பெண்கள் கெட்டுப்போய் தேவையற்ற சந்ததிகள் (வர்ண ஸங்கிரஹம்) உருவாகும். இவர்களுக்கு நரகமே கிட்டும். இத்தகைய குலங்களில், இறந்து போன முன்னோருக்கான பிண்ட காரியங்கள் சரிவர நடப்பதில்லை.

இதனால் நிலையான ஜாதி தர்மங்களும், குலதர்மங்களும் நிலை தடுமாறுகின்றன.

குலதர்மம் கெட்ட மனிதர்களுக்கு நரகமே கிடைக்கும் என நான் கேள்விப்பட்டுள்ளேன். ஐயகோ! அரசபோக ஆவலால் பாபம் புரிவதா?

திருதராஷ்டிர மக்களுடன் நான் போர் புரிவதைவிட, எதிர்ப்பின்றி அவர்களால் கொல்லப்படுவதையே சிறந்ததாக நினைக்கிறேன்.

சஞ்சயன் : இவ்வாறு கூறிய அர்ஜூனன், வில்-அம்பினை கீழே நழுவவிட்டபடி, தொங்கிய முகத்துடன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.

அத்தியாயம் 2 >>
 ====++++====
 பகவத் கீதை - அத்தியாயம் 2

ஸாங்க்ய யோகம்


கவலையும், கண்ணீருமாய் கலக்கத்துடன் அமர்ந்துவிட்ட அர்ஜூனனைப் பார்த்து மதுசூதனர் கூறினார்.

அர்ஜூனா, இந்த சிக்கலான நேரத்தில் இக்களங்கம் எங்கிருந்து உனக்கு வந்தது; பண்புடையவனுக்கு இது தகாதது; மேலுலகுக்கும் வழிகாட்டாதது; இகவாழ்விலோ இழிவைத் தருவது. இது போன்ற தளர்ச்சிக்கு இடம் தராதெ. இது உனக்கு ஏற்றதல்ல. இதய பலவீனத்தை விட்டுவிட்டு எழுந்து நில்.

அர்ஜூனன் : மதுசூதனா, எனது வணக்கத்திற்குரிய பீஷ்ம, துரோணர்களை நான் எப்படி எதிர்ப்பேன். தனது ஆசிரியனைக் கொன்று வாழ்வதை விட பிச்சையேற்பதே மேல். அவர்கள் பேராசைப்பட்டாலும் பெரியோர்களே. அவர்கள் ரத்தம் சிந்திய நிலத்தை நான் அனுபவிப்பதா? யார் வெல்வார். எது சிறந்தது என்பதை நாமறியோம். யாரை இழந்தால் நாம் வாழ விரும்பமாட்டோமோ அவர்களல்லவா எதிரில் நிற்கின்றனர்.

கடமையைப் பற்றி நான் குழப்பமடைந்து பலவீனத்தால் எனது இயல்புகளை இழந்துள்ளேன். எது நல்லது என்பதை நீரே தெளிவுபடுத்தும். உம் சீடன் நான். அருள் கூர்ந்து அறிவுரை தாரும். வளமான பூமி, விரோதியற்ற நாடு, விண்ணுலக வாழ்வு என எனக்கு எது கிடைத்தாலும் என்னை வாட்டுகின்ற இத்துன்பங்களைப் போக்குவதற்கான வழி உம்மைத்தவிர வேறெங்கும் கிடைக்காது.

சஞ்சயன்: வீரனான அர்ஜூனன், குழப்பத்துடன் "கோவிந்தா, நான் போரிடேன்" என்று கூறி அமர்ந்தான்.

துயரத்துடனிருந்த அர்ஜூனனைப் பார்த்து புன்சிரிப்புடன் பகவான் கூறினார் : அறிவாளியைப் போல் பேசும் நீ, கவலைப்பட வேண்டாததற்காக கவலைப்படுகிறாய். அறிஞன் இருப்பவருகாகவோ, இறப்பவருக்காகவோ வருந்துவதில்லை. நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாதிருந்ததும் இல்லை, இல்லாமலிருக்கப் போவதுமில்லை.

உடலில் உயிராயுள்ள ஆன்மா, பாலகன் - இளைஞன் - வயோதிகன் என உடலை மாற்றிக் கொண்டிருப்பது போல இறப்பின் போது வேருடலுக்கு மாறிக்கொள்கிறது. தன்னை (ஆத்மாவை) அறிந்தவன் இதற்காகத் திகைப்பதில்லை.

கோடையும் குளிரும் பருவ காலத்திற்கேற்ப நிலையற்று மாறுவது போல, இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும் புலனுகர்வாலேயே ஏற்படுகின்றன. இதில் பாதிப்படையாமல் பொறுத்துக் கொள்ளக் கற்றுக் கொள்வாயாக.

சிறந்தவனே, இன்ப துன்பங்களினால் பாதிப்படையாமல் தன்னிலை மாறாதிருப்பவனே விடுதலைக்குத் தகுதி பெற்றவனாவான்.

நிலையானது, நிலையற்றது இந்த இரண்டிலும் உண்மையை அறிந்தவர்களின் தீர்வு நிலையற்றதற்கு நீடிப்பு, நிலைத்தவைக்கு முடிவில்லை என்பதாகும்.

உடல் முழுவதும் அழிவற்ற ஒன்று (ஆன்மா) பரவி இருக்கின்றது. அதனைக் கொல்வதற்கு யாருமில்லை. அது அளவிட இயலாதது. ஆதலால் பரதகுலத் தோன்றலே, போரிடுவாயாக. ஆன்மா அழிவதுமில்லை, அழிப்பதுமில்லை. இதை அறிவாளிகள் அறிவார்கள். ஆன்மா ஒருபோதும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. முன்பு உண்டாகாமல் பின்பு உண்டாகிறதுமில்லை. அது பிறப்பற்றது, நித்தியமானது, சாசுவதமானது, புராதனமானது, உடல் அழியும்போது ஆன்மா அழிவதில்லை.

ஆன்மாவை அழிவற்றதாக, பிறப்பற்றதாக, மாறாததாக அறிந்திருப்பவன் யாரையும் கொல்வதுமில்லைம் கொல்லச்செய்வதுமில்லை.

நைந்து போன ஆடைகளை புறக்கணித்து, புது ஆடைகளை ஏற்பதுபோல, ஆன்மாவானது உபயோகமற்ற உடலைப் புறக்கணித்து, புதிய உடலை ஏற்கின்றது. அத்தகு தனிப்பட்ட ஆன்மாவை, ஆயுதம் பிளக்காது, நெருப்பு எரிக்காது, நீரும் நனைக்காது, காற்று உலர்த்தாது. எங்கும் இருப்பது, என்றுமிருப்பது, அசையாதது, மாறாதது, மாற்றமுடியாதது, கண்ணுக்கெட்டாதது, சிந்தைக்கு அப்பாற்பட்டது. இவைகளை அறிந்து நீ உடலுக்காக வருந்தாதே.

மேலும் ஆன்மா எப்போதுமே பிறந்து இறந்து கொண்டிருப்பதாகவே நீ எண்ணினாலும் அதில் துக்கப்பட என்ன இருக்கிறது? பிறப்பதெல்லாம் இறப்பது உறுதி என்றால் இறப்பதெல்லாம் பிறப்பதும் உறுதி அல்லவா? தவிர்க்க முடியாத இவ்விஷயத்தில் நீ கடமை செய்யக் கலங்கலாமா?

தோன்றுபவை எல்லாமெ முதலில் தோன்றாதிருந்து, இடையில் தோன்றி, இறுதியில் தோன்றா நிலையை அடகின்றன. இதில் கவலைப்பட என்ன இருக்கிறது.

ஆன்மாவைப் பற்றி சிலர் வியப்பாகப் பார்க்கிறார்கள், சிலர் வியப்பாக பேசுகிறார்கள், சிலர் வியப்புடன் கேட்கிறார்கள். ஆனாலும் ஆன்ம உணர்வுடன் யாரும் வாழ்வதில்லை, அதனை அறியாதவராகவே இருக்கின்றனர்.

உடலின் வாழும் அவன் (ஆன்மா) நித்தியன், அழிக்கப்பட முடியாதவன். எனவே பிறப்புடைய எந்த ஆன்மாவுக்காகவும் நீ வருந்தத் தேவையில்லை. உனக்கான (சத்ரியன்) தர்மத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தாலும் நீ வருந்தத் தேவையில்லை. நீதிக்காகப் போரிடுவதைக் காட்டிலும் ஒரு சத்திரியனுக்கு வேறு கடமைகள் உண்டோ? தயங்காதே. வீரனுக்கு வலியவரும் போர்வாய்ப்புகள் மேலுலகின் கதவுகளைத் திறக்கின்றன. அதனால் அரசர்கள் மகிழ்கின்றனர். இந்த தர்ம யுத்தத்தை நீ செய்யாவிட்டால், அதர்மம் புரிவதுடன், உனது பெயரையும், புகழையும் இழந்து பாபமடைவாய். உலகம் உன்னை அவமதிக்கும். மதிக்கப்பட்டவனுக்கு வரும் அவமானம் மரணத்தைக் காட்டிலும் கொடியது.

இன்ப துன்பங்கள், லாப நஷ்டங்கள், வெற்றி தோல்விகள் இவற்றைக் கருதாமல் போரிடு, இதனால் பாபம் ஏற்படாது.

ஸாங்க்ய நெறிகளைக் (ஆன்மாவின் இயல்புகள்) கூறினேன். இனி பலன்பாராமல் செயல்படும் யோக முறைகளைக் கூறுகிறேன். இத்தகைய அறிவுடன் செயல்பட்டால், பந்தப்படாமல், செயல்களின் விளைவுகளிலிருந்து விடுபடுவாய்.

இம்முயற்சியில் குறைவோ, இழப்போ இல்லை. சிறு முன்னேற்றம் கூட மிகப்பெரிய பயத்திலிருந்து உன்னைக் காக்கும்.

இவ்வழியில் உள்ளோர் உறுதியான நோக்கமுடையவர். இவர்களுக்கு இலட்சியம் ஒன்றே. உறுதியற்றவர்களுக்கோ அது பல கிளைகளை உடையதாய் இருக்கிறது.

மேல் கிரஹங்களுக்கு செல்வது, நற்பிறவி அடைவது, ஆற்றல்கள் பெறுவது போன்ற வேதங்களின் பலன் தரும் பதங்களால் குறைமதியாளர்கள் கவரப்படுகிறார்கள். இதைவிட உயர்ந்தது எதுவுமில்லை என்று அத்தகைய புலனுகர்வாளர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய வார்த்தைகளில் மயங்கி போகத்திலும், செல்வத்திலும் ஈடுபட்டவர்களின் மனதில், இறைவன் மீது நிலையான உறுதி ஏற்படுவதில்லை.

வேதங்கள் முக்குணங்களுக்கு உட்பட்டவை (ஸத்வம் - சாந்தம், ரஜோ - தீவிரம், தமோ- மந்தம்). நீ அவைகளுக்கு அப்பாற்படுவாயாக. எல்லா இரட்டைகளிலிருந்தும், அடைதல் - காத்தல் போன்ற கவலைகளில் இருந்தும் விடுபட்டு தன்னுணர்வில் நிலைபெறுவாயாக.

சிறு கிணற்றினால் அடையப்படும் எல்லாத் தேவைகளும் பெரும் நீர்த்தேக்கத்தினால் உடனேயே நிறைவேற்றப்படும், அதுபோல வேதங்களின் எல்லா நோக்கங்களும் தன்னை அறிந்தவனால் அடையப்பட்டதாகும்.

விதிக்கப்பட்ட கடமையைச் செய்வதில் மட்டுமே உனக்கு அதிகாரம் இருக்கிறது. செயலின் பலனில் அதிகாரம் இல்லை. இருப்பதாகவும் எண்ணாதே. செயலற்ற நிலையையும் விரும்பாதே. வெற்றி, தோல்விகளை எண்ணாமல் நடுநிலையுடன் செயல்படு. இத்தகைய மனநிலையே யோகம் எனப்படும்.

கஞ்சர்களே கர்மபலனைக் கருதியபட் இருப்பர். புலனுக்கான பலனோக்கச் செயல்களிலிருந்து விடுபட, புத்தியுடன் பகவானைச் சரணடைந்து பக்தியுடன் செயல்படுவாயாக. இவ்வாறு செயல்படுபவன் சிறந்தவன். அவன் இவ்வாழ்விலேயே நல்ல, தீய விளைவுகளிலிருந்து விடுபடுகிறான்.

இறைவனுக்குத் தொண்டாற்றும் அவன், கர்ம பலன்களில் சிக்காமல் ஜனன மரண சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதுடன், துன்பங்களுக்கு அப்பாற்பட்ட நல்ல நிலையை அடைகிறான்.

மயக்க நிலையை அறிவால் நீ கடந்து விட்டால், கேட்டவை - கேட்பவை இவற்றில் வைராக்கியம் பெறுவாய். பலன் தரும் விஷயங்கள் குறித்த வேதக்கூற்றுகளில் மனம் கவரப்படாதபோது - தன்னுணர்வில் நீ திளைத்திருக்கும்போது நீ உன்னத உணர்வில் இருப்பவனாவாய்.

அர்ஜூனன் : உன்னத உணர்விலிருப்பவனின் (ஸ்தித பிரக்ஞன்) அறிகுறிகள், அவனது பேச்சு, நடவடிக்கைகள் யாவை?

பகவான் : பார்த்தனே, ஆசைகளை அகற்றி, பிற ஒன்றினால் இன்றி தனக்குள்ளேயே திருப்தி கொண்டிருப்பவன் ஸ்தித பிரக்ஞன் (உன்னத உணர்வுடையவன் அல்லது உணர்வு நிலைபெற்றவன்) ஆவான்.

இன்ப, துன்பங்களால் பாதிக்கப்படாதவனும், பற்று, பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டவனும், மனம் நிலைபெற்ற முனிவனாவான். அவன் நன்மைகளால் களிப்புறாமல், தீமைகளால் கவலைப்படாமல் பற்றற்று முழு அறிவில் நிற்பவனாவான்.

ஆமை தன் அவயங்களை தனக்குள்ளே இழுத்து வைத்திருப்பது போல, புலன்களை விஷயங்களிலிருந்து விலக்கி வைத்திருக்கிறான். அவனுக்கு விஷய அனுபவங்கள் இல்லாவிட்டாலும், அவற்றின் மீதான சுவை இருக்கத்தான் செய்யும். ஆனால் (பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே) பகவான் மீது அவனுக்கு சுவை ஏற்பட்டுவிட்டால் பிற சுவைகள் எல்லாம் மங்கி விடுகின்றன.

புலனடக்கம் பயிலும் நல்லறிஞனுடைய மனதையும் கூட சக்தி வாய்ந்த புலன்கள் இழுத்துச் சென்றுவிடுகின்றன. அவைகளை அடக்கி என்னில் மனதை நிறுத்துபவனின் அறிவே நிலைபெற்ற அறிவாகும்.

புலன் நுகர்வுக்கான பொருட்களை எண்ணிக்கொண்டே இருப்பதால் ஒருவனுக்கு அப்பொருளில் பற்று ஏற்படுகிறது. பற்றிலிருந்து காமமும், காமத்திலிருந்து சினமும் வளர்கின்றன. சினத்திலிருந்து மயக்கமும், மயக்கத்தால் நினைவு தடுமாற்றமும் உண்டாகின்றன. நினைவு தடுமாறுவதால் அறிவை இழந்து பிறப்பு - இறப்பு கொண்ட ஜடச்சூழலில் இழிகிறான். (பற்று - ஒரு பொருளின் மீதான தொடர்ந்த எண்ணம். காமம் - எண்ணிய பொருளை அடையும் விருப்பம். சினம் - விருப்பம் நிறைவெறத் தடை ஏற்படும்போது வருவது.)

விடுபடும் பொருட்டு புலனடக்கம் கொண்டிருப்பவனோ இறைவனின் கருணைக்குப் பாத்திரமாகி விருப்பு, வெறுப்பு எனும் இருமைகளிலிருந்து விடுபடுகிறான். இவ்வாறு மனம் நிலைபெற்றவனுக்கு உலகத் துன்பங்களால் பாதிப்பில்லை. அவனது அறிவு ஸ்திரமாகிறது.

உன்னத உணர்வு பெறாதவனுக்கு கட்டுப்பட்ட மனமோ, நிலையான புத்தியோ இருக்காது. இவையில்லையேல் அமைதிக்கும் வழியில்லை. அமைதி இல்லையேல் ஆனந்தம் இல்லை.

படகானது காற்றால் இஷ்டம் போல அடித்துச் செல்லப்படுவது போல, மனம்போன ஒரே ஒரு புலன் கூட மனிதனின் அறிவை இழுத்துச் சென்றுவிடும்.

எனவே பலம் வாய்ந்தவனே, விஷயங்களிலிருன்து முற்றிலும் விலகி கட்டுபாட்டுடன் இருப்பவன் நிலைத்த அறிவுடையவனாவான். பிறருக்கு இரவாய் இருப்பதே அவனுக்குப் பகலாகும். பிறரது விழிப்பு நேரமே அவனுக்கு இரவாகும்.

நதிகள் பெருக்கெடுத்து ஆடிஓடி பெரும் ஓசையுடன் வந்தாலும், அவற்றைப் பெரும் கடலானது, அடங்கி அமைதியாய் இருப்பது போல ஆசைப் பெருக்கினால் பாதிக்கப்படாதவனின் மனம் அடங்கி அமைதி காண்கிறது. மாறாக ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பவனின் மனம் அமைதி பெற முடியாமல் தவிக்கின்றது.

புலனிச்சைகளைத் துறந்தவனும், விருப்பமற்றவனும், கர்வம் மற்றும் உரிமை உணர்வுகளிலிருந்து விடுபட்டு இருப்பவனும் மட்டுமே பக்குவமான அமைதியைப் பெற முடியும். இந்த ஆன்மீகமான பாதையை ஒருவன் ஏற்றால் அவனுக்கு என்றுமே குழப்பமில்லை. கடைசி காலத்தில் கூட தன் (பிரம்ம) உணர்வினால் அவன் இறையரசை அடைகிறான்.





அத்தியாயம் 3 >>

 ====++++====
 
பகவத் கீதை - அத்தியாயம் 3

கர்ம யோகம்


அர்ஜூனன் : ஜனார்த்தனா, கேசவா, பலனை விரும்பும் செயலை விட (கர்மம்), நிலையான அறிவு (ஞானம்) சிறந்ததாயின், கோரமான கொலைத் தொழில் புரிய என்னை ஏன் பலவந்தப்படுத்துகிறீர்? இருவழிகளை ஒன்றுபோல கூறும் உமது பேச்சுக்களால் எனக்கு மயக்கம் ஏற்படுகிறது. எது நன்மையானதோ அதை முடிவாகக் கூறும்.

களங்கமற்றவனே, இறை உணர்வைப் பெற விரும்புவோர் இருவிதமாக உள்ளனர். சிலர் மனக்கற்பனை ஓட்டத்தினாலும், சிலர் இறைவனை இறுதி இலக்காகக்கொண்டு கடமையாற்றியும் அவரை அறிய முயலுகின்றனர். ஆனால் விளைவுகளுக்கு அஞ்சி, விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல் அதிலிருந்து தப்புவதால் மட்டும், விளைவுகளிலிருந்து தப்ப முடியாது. அதேசமயம் துறவினால் மட்டும் பக்குவம் அடைய முடியாது. ஏனெனில் இயல்பான குணங்களுக்கேற்ப ஒவ்வொருவரும் செயல்படுகின்றனர். ஒருகணம் கூட செயல்படாமல் இருப்பது எவருக்கும் இயலாது.

புலன்களை அடக்கி, ஆனால் மனதால் புலன் விஷயங்களை எண்ணிக்கொண்டு இருப்பவன் போலியாவான்.

புலன்களை மனதால் அடக்கி, இறை உணர்வுடன் அவரையடையும்படி, கடமையில் ஈடுபட்டிருப்பவன் நல்லவன் ஆவான்.

செயலற்ற நிலையைவிட, பக்தியுடன் செயல்படுவதே சிறந்தது. ஏனெனில் செயலின்றி உடலைக்கூட பராமரிக்க முடியாது.

ய்க்ஞபதியான விஷ்ணுவுக்கு சமர்ப்பணமாக ஒருவன் செயல்பட வேண்டும். இல்லையேல் அவனது செயல்கள் அவனை பந்தப்படுத்துகின்றன. பகவானது திருப்திக்காக வினையாற்றினால் அவன் விடுபடுவதுடன் பற்றடங்கி வாழலாம்.

படைப்பின் துவக்கத்தில் குலங்கள், தேவர்கள், யாகங்களை ஏற்படுத்தி "யாகங்கள் செய்து பலனடைந்து சுகமாயிருங்கள், யாகங்களால் தேவர்கள் மகிழ்ந்து உங்களை மகிழ்விப்பார்கள். இவ்வாறு ஒருவரை ஒருவர் பேணி நலம் பெறுங்கள்" என இறைவன் கூறினார்.

யாகத்தால் திருப்தி அடையும் அதிகாரிகளான தேவர்கள், மனிதர்களுக்கான வாழ்வுத் தேவைகளை எல்லாம் வழங்குகிறார்கள். இதனால் அவர்களுக்கு பதிலுக்கு படைக்காமல் அனுபவிப்பவன் திருடனாவான்.

யாகத்தில் முதலில் படைக்கப்பட்டதை உண்பதால் பக்தர்கள் பாபங்களிலிருந்து விடுபடுகிறார்கள். ஆனால் தனது புலன் இன்பத்திற்காக உணவு தயாரிப்பவர்களோ பாபத்தையே உண்கின்றார்கள்.

விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வது யாகமாகும். யாகத்தால் மழையும், மழையினால் தானியமும், தானியத்தால் ஜீவர்களும் வாழ்கின்றனர். ஒருவருக்கான கடமைகள் இறைவனிடமிருந்து தோன்றிய வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன. யாகங்களில் இறைவன் உறைகிறார்.

இத்தகைய யாகச்சக்கரத்தினை கடைப்பிடிக்காதவன் பாபி ஆவான். புலனின்பமே கதியாய் இருக்கும் அவனது வாழ்வு வீணாகும்.

தனக்குள் மகிழ்ந்து - திருப்தி கொண்டு பக்குவமாய் இருப்பவனுக்கு கடமைகள் ஏதுமில்லை. தன்னை உணர்ந்தவனுக்கு எந்தக் கடமையுமில்லை. செயலினால் அடைய வேண்டிய நோக்கமும் அவனுக்கில்லை. இறைவனைத் தவிர எவரையும் அவன் சார்ந்திருக்க வேண்டியதில்லை.

ஆதலால் பலனில் பற்றின்றி, கடமைக்காக செயல்படுவாயாக. இதனால் மேன்மை அடையலாம். ஜனகர் போன்ற மன்னர்கள் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்தே பக்குவமடைந்தனர். எனவே உலகுக்கு நல்வழி காட்டவாவது செயல்படுவாயாக.

வழிகாட்டும் பொறுப்பில் இருப்பவர்கள் செய்வதையே மக்கள் பின்பற்றுகின்றனர். அவர்களின் செயல்களையே உலகம் உதாரணமாகக் கொள்கிறது.

பார்த்தனே, மூவுலகிலும் எனக்கென்று கடமைகள் ஏதும் கிடையாது. அடைய வேண்டியதும் ஏதுமில்லை. இருப்பினும் நான் செயல்படுகிறேன். ஏனெனில் நான் செயல்படாவிடில் மனிதரெல்லாம் என்னையே பின்பற்றி செயல்படாமல் இருந்து விடுவார்கள். நான் செயல்படுவதை நிறுத்தினால் உலகம் அழியும். தேவையற்ற இதற்கு நானே காரணமாகி ஜீவர்களின் அமைதியைக் கெடுத்தவனாவேன்.

பலனில் பற்றுடன் பாமரர்கள் செயல்படுவது போல், நல்ல புத்தியுள்ளவன் மக்களை வழி நடத்தும் பாங்கில் பற்றின்றி கடமையாற்ற வேண்டும். பாமரர்களுக்கு அவன் புத்திக் குழப்பத்தை ஏற்படுத்தாமலும், செயலிலிருந்து விடுபடத் தூண்டாமலும், பக்தியுடன் செயலாற்றத் தூண்ட வேண்டும்.

குணங்களால் மயங்கிய நிலையில் ஒருவன், இயற்கையால் நடைபெறும் செயல்களுக்குத் தன்னையே காரணமாகக் கருதுகிறான்.

பூரண உண்மையை அறிந்தவர்கள் தன்னை புலன்களிலோ, புலனுகர்ச்சியிலோ ஈடுபடுத்திக் கொள்வதில்லை. பக்தியுடன் செயல்படல், பலன் விரும்பிச் செயல்படல் இவ்விரண்டின் வித்தியாசத்தை அறிந்துள்ளனர். குணங்களால் மங்கியிருக்கும் அறியாதவர்களே, செயல்களில் தீவிர பற்றுக் கொள்வர். அது கீழ்த்தரமாயினும் அறிவுடையவர்கள் அவர்களைக் கலங்கடிக்கக் கூடாது.

எனவே எனக்கு அர்ப்பணமாக - என்னில் மனதை நிறுத்தி, பலன் கருதாமல், பொய் அஹங்காரத்தையும், ஊக்கமின்மையையும் கைவிட்டு போரிடுவாயாக.

இவ்வறிவுரையை பொறாமையின்றி நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பின்பற்றுபவன் எல்லா விளைவுகளில் இருந்தும் விடுபடுகிறான். ஆனால் பொறாமையுடன் இதனை ஏற்காமல் இகழ்ந்து, பின்பற்றாதிருப்பவன் வீணன் ஆகிறான்.

அறிவிற் சிறந்த ஞானியும் கூட தன் இயல்புப்படியே நடக்கிறான். இயல்பினைத் தடுப்பதால் ஆவதென்ன?

இந்திரியங்களுக்கு விருப்பு, வெறுப்பு இருந்தாலும் அவைகளுக்கு வசப்படாமல் இருக்க வேண்டும். ஏனெனில் அவை தன்னுணர்வுப் பாதையில் தடுப்பாக அமைகின்றன.

பர தர்மங்களைச் சிறப்பாய் செய்வதைவிட குறையாயினும் சுயதர்மத்தை செய்வது நல்லது. பிற தர்மம் பயம் தரும். சுயதர்மமோ புரிகையில் அழிவுற்றாலும் நல்லது தான்.

அர்ஜூனன்: விருஷ்ணியே, விருப்பமே இல்லாவிட்டாலும் பாபச் செயல்கள் புரிய ஒருவன் தூண்டப்படுவது எதனால்?

பகவான்: அர்ஜூனா, ரஜோ குணத்தில் உண்டாகி, கோபமாய் உருவெடுக்கும் காமமே பாபமிக்க விரோதியாகும். அது எல்லாவற்றையும் அழிக்கும்.

நெருப்பு புகையாலும், கண்ணாடி தூசியாலும், கரு கருப்பையாலும் மூடப்பட்டிருப்பதைப் போல் ஜீவன் பலதரப்பட்ட காம உணர்வுகளால் மறைக்கப்பட்டிருக்கிறான். ஒருவனது தூய உணர்வானது, என்றுமே திருப்தி அடையாத நெருப்பு போன்ற, நித்திய விரோதியான காமத்தால் சூழப்பட்டுள்ளது.

புலன்கள், மனம், புத்தி இவைகளே ஜீவனின் அறிவை மறைத்து மயக்கும் காமத்தின் இருப்பிடங்கள் ஆகும்.

புலன்களை நெறிப்படுத்தி, அறிவு - அனுபவத்தை அழிக்கும் பாபச்சின்னமான காமத்தினை ஆரம்பத்திலேயே அடக்கி ஒழி.

ஏனெனில் புலன்கள் உடலை விட உயர்ந்தது. மனமோ புலன்களை விட உயர்ந்தது. புத்தி மனத்தை விட உயர்ந்தது. ஆன்மாவோ புத்தியை விட உயர்ந்தது. இவ்வாறாக ஆன்மாவை அறிந்து, அதன் உயர்ந்த இயல்புகளால் காம வடிவான கீழ் இயல்புகளை வெல்வாயாக.

 அத்தியாயம் 4 >>
 ====++++====
 
பகவத் கீதை - அத்தியாயம் 4

ஞான கர்ம சன்யாச யோகம்


பகவான்: அழிவற்ற இந்த யோக முறையை முன்பு சூரிய தேவனுக்கு கூறினேன். அவன் மனுவுக்கும், மனு இக்ஷ்வாகுவுக்கும் இதை உபதேசித்தனர். இவ்வாறு பரம்பரை முறையில் கிரமப்படி வந்துள்ள இச்செய்தியானது புனிதமான மன்னர்களாலும் அறியப்பட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் மறைந்தது போலத் தோன்றுகிறது.

நீ எனக்கு நண்பனும், பக்தனுமாதலால் இறைத்தொடர்பு பற்றிய இவ்விஞ்ஞானம் இன்று உனக்கு என்னால் கூறப்படுகிறது. இதன் ரகசியத்தையும் உன்னால் புரிந்து கொள்ள முடியும்.

அர்ஜூனன்: பிறப்பினால் உமக்கு முந்தையவர் விவஸ்வான், அவருக்கு நீர் எப்படி உபதேசித்தீர்?

பகவான்: பற்பல பிறவிகளை நாம் கடந்துள்ளோம். அவற்றை நாமறிவோம், நீயறியாய். நான் பிறப்பற்றவன். எல்லா உயிர்களுக்கும் இறைவன். இருந்தாலும், திவ்வியமான ஆன்மீக சரீரத்துடன் யுகம்தோறும் தோன்றுகிறேன்.

எப்பொழுதெல்லாம் அறநெறிகளுக்கு தொல்லைகள் ஏற்பட்டு அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, அப்போதெல்லாம் என்னை நான் இவ்வாறு உருவித்துக் கொள்கிறேன். சாதுக்களைக் காக்கவும், கொடியவர்களை ஓய்ப்பதற்காகவும் தர்மத்தை ஸ்தாபிக்கவும் யுகந்தோறும் வருகிறேன்.

எனது திவ்யமான பிறப்பு, செயல்கள் இவற்றின் மேலான தன்மைகளை உள்ளபடி அறிபவன், ஜட உடலை விட்டபின் மீண்டும் இங்கு பிறப்பதில்லை, அவன் என்னை அடைகிறான்.

ஆசை, பயம், சினம் இவற்றை விட்டு என்னிடம் சரணடைந்த பலர், ஞானதவத்தால் தூய்மையடைந்து என்னிடம் நல்ல முறையில் அன்பு கொண்டுள்ளனர். என்னிடம் அவர்கள் சரணடைவதற்கேற்ப நான் பலன் அளிக்கிறேன். எவ்வழியிலும் அவர்கள் என்னையே பின்பற்றுகின்றனர்.

பலனிச்சையால் மனிதர்கள் தேவர்களைப் பூசிக்கின்றனர். இத்தகு செயல்களுக்கு உடனடி விளைவுகளும் அமைகின்றன.

குணங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்ப மனிதரில் நால்வகைப் பிரிவுகள் என்னால் ஏற்படுத்தப்பட்டன. (பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர்). எனினும் மாற்றமில்லாத என்னை, செயலுக்கு அப்பாற்பட்டவன் என்பதை அறிவாயாக.

எச்செயலும் என்னை பாதிப்பதுமில்லை. செயலின் பலனுக்காக நான் ஏங்குவதுமில்லை. இவ்வாறு என்னை அறிபவன் செயலின் விளைவுகளால் கட்டுப்படுவதுமில்லை.

முன்னோர்கள்கூட இவ்விதம் செயல்பட்டு விடுபட்டுள்ளனர். நீயும் அதுபோல மேலான உணர்வுகளுடன் கடமைகளைச் செய்.

செயல்களே ஒருவனை விடுபடுத்துகின்றன. எது செயல், எது செயலற்ற நிலை என்பதைத் தீர்மானிப்பதில் அறிவாளியும் குழம்புகிறான். எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடக் கூடிய அத்தகைய செயல்களைப் பற்றி உனக்கு நான் விளக்குகிறேன்.

சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட செயல்கள் (கர்மா), விலக்கப்பட்ட செயல்கள் (விகர்மா), மற்றும் விளைவற்ற செயல்கள் (அகர்மா - பகவானுக்காக ஆற்றப்படுபவை) உள்ளன. அறிவதற்கு கடினமாயினும், இவற்றை அறிந்தே ஒருவன் செயல்பட வேண்டும்.

செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் காண்பவனே அறிஞன். அவன் செயல்பட்டாலும் விடுபட்டவனாவான்.

புலன் நுகர்வுக்கான நோக்கமின்றி செயல்படுபவன் சிறந்தவன். அவன் தனது பக்குவத்தால் விளைவுகளை எரித்து விடுவதால் அறிஞர்கள் அவனைப் போற்றுகின்றனர்.

செயலின் பலனில் பற்றற்று, சதா திருப்தியுடன் சார்பற்று இருப்பவன், செயல்பட்டாலும் செயலற்றவனே ஆவான்.

அப்படிப்பட்டவனது மனதும் அறிவும் கட்டுப்பட்ட நிலையில் உரிமை உணர்வின்றி குறைந்தபட்சத் தேவைகளுக்காக செயலாற்றுகிறான். அவன் தீய விளைவுகளால் பாதிக்கப்படுவதில்லை.

தானாய்க் கிடைப்பதில் திருப்தி அடைந்தவன், இருமைகளிலிருந்து விடுபட்டவன், பொறாமையற்றவன், வெற்றி - தோல்விகளில் சமமாய் இருப்பவன் - இவன் செயலாற்றினாலும் விளைவுகளால் பந்தப்படுவதில்லை.

பரம புருஷரின் திருப்திக்காக செய்யப்படும் செயல்களுக்கு ஜட விளைவுகள் கிடையாது.

கிருஷ்ண உணர்வில் லயிப்பவன் ஆன்மீக உலகை அடைகிறான். ஏனெனில் அவனது செயல்பாடுகளின் லட்சியமும் அதுதான். அவனால் சமர்ப்பிக்கப்படும் எதுவும் ஆன்மீக இயல்பு கொண்டதாக இருக்கின்றது.

ஆன்மீகிகளில் சிலர் தேவர்களுக்காகவும், சிலர் பரம்பொருளுக்காகவும், சிலர் மனம் எனும் நெருப்பில் புலன்களை அடக்கியும், சிலர் புலனுகர்ச்சிக்கான விஷயங்களை யாக நெருப்பிலிட்டும் யாகங்கள் செய்கின்றனர்.

தன்னுணர்வில் விருப்பம் கொண்ட சிலரோ புலன்களை அடக்கி, அதன் இயக்கங்களையும், பிராணனையும் அடங்கியிருக்கும் மனத்தீயில் யாகம் செய்கின்றனர். சிலர் பொருளாலும், சிலர் விரதம் போன்றவற்றாலும் யாகம் புரிகின்றனர். இன்னும் சிலர் அஷ்டாங்க யோகப் பயிற்சியிலும் ஈடுபடுகின்றனர். மேலும் சிலர் அறிவை இலக்காய்க் கொண்டு வேதம் பயில்கின்றனர்.

லயிப்பிற்காக சிலர் சுவாசக் கட்டுப்பாடுகளை மேற்கொள்கின்றனர். உள்சுவாசத்தில் வெளிசுவாச இயக்கத்தையும், வெளிசுவாசத்தில் உள்சுவாச இயக்கத்தையும் நிறுத்தப் பயின்று அதில் லயிக்கின்றனர். இவர்களில் சிலர் உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வெளிசுவாசத்தை அதிலேயே யாகமாக அர்ப்பணிக்கின்றனர்.

யாகத்தின் போக்கினை அறிந்த இவர்கள் அனைவரும் ஜடக் களங்கங்களிலிருந்து விடுபட்டு, யாக விளைவு எனும் அமிர்தத்தைச் சுவைப்பதால் நித்திய உலகை அடைகிறார்கள்.

குருவம்சத்தவனே, யாகங்களின்றி இவ்வுலகில் யாரும் சுகமாக இருக்க முடியாது. அப்படி இருக்கையில் மறுவுலகைப் பற்றி என்ன சொல்வது? இந்த யாகங்கள் அனைத்தும் வேதங்களால் அங்கீகரிக்கப்பட்டவை. கர்மங்களிலிருந்து தோன்றியவை. இதையறிந்து விடுதலையடைவாயாக.

பரந்தபா, பொருட்களினாலான யாகத்தை விட, ஞான யக்ஞம் சிறந்தது. ஏனெனில் எல்லா கர்ம யக்ஞங்களும் ஞானத்தில் தான் முற்றுப்பெறுகின்றன.

ஆன்மீக குருவுக்குப் பணிந்தும், பணிவிடைகள் புரிந்தும் கேள்விகள் கேள். உண்மையை உணர்ந்த அவர், உனக்கு உண்மை ஞானத்தை உணர்த்துவார்.

அதன்பின் மயக்கம் நீங்கி, எல்லா உயிரினங்களும் என் அங்கமே, அவை என்னுடையவை, என்னில் இருப்பவை என்றறிவாய்.

பெரும் பாபியாக நீ கருதப்பட்டாலும் ஞானப் படகினால், துன்பக்கடலைத் தாண்டுவாய்.

தீச்சுடரானது விறகுகளை சாம்பலாக்குவது போல், ஞானமானது கர்ம பந்தங்களை எரிக்கின்றது. ஞானம் போல் சிறந்ததும், தூயதுமில்லை. அதுவே யோக கனியாகும். இதைப்பெற்றவன் காலப்போக்கில் தன்னுணர்வில் திளைக்கின்றான்.

சிரத்தையுள்ளவன், புலனடக்கத்தாலும், ஞானத்தாலும், பரத்தில் ஆழ்ந்து, ஆன்மீக அமைதியை அடைகிறான். வேதங்களில் நம்பிக்கை இல்லாதவன் நாசமாகிறான், அவனுக்கு இவ்வுலகிலும், எவ்வுலகிலும் இன்பமில்லை.

செயலின் பலனில் இச்சையின்றி இறையருளால் சந்தேகங்கள் போக்கப்பட்டு, தன்னில் நிலைபெற்றவனது செயல்கள் அவனை பந்தப்படுத்துவதில்லை.

எனவே அர்ஜூனா, அறியாமையால் விளைகின்ற சந்தேகங்களை, அறிவெனும் ஆயுதத்தால் அழித்துவிட்டு, யோக கவசம் அணிந்து எழுந்து போரிடு.

 அத்தியாயம் 5 >>
 ====++++====
 
பகவத் கீதை - அத்தியாயம் 5

கிருஷ்ண உணர்வில் செயலாற்றல்


அர்ஜூனன்: கிருஷ்ணா, கர்ம ஸந்நியாசத்தையும் (செயல் துறத்தல்), பிறகு கர்ம யோகத்தையும் (முழு அறிவுடன் பகவானை இலக்காய்க் கொண்டு செயல்படல்) உபதேசிக்கிறீர். இவற்றில் எது சிறந்தது என்பதைக் கூறுவீராக.

பகவான்: இரண்டும் சிறப்பைத் தரும், எனினும், செயலைத் துறத்தலை விட பக்தித் தொண்டில் செயல்படுவதே மேலானது.

செயலின் விளைவில் விருப்பு வெறுப்பற்றவனே நித்யமான துறவியாவான். அவன் இருமைகளிலிருந்தும், பந்தங்களிலிருந்தும் விடுதலை அடைகிறான்.

உலக ஆய்வறிவு (ஸாங்க்யம்), கர்மயோகம் இரண்டும் வெவ்வேறானது என அறிவற்றோர் கூறுகின்றனர். இவற்றில் எதை முழுமையாகப் பின்பற்றினாலும் ஒரே பலனைப் பெறலாம்.

துறவினால் அடையப்படும் பக்குவம், பக்தித் தொண்டினாலும் அடையப்படும். இவ்வகையின் செயலும், துறவும் ஒன்றெனக் காண்பவன் உண்மையை அறிந்தவனாகிறான்.

பகவானுக்காக தொண்டில் ஈடுபடாமல், வெறுமனே செயலை மட்டும் துறப்பவன் இன்ப நிலையை அடைய முடியாது. தத்துவமறிந்தவன் இறைச்செயல்களால் தூயவனாகி, விரைவில் பரத்தை அடைகிறான்.

அத்தகு தூய ஆத்மா தன்னடக்கத்தால் அனைவரிடமும் அன்புள்ளவனாகவும், அன்பு கொள்ளப்பட்டவனாகவும், செயலில் ஈடுபட்டாலும் கட்டுப்படாதவனாகவும் இருக்கிறான்.

உண்மையறிந்தவன் பார்த்தல், கேட்டல், தொடுதல், நுகர்தல், உண்ணல், செல்லல், உறக்கம், சுவாசம் இவற்றில் ஈடுபட்டாலும், தான் ஒன்றும் செய்யவில்லை என்பதை அறிந்துள்ளான். பேசும்போதும், கண்மூடித் திறக்கும்போதும், பெறும்போதும், கழிக்கும் போதும், தான் அவற்றிலிருந்து வேறுபட்டவன் என அறிந்துள்ளான்.

நீரிலிருக்கும் தாமரை இலைகளில் நீர் ஒட்டாதது போல், இறைவனை மையமாகக் கொண்டு செயல்படும் பற்றற்றவனை கர்மவிளைவுகள் பாதிப்ப‌தில்லை.

பற்றைத் துறந்து மனம், புத்தி, உடல் மற்றும் புலன்களால் கூட தங்களைத் தூய்மைப்படுத்தும் நோக்கத்துடன் யோகிகள் செயல்படுகின்றனர்.

எல்லாச் செயல்களின் விளைவுகளையும் எனக்கே அர்ப்பணம் செய்த, உறுதியான பக்தியுடைய ஆன்மா தூய அமைதியை அடைகிறான். அவ்வாறு செய்யாதவன் கர்ம பந்தங்களில் சிக்குகிறான்.

உடல் கொண்ட ஆன்மா, தன் இயற்கையைக் கட்டுப்படுத்தி மனதால் செயலைத் துறக்கையில், ஒன்பது கதவுகளையுடைய நகரில் அவன் செய்யாமலும், செயலுக்குக் காரணமில்லாமலும் இன்பமாய் வாழ்கிறான். உடல் நகரின் தலைவனான ஆன்மா செயல்களையோ, செயற்பலனையோ உண்டாக்குவதுமில்லை; யாரையும் செயல்படத் தூண்டுவதுமில்லை.

யாருடைய பாப, புண்ணியங்களுக்கும் பரமாத்மா பொறுப்பல்ல. அஞ்ஞானத்தினாலேயே ஆன்மாக்கள் மயங்குகின்றனர். எல்லாம் கதிரவனால் வெளிப்படுத்தப்படுவது போல, அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானத்தால் ஒருவனுக்கு உண்மை ஞானம் வெளிப்படுகிறது.

அறிவு, மனம், நம்பிக்கை இவற்றை இறைவன் மீது நிறுத்தி சரணடைந்தவன், தனது ஞானத்தால் களங்கங்கள் அகன்று, விடுபடும் பாதையில் முன்னேறுகிறான்.

அடக்கமுள்ள சாது - அறிவின் காரணத்தால் நல்ல அந்தணன், பசு, யானை, நாய், நாயைத் தின்பவன் இவர்கள் அனைவரையும் சமநோக்குடன் காண்கிறான்.

ஆன்மா குறித்த ஒருமை, சமத்துவம் - இவற்றை அறிந்தவர்கள் இப்பிறவியிலேயே உலக நியதிகளை வென்றவர்களாவர். பிரம்ம உணர்வில் இருப்பதால் அவர்கள் பிரம்மம் போன்றே களங்கமற்றவர்களாவர்.

பிரியமானதை அடைவதால் மகிழ்வும், பிரியமற்றதை அடைவதால் துயரமும் கொள்ளாது, தன்னறிவுடன் மயக்கமற்று இறைவிஞ்ஞானத்தை அறிபவனாகவும் இருப்பவன் பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.

அவன் இன்பத்திற்காக ஜடவுலகத் தொடர்புகளால் கவரப்படுவதில்லை. பரத்தில் கருத்தை செலுத்தியதால் தன்னுள்ளே எல்லையற்ற ஆனந்தத்துடன் இருக்கிறான். ஜட இன்பங்களுக்கு ஆரம்பமும், முடிவும் உள்ளன என்றும் துன்பத்திற்கு காரணமாக புலனீடுபாடுகள் இருக்கின்றன என்றும் அவன் அறிந்துள்ளதால் அவற்றில் ஆர்வம் காட்டுவதில்லை.

சரீரத்தை விடும்முன்பே புலன் மற்றும் காம, குரோத உந்துதல்களைக் கட்டுப்படுத்த முடிந்தவனே யோகி ஆவான். தனக்குள் இன்புற்று, மகிழ்வுடன் இருக்கும் அவன் தன்னுணர்வால் பரத்தை அடைகிறான்.

இருமை - ஐயங்களுக்கு அப்பாற்பட்டு, மனம் உள் நோக்கிய நிலையில், எல்லா ஜீவர்களின் நலனுக்குமாய் வாழ்பவன், பாபங்களிலிருந்து விடுபட்டு பரத்தை அடைகிறான்.

புலனிச்சைகள், கோபம் இவற்றிலிருந்து விடுபட்ட, தன்னுணர்வும் தன்னொழுக்கமும் கொண்ட, முழுமைக்காகப் பாடுபடும் சாதகன் விரைவில் பரத்தை அடைகிறான்.

புலன் விஷயங்களை வெளி நிறுத்தி, புருவ மத்தியில் பார்வையை நிறுத்தி, மனம், புலன், அறிவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, ஆசை, பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டு நிரந்தரமாய் இந்நிலையிலிருக்கும் சாதகன் நிச்சயம் விடுதலை பெற்றவனாவான்.

எல்லா யாகங்களுக்கும், தவங்களுக்கும் இறுதி லட்சியமாகவும், எல்லா லோக தலைவர்களுக்கும் மகேஸ்வரனாகவும், எல்லா உயிரினங்களின் நண்பனாகவும் என்னை அறிபவன், உலகத் துயர்களிலிருந்து விடுபட்டு அமைதியடைகிறான்.

அத்தியாயம் 6 >>
 ====++++====
 
பகவத் கீதை - அத்தியாயம் 6

ஸாங்க்ய யோக பாதை


கர்ம பலனில் கவனமின்றி கடமைக்காக செயலாற்றுபவனே துறவியும் யோகியும் ஆவான்; மாறாக வேள்வித்தீ மூட்டாதவனும், செயலற்றவனும் அல்ல. துறவும் யோகமே. புலன் திருப்தியை துறக்காதவன் யோகியாக இயலாது.

யோகமுறையின் துவக்க நிலையில், செயல்படுவதே மார்க்கமாகக் கூறப்படுகிறது. ஆனால் பக்குவ நிலைக்கு வந்தபின் செயலைத் துறப்பதே மார்க்கமாகும்.

ஆசைகளைத் துறந்து, புலனுகர்வுச் செயலிலோ, பலன் கருதும் செயலிலோ தொடர்பு கொள்ளாதிருப்பவனே யோகத்தில் உயர்ந்தவனாவான்.

தன் மனதாலேயே தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்; இழிவுபடுத்திக் கொள்ளக் கூடாது. மனதை வென்றவனுக்கு அது சிறந்த நண்பனாகும், வெல்லாதவனுக்கு அது பெரும் விரோதியாகும்.

அவ்வாறு உயர்ந்தவனுக்கு பரமாத்மா ஏற்கனவே அடையப்பட்டு விடுகிறார். அவனுக்கு இன்ப துன்பம், குளிர் வெப்பம், மான அவமானம் அனைத்தும் சமமாகும்.

பெற்ற ஞானம், உணர்ந்த ஞானம் இவற்றால் நிறைந்திருப்பவனே யோகி. அவன் தன்னுணர்வாலும், தன்னடக்கத்தாலும், கல், மண், பொன் அனைத்தையும் சமமாகக் காண்கிறான்.

நண்பன், எதிரி, துவேஷி, நல்லோன், தீயோன், வேற்றுமையற்றவன், நடுநிலையாளன் போன்ற எல்லோரையும் சமமாய் நடத்துபவன் யோகத்தில் மிக முன்னேறியவனாவான்.

தனியிடத்தில் தனியனாய் அமர்ந்து உடல், உள்ளத்தை அடக்கி, உடைமைகள் குறித்த உரிமை உணர்விலிருந்து விடுபட்டு பரமாத்மா மீது மனதைச் செலுத்த வேண்டும்.

தூய்மையான இடத்தில் தர்ப்பை பரப்பி, அதை மான் தோலால் மூடி, வெண்மையான துணியை மேலே விரித்து அதிக உயரமாகவோ மிகத் தாழ்வாகவோ இல்லாதபடி இருக்கை அமைத்து அதன் மேல் யோகியானவன் உறுதியுடன் அமர்ந்து, மனம், புலன்களைக் கட்டுப்படுத்தி இதயத்தை தூய்மையாக்கி ஒருமுகத்துடன் யோகம் பயில வேண்டும்.

தேகம், தலை, கழுத்து இவற்றை நேராக வைத்தமர்ந்து நாசி நுனியில் பார்வையை நிறுத்தி, கிளர்வற்ற மனதுடன் பயமின்றி சிற்றின்பத்திலிருந்து விலகி, என்னை எண்ணி, என்னையே இலக்காக்கி யோகி அமர வேண்டும்.

தேகம், மனம், செயலின் போக்கை இவ்வாறு பயின்று, ஜடத்திலிருந்து விடுபட்டு யோகி இறைத்தலம் அடைகிறான்.

அதிகம் உண்பவன், மிகக் குறைவாக உண்பவன், அளவு கடந்து உறங்குபவன், மிக விழித்திருப்பவன் இவர்கள் யாரும் யோகியாகும் வாய்ப்பில்லை. உணவு, உறக்கம், உழைப்பு, உல்லாசம் இவற்றில் மிதமாக இருப்பவன், யோகப்பயிற்சி மூலம் துன்பங்களை அகற்ற முடியும்.

ஒருவன் பயிற்சியால் மன ஓட்டத்தை நிறுத்தி ஆசையில்லாதவனாக ஆகும் போது பூரண யோகியாக கருதப்படுகிறான்.

காற்று வீசாத இடத்தில் தீபம் அசையாது நிலைத்து எரிவது போல், யோகியின் மனம் தியானத்தில் நிலைத்திருக்கும்.

இப்பக்குவ நிலையே சமாதி எனப்படும். ஒருவனது மனம், ஜட இயக்கத்திலிருந்து விடுபட்டு, ஆன்மாவைக்கண்டு அதில் இன்புறும் தன்மையிலிருந்து இது தெளிவாகிறது. இந்த எல்லையற்ற இன்ப நிலையில் ஆழ்ந்து ஆன்மீகப் புலன்களால் ஒருவன் "தன்னை" அனுபவிக்கிறான். இப்படிப்பட்டவன் இதற்குமேலும் ஏதும் உயர்வு இருப்பதாகக் கருதுவதில்லை. கடும் துன்பங்களிடையேயும் தன்நிலை மாறாதிருக்கிறான். இதுவே ஜடத் துன்பங்களிலிருந்து உண்மையான விடுதலையாகும்.

மாறாத உறுதி - நம்பிக்கையுடன், உரிமை உணர்வின் ஆசைகளை அறவே துறந்து, புலன்களை மனதால் அடக்க வேண்டும். உறுதியுடன் மனதை மெதுவாக ஆழ்நிலையில், வேறெதையும் சிந்திக்காது நிறுத்த வேண்டும்.

எங்கெல்லாம், எவைகளிலெல்லாம் நிலையற்று மனது சஞ்சரிக்கிறதோ அங்கிருந்து அதனை இழுத்து வந்து ஆன்மாவின் கட்டுப்பாட்டினுள் கொணர வேண்டும்.

என்னில் மனதை நிறுத்திய யோகி பேரின்பமடைகிறான். அவன் மனம் அமைதி அடைந்து, எழுச்சிகள் தணிந்து பாபங்களிலிருந்து விடுபடுகிறான்.

எல்லா ஜடக் களங்கங்களிலிருந்தும் விடுபட்டு, ஆன்மாவில் நிலைத்து, பரம உணர்வுடன் தொடர்பு கொண்ட யோகி பிரம்மானந்த நிலையை அடைகிறான்.

உண்மையான யோகி தன்னுணர்வால், என்னை அனைத்திலும், அனைத்தையும் என்னிலும் காண்கிறான். இதனால் அவனுக்கு நான் இழக்கப்படுவதுமில்லை. எனக்கு அவன் இழக்கப்படுவதுமில்லை.

நானும், ஜீவர்களின் இதயத்திலிருக்கும் பரமாத்வாவும் ஒன்றே என்றறியும் யோகி எனக்கு வந்தனைகள் செய்து எல்லா சூழ்நிலைகளிலும் என்னில் நிலைக்கிறான். அவன் தன் பக்குவத்திற்கேற்ப எல்லா உயிர்களையும், அவற்றின் சுக துக்கங்களையும் சமமாகக் காண்கிறான்.

அர்ஜூனன்: மதுசூதனா, தாங்கள் கூறிய யோகமுறை தாங்க முடியாதது; சாத்தியமற்றது. ஏனெனில் மனம் சஞ்சலமானது; சக்தி வாய்ந்தது, காற்றை அடக்குவதைவிட கடினமானதாக எனக்குத் தோன்றுகிறது.

பகவான்: பலவானே, அமைதியற்ற மனதை அடக்குதல் கடினமெனினும் பயிற்சியாலும், பற்றின்மையாலும் இது சாத்தியம்.

கட்டுப்பாடற்ற மனங்கொண்டவனுக்கு தன்னுணர்வு பெறல் கடினம். ஆனால் கட்டுப்பாடான மனதுடன் முயல்கையில் வெற்றி நிச்சயம். இதுவே என் கருத்து.

அர்ஜூனன்: கிருஷ்ணா, சிரத்தையிருந்தும், உலக உணர்வாலும், முயற்சிக் குறைவாலும் யோகப் பாதையில் வழுவியவன் கதி என்ன? இருவகையிலும் (ஜட, ஆன்மீக) அவன் சிதறிய மேகம் போல் இடமின்றி அழிந்திடுவானே? இதுவே என் ஐயம். இதனை முழுமையாகத் தீர்த்து வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பகவான்: பலவானான குந்தி மகனே, நற்செயலில் ஈடுபட்ட ஆன்மீகி எவ்வுலகிலும் அழிவுறுவதில்லை. நண்பா, நல்லவன் தீமையை அடைவதில்லை. தோல்வியுற்ற யோகி நல்லோர் வாழும் உலகில் பல்லாண்டுகள் இன்புற்று, பின் செல்வந்தர் அல்லது நல்லோர் இல்லத்தில் அல்லது ஆன்மீகிகளின் குடும்பத்தில் பிறக்கிறான். இத்தகைய பிறவி உலகில் மிக அரிது. தனது முற்பிறப்பின் உணர்வினால் தொடரப்பட்டு முழு வெற்றிக்கு அவன் முயல்கிறான்.

அவன் நாடாமலேயே முற்பிறவி சாதனைகளால் கவரப்பட்டு சாஸ்திர சடங்குகளினின்றும் மேம்பட்டு நிற்கிறான்.

கடும் பயிற்சியினால் யோகி தன் எல்லா பாவங்களிலிருந்தும் தூய்மையடைந்து, பல பிறவிகளில் அடைந்த பக்குவத்தின் காரணமாக பரம கதியை அடைகிறான். அவன் பலன் நோக்கி செயல்படுவோரை விட, அறிஞர்களைவிட, தபஸ்விகளைவிட மேலானவன். எனவே யோகியாவாயாக.

எனினும், பெரும் நம்பிக்கையுடன் சித்தத்தை என்பால் வைத்து அன்புத் தொண்டால் என்னை வழிபடும் பக்தனே யோகிகளிலெலாம் மிகச் சிறந்தவனும் எனக்கு நெருக்கமானவனுமாவான்.

அத்தியாயம் 7 >>
 ====++++====
 
ஞான விஞ்ஞான யோகம்


பார்த்தனே, என் உணர்வில், என் மீது பற்றுடன் யோகத்தைப் பயில்வதால் சந்தேகமின்றி என்னை அறியலாம்.

இப்போது நான் தெரிவிப்பதை நீ அறிந்து கொண்டால், இனி எதையும் நீ அறிய வேண்டியதில்லை. அத்தகைய நுட்பமான அறிவை முழுமையாகக் கூறுகிறேன் கேள்.

கோடியில் ஒருவனே பக்குவமடைய முயல்கிறான். அவர்களுள்ளும், யாரோ ஒருவனே என்னை உள்ளபடி அறிகிறான்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் - இவை எட்டும் எனது பிரிந்த கீழான இயற்கையாகும்.

கீழான இயற்கையுடன் போராடியபடி, இவ்வுலகத்தைத் தாங்கும் எனது மேலான இயற்கை உயிரினங்கள் இருக்கின்றன.

இவ்விரு இயற்கைகளுக்கும் தோற்றத்திற்கான மூலமாகவும், பிரளயத்தின்போது ஒடுங்கும் இருப்பிடமாகவும் நான் இருக்கிறேன்.

என்னிலும் மேலான உண்மையில்லை. நூலின் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளது போல் எல்லாம் எனைச் சார்ந்துள்ளன.

நானே நீரின் சுவை, சூரிய சந்திரரின் ஒளி, வேத மந்திரங்களின் பிரணவம் (ஓம்). வானில் சப்தமாகவும், மனிதருள் திறனாகவும் உள்ளேன்.

நிலத்தின் வாசனை நான்; நெருப்பின் வெப்பம் நான்; உயிரினங்களின் உயிரும், தவம் புரிவோரின் தவமும் நானே.

எல்லா உயிரினங்களின் மூலவிதை நானே. அறிஞர்களின் அறிவும், பலவான்களின் பலமும் நானே.

பரதர்களின் தலைவா, பலவீனர்களைக் காக்கும் பலவான்களின் பற்றும், பற்றற்றவர்களது பலமும் நானே, அறநெறிகளுக்கு உட்பட்ட காமமும் நானே.

சத்வ, ரஜோ, தமோ எனும் முக்குணங்களுக்குட்பட்ட எதுவாயினும் எல்லாமே எனது சக்தியிலிருந்து உண்டானவை. ஒருவிதத்தில் நானே எல்லாமே எனினும், நான் குணங்களுக்கு உட்பட்டவனல்ல.

முக்குணங்களால் மயக்கப்பட்டிருப்பதால், எல்லையற்ற, குணங்களுக்கு அப்பாற்பட்ட என்னை உலகம் அறியாதிருக்கிறது.

முக்குணங்களால் ஆன எனது மாயை கடக்க முடியாதது; எனினும் என்னைச் சரணடைந்தோர் எளிதில் கடக்கலாம்.

அறிவில்லாத மூடர்கள், அறிவில் கடைத்தரமானவர்கள், அறிவு திசை மாறியவர்கள் மற்றும் ஆன்ம அறிவே இல்லாதவர்கள் (நாத்திகர்) என நால்வித தீயோர் என்னைச் சரணடைவதில்லை.

நால்வித நல்லோர் எனக்குத் தொண்டு புரிகின்றனர் - துன்பம் தாங்காதோர், வினாவுடையவர், பொருளாசை கொண்டவர், இறைவனைத் தேடுபவர்.

இவர்களில் தூய பக்தித் தொண்டாற்றும் முழு ஞானம் உடையவன் சிறந்தவனாவான். நான் அவனுக்கு பிரியமானவன். அவனும் எனக்கு மிகப்பிரியமானவன்.

இவர்கள் நல்லோராயினும் என்னைக் குறித்த அறிவில் நிற்பவனை என்னிலேயே வாழ்பவனாக நான் கருதுகிறேன். எனது தொண்டில் ஈடுபட்டு அவன் என்னையே அடைகிறான்.

பல பிறவிகளுக்குப் பின்னரே உண்மையான அறிவாளி, காரணங்களுக்கெல்லாம் முதற்காரணமாக என்னை அறிந்து, என்னைச் சரணடைகிறான். அத்தகு சிறப்புடையவன் மிக அரிதானவன்.

ஆசைகளால் அலைபாயும் மனதினர் தேவர்களுக்குச் சரணடைந்து தமது இயல்புகளுக்கேற்ப வழிபாட்டு முறைகளையும் விதிமுறைகளையும் பின்பற்றுகின்றனர். எல்லோரது இதயத்துள்ளும் நான் பரமாத்வாக இருப்பதால், அவர்களின் நம்பிக்கையையும் நானே உறுதியாக்குகிறேன். அத்தகு நம்பிக்கையுடன் அவன் தேவர்களிடம் பலன் பெற்றுச் செல்கிறான். அப்பலன்கள் உண்மையில் என்னால் வழங்கப்படுபவையே.

குறைமதியாரே தேவரை வழிபடுவர். தேவர்கள் மூலம் அவர்கள் பெறும் நன்மைகளும் எல்லைக்குட்பட்டவை; தற்காலிகமானவை. தேவர்களை வழிபடுவோர் தேவரை அடைவர். என் பக்தர்களே என்னுலகை அடைவர்.

அறிவற்றவர்கள், எனக்கு உருவமில்லாததாகவும், குறிப்பிட்ட உருவத்துடன் வந்து போவதாகவும் எண்ணுகின்றனர். மூடத்தனத்தினால் எனது மேலான இயல்புகளையும், நித்தியத் தன்மையினையும் அறியாதிருக்கின்றனர்.

குறைமதியோருக்கு நான் தோன்றுவதே இல்லை. எனது யோக சக்தியால் அவர்களுக்கு நான் மறைக்கப்பட்டுள்ளேன். மயங்கிய நிலையில் இருப்போர் பிறவாத, இறவாத என்னை அறிவதில்லை.

நான் நடந்தவை, நடப்பவை, நடக்கப் போவற்றையெல்லாம் அறிவேன். எல்லா ஜீவன்களையும் அறிவேன். ஆனால் என்னை யாரும் அறியார்.

பிறவி பெற்ற காலம் முதல், ஜீவர்கள் இருமைகளுக்கு ஆட்பட்டு மயங்கியுள்ளனர்.

முப்பிறவியிலும், இப்பிறவியிலும் நற்செயல்களில் ஈடுபட்டு எவர்களது பாபம் முழுதுமாக ஒழிக்கப்பட்டுள்ளதோ, இருமை மயக்கத்திலிருந்து எவர் விடுபட்டுள்ளனரோ அவர்களே எனது தொண்டில் உறுதியுடன் ஈடுபடுவர்.

முதுமை, மரணத்திலிருந்து விடுபட முயலும் அறிவுடையோர் எனக்கு பக்தித் தொண்டு புரிகின்றனர். சரியான அறிவைப் பெற்றுள்ளதால் அவர்கள் பிரம்ம உணர்வுடையவர் ஆவர்.

என்னையே பரம் புருஷராக, ஜடத் தோற்றங்களை ஆளும் நபராக, தேவர்களுக்கெல்லாம் ஆதாரமாக, யக்ஞபதியாக (யாகங்களின் இறைவனாக) என்னை உணர்ந்தவன், இறுதிக்காலத்திலும் என்னை அறியலாம்.

அத்தியாயம் 8 >>
 ====++++====
 
பகவத் கீதை - அத்தியாயம் 8

அட்சரப் பிரம்ம யோகம்


அர்ஜூனன்: புருஷோத்தமா, பிரம்மம், ஆன்மா, கர்மம், ஜடத்தோற்றம் என்பன என்ன? தேவர்கள் யார்? யக்ஞபதி உடலின் எங்குள்ளார்? அன்புத்தொண்டு புரிபவர்கள் இறுதிக்காலத்தில் எங்ஙனம் உம்மை அடைகின்றனர்?

பகவான்: அழிவற்ற உன்னத ஜீவான்மாவே பிரம்மம். அதன் இயற்கையே ஆன்மா. ஜட உடல்களின் உற்பத்தி சம்பந்தமான செயல்கள் கர்மம் ஆகும்.

ஜடத்தோற்றம் முடிவற்ற மாற்றங்களுடையது. அது அதிபூதம் எனப்படும். சூரிய சந்திரர் மற்றும் தேவர்கள் அவர்களின் லோகங்கள் உள்ளிட்டதாக விளங்கும் இறைவனின் அகில உருவம் அதிதைவம் எனப்படும். ஜீவர்களின் இதயங்களில் இறைவனது பிரதிநிதியான பரமாத்வாக (அதியக்ஞம்) இருப்பதும் நானே.

இறுதிக்காலத்தில் என்னையே எண்ணியபடி உடலை விடுபவன் எனது இயற்கையை அடைகிறான். உடலை விடும்போது எத்தகைய உணர்வுகளுடன் விடுகிறானோ அந்நிலையை அடுத்த வாழ்வில் அடைகிறான்.

எனவே அர்ஜூனா, என்னை இவ்வுருவில் கண்டு, கடமையைச் செய். மனம் புத்தியை என்னில் நிறுத்தி, செயலை எனக்கு அர்ப்பணித்து, சந்தேகமின்றி என்னை அடையலாம்.

பார்த்தனே, பரம புருஷரைத் தியானித்து, என்னை எண்ணுவதில் மனதை நிறுத்தியவன் - பிறழாது பயிற்சி செய்பவன் உறுதியாக என்னை அடைகிறான்.

பரம புருஷரான இறைவனை ஒரு நபராகவும், எல்லாம் அறிந்தவராகவும், மூத்தவராகவும், பரம் ஆளுனராகவும், அணுவினும் அணுவாகவும், அனைத்தையும் காப்பவராகவும், ஜட இயற்கைக்கும், எண்ணங்களுக்கும், ஆய்வுக்கும் அப்பாற்பட்டவராகவும், உன்னதமானவராகவும், சூரியன் போன்று பிரகாசிப்பவராகவும் தியானிக்க வேண்டும்.

இறக்கும் தருவாயில் உள்மூச்சை புருவமத்தியில் நிறுத்தி பக்தியுடன் பரமபுருஷரை எண்ணுபவன் நிச்சயமாக அவரை அடைகிறான்.

வேத வித்துக்களும், பற்றற்ற துறவியரும், பிரம்மத்தில் புகும் பக்குவத்தை அடைவதற்காக சிற்றின்பத்தைத் துறக்கின்றனர். விடுதலைக்கான இம்முறையை நான் உனக்குக் கூறுகிறேன்.

புலன் வாயில்களை அடக்கி, மனதை இதயத்திலும், பிராணனை தலையுச்சியிலும் நிறுத்தி, யோக நிலையில் அமர்ந்து, ஓங்காரத்துடன் என்னை எண்ணியபடி உடலை விடுபவன் உறுதியாக உன்னதத் தலத்தை அடைகிறான்.

மாறுபடாத நோக்கமின்றி பக்தித்தொண்டில் எப்போதும் ஈடுபட்டு இருப்பவனுக்கு நான் எளிதில் அடையப்படக் கூடியவனாயிருக்கிறேன்.

பக்குவமடைந்த அத்தகைய பக்தியோகிகளான மஹாத்மாக்கள், என்னை அடைந்தபின் துன்பம் நிறைந்த இத் தற்காலிக உலகுக்குத் திரும்ப வருவதில்லை. இங்கிருந்து பிரம்மலோகம் வரை பிறப்பு இறப்புத் துயருண்டு. என்னை அடைபவன் மீண்டும் பிறப்பதில்லை. (பிரம்மலோகம் வரை கீழிருந்து மேலாக 14 அடுக்கு கிரக கூட்டங்கள் உள்ளன. கீழே அதள, விதள, சுதள, மஹாதள, ரஸாதள, பாதாள என்றும், மேலே பூ, புவ, ஸ்வ, மஹ, தப, ஜன, சத்ய (பிரம்ம லோகம்) என்றும் லோகங்கள் உள்ளன. கீழிருந்து மேலாக எட்டாவது அடுக்கில் பூலோகம் உள்ளது).

மனிதக் கணக்கின்படி ஆயிரம் யுகங்கள் பிரம்மாவின் ஒரு பகல் (432 கோடி ஆண்டுகள்). அதுபோன்ற காலம் அவருக்கு ஓரிரவாகும். அவரது பகலில் ஜீவர்கள் தோன்றி, இரவில் மறைகின்றனர்.

தோன்றி மறையும் இவ்வுலகங்களுக்கு மேலாக திவ்வியமான, நித்தியமான ஓர் உலகு உள்ளது. அகிலங்கள் அழிகையில் அது அழிவதில்லை. என் இருப்பிடமான அதுவே ஆன்மாக்களின் இறுதி இலக்கு.

பரமபுருஷரான இறைவன் தூய பக்தியினால் அடையப்படக் கூடியவர். தனது லோகத்தில் அவர் இருப்பினும் எங்கும் நிறைந்துள்ளார். எல்லாம் அவரில் அமைந்துள்ளன.

எக்காலத்தில் உடலை விட்டாலும் மீண்டும் இவ்வுலகுக்கு ஒருவன் வருவானோ / வரமாட்டானோ அதைக் கூறுகிறேன்.

பரப்பிரம்மத்தை அறிபவன், கதிரவனின் ஆதிக்கத்தில் ஒளிபொருந்திய நேரத்தில், வளர்பிறையின் இருவாரங்களில், சூரியன் வடக்காகச் செல்லும் ஆறு மாதங்களில் ஜட உலகிலிருந்து உடலை விட்டுச் செல்கிறான்.

புகை நேரத்தில், இரவில், சந்திரனில்லாத அமாவாசையைச் சேர்ந்த இருவாரங்களில், சூரியன் தெற்காகச் செல்லும் ஆறு மாதங்களில், உலகை விட்டுச் செல்லும் யோகிகளும், சந்திரலோகத்தை அடைவோரும் மீண்டும் இவ்வுலகில் பிறக்கின்றனர்.

ஒளியில் நீங்குபவன் மீண்டும் வருவதில்லை, இருளின் நீங்குபவன் மீண்டும் வருகிறான் என வேதங்கள் கூறுகின்றன.

இவ்விரு வழிகளையும் அறிந்துள்ள பக்தர்கள் குழப்பமடைவதில்லை. எனவே எப்போதும் பக்தியில் நிலைத்திரு.

வேதம் பயிலல், யாகம் செய்தல், தான தவம் புரிதல், கர்ம, ஞான பாதைகளை மேற்கொள்ளல் - இவற்றால் அடையப்படும் விளைவுகளை பக்திப்பாதையில் உள்ள ஒருவன் இழப்பதில்லை. அவன் மூல ஸ்தானமான பரமபதம் அடைகிறான்.

அத்தியாயம் 9  >>
 ====++++====
 
பகவத் கீதை - அத்தியாயம் 9

ராஜ வித்யா - ராஜகுஹ்ய யோகம்


அர்ஜூனா, எதை அறிவதால் ஜடவாழ்விலிருந்து விடுபடலாமோ, அத்தகைய ரகசிய ஞானத்தினை, பொறாமையற்ற உன்னிடம் விளக்குகிறேன்.

இந்த ஞானமே, அறிவின் அரசன். ரகசியங்களில் ராஜா. உத்தமமானது; தூயது; நடைமுறையில் உணரப்படக்கூடியது. தர்மங்களில் முழுமையானது. அழிவற்றது. மிக்க இன்பத்துடன் செயலாற்றக் கூடியது.

பக்திப் பாதையில் நம்பிக்கையற்றவன் என்னை அடைய முடியாது. அவன் இறப்புக்குப் பின் ஜனன, மரணம் நிறைந்த இந்த ஜடவுலக்குக்கே திரும்புகிறான்.

இவ் அகிலம் எல்லாம் அகிலமறியாத எனது தோன்றா உருவில் என்னால் புகப்பட்டிருக்கிறது. எல்லா ஜீவர்களும் என்னில் இருக்கின்றன. ஆனால் அவைகளில் (சார்ந்து) நான் இல்லை. படைக்கப்பட்டவைகளும் என்னில் ஆழ்ந்து இல்லை. எனது யோக மகிமைகளைப் பார். உயிர்களைக் காப்பவனாகவும், எங்கும் நிறைந்தும் நான் இருப்பினும், படைப்பின் மூலகாரணமாகவும் நான் உள்ளேன்.

எங்கும் வீசிக்கொண்டிருக்கும் காற்று, ஆகாயவெளியிலும் நிறைந்திருப்பது போல் எல்லாம் என்னில் அமைந்துள்ளன.

கல்ப முடிவில் ஜடத்தோற்றங்கள் என் இயற்கையில் நுழைகின்றன. அடுத்து கல்ப ஆரம்பத்தில் அவையெல்லாம் எனது இயற்கையால் மீண்டும் படைக்கப்படுகின்றன. இந்த ஜடத்தோற்றங்கள் எல்லாம் எனக்குக் கட்டுப்பட்டவை. எனது எண்ணப்படி அவை படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. நான் நடுநிலையுடன் விலகியிருந்து செயலாற்றுவதால், இச்செயல்கள் என்னைப் பாதிப்பதில்லை.

எனது மேற்பார்வையில் இந்த ஜட இயற்கை இயங்குகிறது. அதுவே அசையும், அசையா எல்லா உயிரினங்களையும் உருவாக்கி மறைக்கிறது.

எனது உன்னத இயற்கையையும், மஹேஸ்வரத் தன்மையையும் அறியாத மூடர்கள், நான் மனித உருவில் தோன்றும் போது சாதாரண மனிதன் போல் எண்ணி, என்னை அவமதிக்கின்றனர்.

இவ்வாறு நோக்கத்தில் குழப்பம் கொண்ட அவர்கள் ராட்சதத்தனமான நாத்திகக் கருத்துக்களால் கவரப்பட்டு, அவர்களது கர்ம, ஞானப் பயிற்சிகள் எல்லாம் வீணாகின்றன.

ஆனால் குழப்பம் அடையாத மஹாத்மாக்களோ என்னைப் பகவானாக ஏற்று, எனது இயற்கையின் பாதுகாப்பின், எனது பக்தித் தொண்டில் ஈடுபடுகின்றனர். இவர்கள் எப்போதும் என் புகழ் பாடி, உறுதியுடன் முயன்று, என்னை பக்தியுடன் வணங்கி வழிபடுகின்றனர்.

அறிவை விருத்தி செய்துகொள்ளும் பலர், என்னை தனிப்பட்டவராயும், பல்வேறுபட்டவராயும், விஸ்வ ரூபத்திலும் வழிபடுகின்றனர். (தனிப்பட்டவர் - இறைவனின் சுயவடிவான கிருஷ்ணர், பல்வேறுபட்ட நிலை - ஜீவர்களின் இதயவாசியான பரமாத்மா, விஸ்வ நிலை - எங்கும் பரவி இருக்கும் பிரம்மம்).

வேதச் சடங்குகளும், யாகமும், முன்னோருக்குப் படைக்கப்படும் பொருட்களும், நோய் தீர்க்கும் மூலிகைகளும், மந்திர சப்தங்களும் நானே; நானே யாகத்தின் வெண் நெய்யாகவும், நெருப்பாகவும், நிவேதனமாகவும் இருக்கின்றேன்.

நானே ஜகத்திற்கு தந்தையும், தாயும், முன்னோனும் ஆவேன். அறியப்பட வேண்டிய பொருளும், தூய்மைப்படுத்தும் பொருளும், ஓம் எனும் மந்திரமும் நானே; ரிக், யஜூர், சாம வேதங்களும் நானே.

நானே அனைத்திற்கும் பிறப்பிடமாகவும், இருப்பிடமாகவும், உறைவிடமாகவும், புகலிடமாகவும், இலக்காகவும், சாட்சியாகவும், அழியாத வித்தாகவும், படைப்பு - நிலைப்பு - அழிவாகவும் உள்ளேன்.

வெப்பம், மழை, பஞ்சம் போன்றவற்றை நானே கட்டுப்படுத்துகிறேன். நித்தியமும், மரணமும் நானே. அழிபவை, அழியாதவை அனைத்தும் என்னிலே உள்ள‌ன‌.

ஸ்வர்க்க கிரகங்களை நாடி வேதம் பயின்று சோம பானம் பருகுவோரும் ஒரு விதத்தில் என்னையே வழிபடுகின்றனர். அவர்கள் இந்திரலோகத்தில் தேவ இன்பங்களை அனுபவித்து, புண்ணியங்கள் தீர்ந்தவுடன் மீண்டும் நித்தியமற்ற இந்த ஜடவுலக்குக்கே திரும்புகின்றனர். இவ்விதமாக வேதங்களால் அவர்கள் அற்ப சுகமே பெறுகின்றனர்.

ஆனால் எனது திவ்வியமான உருவைத் தியானித்து பக்தியுடன் என்னை வழிபடுவோருக்கு அதிர்ஷ்டமானதைக் கொடுத்தும், கொடுத்ததைக் காத்தும் நான் அருள்கிறேன்.

நம்பிக்கையுடன் ஒருவன் தேவர்களுக்கு யாகமாக படைப்பவைகள்கூட எனக்கானவையே. முழு அறிவின்றி அவைகள் படைக்கப்படுகின்றன.

எல்லா யாகங்களுக்கும் (நற்செயல்களுக்கும்) நானே நோக்கமாகவும், அனுபவிப்பாளனாகவும் உள்ளேன். இதனை அறியாதவர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து கொண்டுள்ளனர்.

தேவர்களை வழிபடுவோர் தேவர்களை அடைவர். பேய் பூதங்களை வழிபடுவோர் அவர்களிடையே பிறப்பர். முன்னோர்களை வழிபடுவோர் முன்னோர்களிடையே பிறப்பர். என்னை வழிபடுவோர் என்னுடன் வாழ்வர்.

அன்புடனும், பக்தியுடனும் ஒருவன் ஓர் இலையோ, பூவோ, பழமோ, நீரோ தந்தால் அதை நான் ஏற்கிறேன்.

எதைச் செய்கிறாயோ, எதை உண்கிறாயோ, எதைப் படைக்கிறாயோ, எதைக் கொடுக்கிறாயோ, எத்தவங்களைப் புரிகிறாயோ - அனைத்தையும் எனக்கு அர்ப்பணமாகச் செய். இதனால் எல்லா நல்ல, தீய விளைவுகளிலிருந்து விடுபடுவதுடன் என்னை அடைவாய்.

எல்லா உயிர்களுக்கும் நான் சமமானவன். யாரிடமும் நான் விருப்பு, வெறுப்பு கொள்வதில்லை. ஆனால் எனது தொண்டில் ஈடுபட்டிருப்பவன் எனக்கு நண்பன்; அவன் என்னில் இருக்கிறான்; நான் அவனுக்குப் பிரியமானவன்.

மிகவும் கெட்ட நடத்தை கொண்டவன் கூட எனது தொண்டில் ஈடுபட்டிருந்தானாகில், அவனைப் புனிதமானவனாகவே கருத வேண்டும். ஏனெனில் அவன் நல்ல முடிவுக்கு வந்து விட்டான்.

பார்த்தனே, பாப யோனியில் பிறந்திருந்தாலும் பெண்கள், வணிகர்கள், கடும் தொழிலாளர்கள் என்னிடம் அடைக்கலம் கொண்டால் நித்ய கதி அடைவர். அப்படியிருக்கையில் இவ்வுலகில் எனது தொண்டில் ஈடுபட்டிருக்கும் புனிதர்கள், பக்தர்கள், அந்தணர், ராஜரிஷிகள் ஆகியோர் எவ்வளவு சிறந்தவர்.

உன் மனதை எப்போதும் என்னில் வை. என் பக்தனாகி எனக்கு வந்தனைகள் செய்து வழிபடு. இவ்விதம் என்னில் ஆழ்ந்து நிச்சயம் நீ என்னிடம் வருவாய்.


அத்தியாயம் 10  >>
 ====++++====
 
பகவத் கீதை - அத்தியாயம் 10

பகவத் விபூதி யோகம்

பகவான்: பலவானே, உனக்கு பேரானந்தம் தரக்கூடிய - உன் நலம் கருதி நான் கூறப்போகும் விஷயங்களைக் கேட்பாயாக.

நானே முதற்காரணம் என்பதால், தேவர்களோ, முனிவர்களோ எனது வைபவங்களை அறியார்.

என்னை லோகங்களுக்கெல்லாம் இறைவனாகவும், ஆதியாகவும், பிறவாதவனாகவும் அறிபவன் - மனிதருள் மயக்கமற்றவன் ஆவான். அவன் எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான்.

புத்தி, ஞானம், மயக்கமின்மை, பொறுமை, வாய்மை, புலனடக்கம், அமைதி, இன்ப துன்பங்கள், பிறப்பு, இறப்பு, அச்சம், அஞ்சாமை, அகிம்சை, சமநோக்கு, திருப்தி, தவம், தானம், புகழ், இகழ் அனைத்தும் என்னாலேயே உண்டாக்கப்படுகின்றன.

மஹரிஷிகள் எழுவர், அவர்களுக்கு முந்தைய முனிவர் நால்வர், மற்றும் மனுக்களும் எனது மனதிலிருந்து உதித்தவராவர். ஜீவராசிகள் அனைவரும் அவர்களிடமிருந்தே தோன்றினர்.

(மஹரிஷிகள்: வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், கச்யபர், பரத்வாஜர். முனிவர்கள் : ஸனகர், ஸனந்தனர், ஸனாதனர், ஸனத்குமாரர். மனுக்கள்: 14 பேர்)

எனது வைபவங்களை அறிபவன், சந்தேகமின்றி எனக்கு பக்தித் தொண்டாற்றுகிறான். அனைத்துக்கும் நானே உற்பத்தி மூலமாவேன். அனைத்தும் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதையறிந்த அறிஞர்கள் இதயபூர்வமாக எனது தொண்டில் ஈடுபடுகின்றனர்.

தூய பக்தர்களின் சிந்தனைகள் என்னிலேயே உள்ளன. எனக்காக வாழும் அவர்கள் ஒருவருக்கொருவர் என்னைப் பற்றிப் பேசுவதிலும், உபதேசித்துக் கொள்வதிலும் பெரும் திருப்தியும், ஆனந்தமும் கொள்கின்றனர்.

என்மேல் பக்தி கொண்டு அன்புடன் என்னை வழிபடுவோருக்கு, என்னை அடைவதற்கான வழியை வழங்குகிறேன். கருணையுடன் அவர்கள் இதயத்திலிருந்தபடி, அங்கிருக்கும் அறியாமை இருளை, ஞான தீபத்தால் போக்குகிறேன்.

அர்ஜூனன்: நீரே பரப்பிரம்மம், இறுதியான புகலிடமும், தூய்மைப்படுத்துபவரும், மெய்ப்பொருளும், நித்தியமான பரம புருஷருமாவீர்; ஆதிதேவர், பிறப்பற்ற மூலபுருஷர், எங்கும் நிறைந்த அழகு. உம்மைக் குறித்து நாரதர், கணாதர், தேவலர், வியாசர் போன்ற பெரு முனிவர்களும் இவ்வாறு அறிவித்துள்ளனர். இப்போது நீரே அதைக் கூறுகின்றீர், கேசவா, நீர் கூறிய அனைத்தையும் உண்மையென அப்படியே ஏற்கிறேன். தேவர்களோ, அசுரர்களோ உமது இயல்பை அறிவதில்லை.

அகில நாயகா, பரத புருஷரே, தேவாதிதேவா, ஆதிமூலமே, உமது சுயசக்தியால் உம்மை உள்ளபடி அறிகிறீர்.

எத்தகைய மகிமைகளால் நீர் எங்கும் நிறைந்திருக்கிறீரோ, அவற்றை எனக்கு விவரிப்பீராக. நான் உம்மை எங்கனம் தியானிப்பது? எவ்வுருவில் உம்மை நினைப்பது? ஜனார்த்தனா, இதனை மீண்டும் கூறுவீராக. அமுதமாகிய உமது சொற்களைக் கேட்பதில் நான் சலிப்படைவதே இல்லை.

பகவான்: அர்ஜூனா, எனது வைபவங்கள் எல்லையற்றவை. அவற்றில் சிலவற்றைக் கூறுகிறேன்.

குடாகேசா (அயர்வை வென்றவன்), எல்லா ஜீவர்களின் இதயத்திலும் நான் ஆன்மாவாய் உள்ளேன். உயிர்களின் ஆரம்பம், இடை, இறுதியும் நானே. ஆதித்யர்களுள் நான் விஷ்ணு. ஒளிர்பவைகளில் நானே சூரியன். வாயு தேவதைகளுள் நானே மரீசி. நட்சத்திரங்களுள் சந்திரன் நான். வேதங்களில் நான் சாம வேதம். தேவர்களில் இந்திரன், புலன்களில் மனம், உயிர்களில் உணர்வு நான்.

ருத்திரர்களுள் நானே சங்கரன். யட்ச ராட்சசர்களில் நிதிக் காப்பாளனான குபேரன் நான். வசுக்களில் நெருப்பு நான். சிகரங்களில் மேரு. புரோகிதர்களில் பிருஹஸ்பதி. படைத்தலைவர்களுள் முருகன் நான். நீர் நிலைகளில் சமுத்திரம். பெரு முனிவர்களில் பிருகு நான். சப்தங்களில் ஓம் நான். யாகங்களில் புனித நாம ஜபம் நான். அசையாதவற்றுள் இமயமாக இருக்கிறேன்.

மரங்களில் நான் ஆலமரம். தேவ முனிவர்களில் நாரதன். கந்தர்வரில் நான் சித்ரரதன். சித்தர்களில் கபிலமுனி நான். குதிரைகளில் அமிர்தத்தில் தோன்றிய உச்சைச்சிரவஸ். பட்டத்து யானைகளில் ஐராவதம் நான். மனிதருள் மன்னன் நான். ஆயுதங்களில் வஜ்ராயுதம் நான். பசுக்களில் சுரபி நான். இனவிருத்தியாளருள் காதற்கடவுள் மன்மதன் நான். சர்ப்பங்களில் வாசுகி நான். தெய்வீக நாகங்களில் நான் அனந்தன். நீர்வாழ் தேவதைகளில் வருணன் நான். முன்னோர்களில் அர்யமா. நீதிபதிகளில் யமன் நான்.

அசுரர்களில் பெரும் பக்தரான பிரஹலாதன் நான். அடக்கி ஆளுபவற்றுள் நான் காலம். விலங்குகளுள் சிம்மம் நான். பறவைகளில் கருடன் நான். தூய்மைப்படுத்துபவற்றுள் காற்று நான். ஆயுதம் ஏந்துவோரில் நான் ராமனாகவும், மீன்களில் மகரமாகவும், நதிகளில் கங்கையாகவும் நான் உள்ளேன். படைப்புகளில் ஆதி, அந்தம், நடுவாக இருக்கிறேன். அனுபவ அறிவில் ஆன்ம அறிவாக நான் உள்ளேன். விவாதிப்போரில் முடிவான உண்மையாக இருக்கிறேன்.

எழுத்துக்களில் அகரம் நான். கூட்டுச்சொற்களில் இரு சொல் நானே. தீராக்காலமும் நானே. படைப்போரில் பிரம்மனாக இருக்கிறேன். அனைத்தையும் அழிக்கும் மரணம் நான். இனியும் உண்டாகக்கூடிய உற்பத்தியாளனும் நான். பெண்களில் புகழ், அதிர்ஷ்டம், அழகிய பேச்சு, ஞாபக சக்தி, அறிவு, பொறுமை நான்.

மந்திரங்களில் பிருஹத் ஸாமம் நான். கவிதைகளில் காயத்ரி, மாதங்களில் மார்கழி, பருவ காலங்களில் வசந்த காலம். வஞ்சகரில் சூது நான். ஒளிர்வனவற்றில் தேஜஸ் நான். நானே வெற்றியும், தீரச்செயலும், வலிமையும் ஆவேன். விருஷ்ணி குலத்தில் வாசுதேவன் நான். பாண்டவர்களில் அர்ஜூனன் நான். முனிவர்களில் வியாசர் நான். சிந்தனையாளர்களில் உஷநா. தண்டிப்பவற்றுள் செங்கோல் நான். வெற்றியை வேண்டுவோரிடம் நீதி நான். ரகசியங்களில் மெளனம் நான். ஞானிகளின் ஞானம் நானே.

இருப்பவைகள் அனைத்திற்கும் உற்பத்தி விதை நானே. அசையும், அசையா எவையும் நானின்றி இல்லை. எதிரிகளை வெல்பவனே, எனது வைபவங்களுக்கு எல்லையில்லை. அவற்றுள் சில உதாரணங்களையே இப்போது கூறினேன். அழகும், மகிமையும், வலிமையும் பொருந்திய எதுவாயினும் அவை எனது தேஜஸின் ஒரு சிறு பொறியிலிருந்தே வந்தவையாகும். ஒரு சிறு பின்னப் பகுதியால் நான் பிரபஞ்சம் முழுவதையும் தாங்குகிறேன்.

அத்தியாயம் 11  >>
 ====++++====
 
பகவத் கீதை - அத்தியாயம் 11

விஸ்வரூப தரிசன யோகம்


அர்ஜூனன்: கமலக்கண்ணா, என்மீது தாங்கள் அனுக்கிரகித்து அன்புடன் இயம்பியவற்றால் எனது மயக்கம் தெளிந்தது. உம் மகிமைகளையும், உயிரினங்களின் ஜனன, மரண விவரங்களையும் அறிந்தேன். பரமேஸ்வரா, என்முன் உம்மை நான் உண்மையில் கண்டுகொண்டிருந்தாலும், பிரபஞ்சத்திற்குள் நீர் எவ்வாறு நிறைந்துள்ளீர் என்பதைக் காண ஆவலாய் உள்ளேன். என்னால் அதைக் காணமுடியும் என நீர் நினைத்தால், யோகேஸ்வரா, அன்புடன் அந்த அகில ரூபத்தைக் காட்டி அருள்வீராக.

பகவான்: அர்ஜூனா, எனது வைபவங்களை ஆயிரக்கணக்கான தெய்வீக உரு, வர்ணங்களுடன் காண்பாயாக. ஆதித்யர்கள், ருத்ரர்கள், தேவர்கள் அனைவரையும் பார். இதுவரை யாரும் காணாத வினோதங்களைப் பார். இந்த விஸ்வரூபத்தில் நீ, காண விரும்புவதையும், வருங்காலத்தில் காண விரும்புவதையும் காணலாம். எல்லாம் முழுமையாய் உள்ளன. ஆனால் உன் கண்களால் இதைக் காணமுடியாது என்பதால், உனக்கு தெய்வீகக் கண்களை அளிக்கிறேன்.

சஞ்சயன்: மன்னா, இங்ஙனம் கூறிய பகவான், அர்ஜூனனிடம் தமது விஸ்வரூபத்தைக் காட்டினார்.

அவ்வடிவில் அர்ஜூனன் எண்ணற்ற வினோதமான கண்களையும், வாய்களையும் கண்டான். இறைவன் தெய்வீக ஆடை, ஆபரணங்களுடன், மாலை மற்றும் வாசனைப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். பிரம்மாண்டமாக எங்கும் வியாபித்துக் காணப்பட்டார். பல்லாயிரக்கணக்கான சூரியன்கள் உதித்தால் ஒருவேளை அந்த விஸ்வரூப ஜோதிக்கு இணையாகலாம். ஆயிரக்கணக்கில் பிரிந்திருக்கும் அகில விஸ்தாரமெல்லாம் ஒரே இடத்தில் பார்த்தனால் பார்க்கப்பட்டது. மெய்சிலிர்க்க குழப்பத்துடன், கூப்பிய கரங்களால் பிரார்த்தித்தான்.

அர்ஜூனன்: கிருஷ்ணா, எல்லா உயிர்களும், தேவர்களும் உமது உடலில் அணிவகுத்திருப்பதைக் காண்கிறேன். தாமரையில் பிரம்மா, சிவபெருமான், பல முனிவர்கள், தெய்வீக நாகங்களை நான் காண்கிறேன். எல்லையற்ற உருவங்களை - வயிறுகள், வாய்கள், கண்களுடன் காண்கிறேன். அவைகளுக்கு ஆரம்பமோ, முடிவோ, நடுவோ இல்லை. மகுடங்களாலும், கதைகளாலும், சக்கரங்களாலும் உமது உருவம் சூரியனைப் போன்று ஒளிர்கிறது. காண்பதற்கும் கடினமாக உள்ளது.

நீரே அறியப்பட வேண்டியவர், பரம புருஷர், அகில ஆதாரம். எல்லையற்றவர், நித்ய புருஷர், அறநெறி காப்பவர், ஆரம்பமும் நடுவும் முடிவுமில்லாத மூலம் நீர். உம் கண்களில் சூரிய சந்திரர் உள்ளனர். உம் தேஜஸினால் அகிலம் முழுவதையும் தகிக்கிறீர்.

ஒருவரே எனினும் எங்கும் நிறைந்துள்ளீர். உம் பயங்கரத் தோற்றத்தினால் கிரஹ மண்டலங்கள் நடுங்குகின்றன. தேவர்கள் அச்சத்துடன் வேத மந்திரங்களை ஓதிக்கொண்டு உம்மைச் சரணடைகின்றனர். சிவபெருமானின் தோற்றங்களும், ஆதித்யர்களும், வசுக்களும், சாக்கியர்களும், விஸ்வதேவர்களும், அஸ்வினிகளும், மருத்துக்களும், முன்னோர்களும், கந்தர்வர்களும், யட்சர்களும், அசுரர்களும், சித்தர்களும் வியப்புடன் காண்கின்றனர். லோக தலைவர்கள் உமது தோற்றத்திலான முகங்கள், கண்கள், வாய்கள், பற்கள், புஜங்கள், வயிறுகள், கால்கள் இவற்றைக் கண்டு நடுங்குகின்றனர். ஓ விஷ்ணுவே, என் மனதை இனியும் அமைதிப்படுத்த முடியாது. வானளாவிய வர்ணங்கள், கண்கள், வாய்களுடன் நிற்கும் உம்மைக் கண்டு அஞ்சுகிறேன். தேவாதி தேவா, உலகின் புகலிடமே, என்மீது கருணை காட்டுவீராக. மரணம் போல எரியும் உமது முகங்களையும், பற்களையும் எல்லா திக்குகளிலும் கண்டு என் மனம் நடுக்கமுறுகிறது.

சக மன்னர்களுடன் திருதராஷ்டிர புத்திரர்களும், பீஷ்மரும், துரோணரும், கர்ணனும் மற்றும் நமது வீரர்கள் அனைவரும் உமது வாயினுள் புகுவதால், பயங்கரமான பற்களால் அவர்களின் தலைகள் சிதைகின்றன. நதிகள் கடலில் மறைவதுபோல் கொதிக்கும் உமது வாய்களில் விழுநது அவர்கள் அழிகின்றனர். நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகள் போல் மக்கள் உம் வாய்களில் நுழைகின்றனர். அகிலங்களைக் தகிக்கும் தேவாதிதேவா, நீர் யார்? உம் நோக்கமென்ன?

பகவான்: உலகை அழிக்கும் காலம் நான். போரிடுபவரில் உங்களைத் தவிர இருதரப்பினரும் அழிக்கப்படுவர். எழுந்து போரிடு. எதிரிகளை வென்று வளத்துடன் ஆட்சி புரிவாயாக. எனது யுக்தியால் இவர்கள் ஏற்கனவே இறந்து விட்டனர். இடக்கையால் அம்பெய்பவனே, இப்போரில் நீ ஒரு கருவியாகவே இருப்பாயாக. துரோணர், பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன் போன்ற வீரர்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டனர். வெறுமனே போரிட்டு, வெல்.

சஞ்சயன்: இறைவனின் வார்த்தைகளைக் கேட்ட அர்ஜூனன், கூப்பிய கரங்களுடன் நடுங்கியபடி கூறினான்.

அர்ஜூனன்: ஹ்ருஷீகேசா, உம் புகழ் கேட்டு உலகம் மகிழ்கிறது. பக்குவமானவர்கள் உம்மை வணங்கும் நேரத்தில் அசுரர்கள் உம்மைக் கண்டு ஓடுகின்றனர். பிரம்மாவிற்கும் மூத்தவரே, எல்லையற்றவரே, தேவாதிதேவா, ஜகந்நிவாசா, ஜடத்தோற்றத்திற்கு உன்னதமான வெல்லமுடியாத காரணம் நீர். நீரே ஆதி புருஷர், பகவான், பிரபஞ்சங்களின் புகலிடம், அறிபவர், அறியப்படவேண்டியவர். இயற்கைக்கு மேம்பட்டவர், பிரபஞ்ச தோற்றம் உம்மால் புகப்படுகின்றது. காற்று, நெருப்பு, நீர், சந்திரன் அனைத்தும் நீரே. முன், பின்னிருந்தும், எல்லாத் திசைகளிலிருந்தும் உமக்கு ஆயிரமாயிரம் வணக்கங்கள். கட்டற்ற வலிமையே, எல்லையற்ற திறனின் இறைவா, அனைத்தும் நீரே.

உமது வைபவங்களை அறியாது, கடந்த காலத்தில் நான் பந்தத்தாலோ, பிரேமையாலோ, கிருஷ்ணா, மாதவா, நண்பா என்றெல்லாம் அழைத்திருந்தேன். விளையாடியபோதும், படுத்திருந்த போதும், உட்காந்திருந்த போதும், உணவருந்தும் போதும், தனிப்பட்டோ அல்லது பிறர் முன்னிலையிலோ பலவாறு உம்மை நான் அவமதித்திருக்கிறேன். அவைகளை மன்னித்தருள்வீராக.

ஜடத்தோற்றத்தின் தந்தையும், மதிப்புக்குரிய தலைவரும், ஆன்மீக ஆசிரியரும் நீர். உமக்கு நிகரும், உயர்ந்ததும் ஏதுமில்லை. மூவுலகிலும் நீர் அளவிட இயலாதவர். பரம புருஷர், ஜீவர்களால் வணங்கப்பட வேண்டியவர். போற்றத்தக்க உம்மிடம் அருளை யாசிக்கிறேன். மைந்தனுக்கு தந்தை போலும், நண்பனுக்கு நண்பன் போலும், காதலிக்கு காதலன் போலும் உமக்கு நான் செய்தவைகளைப் பொறுப்பீராக.

இதுவரையில் நான் காணாததைக் கண்டு மகிழ்வினும், அச்சத்தினால் நடுங்குகிறேன். எனவே கருணையுடன் இவ்வுருவை நீக்கி உமது இறை உருவைக் காண்பித்தருள்க. மகுடம், சங்கு, சக்கர, கதை, தாமரையுடன் நாற்கரங்கள் கொண்ட அத்திருவுருவைக் காண ஆவலுடனுள்ளேன்.

பகவான்: அன்பனே அர்ஜூனா, எனது எல்லையற்ற விஸ்வரூபமானது எனது அந்தரங்க சக்தியால் உனக்கு காண்பிக்கப்பட்டது. இதற்குமுன் இதை யாரும் கண்டதில்லை. வேதப்பயிற்சியாலோ, தான, தவங்களாலோ, பிற செயல்களாலோ இவ்வுருவம் காணப்படக்கூடியதல்ல. நடுக்கத்திலிருந்து விடுபட்டு, அமைதியாக நீ விரும்பிய வடிவில் என்னைக் காண்.

சஞ்சயன்: இங்ஙனம் கூறிய பகவான், நாற்கரங்களுடனான - இறைவடிவான நாராயண தோற்றத்தில் அருளினார். பின் அச்சத்துடனிருந்த அர்ஜூனனை உற்சாகப்படுத்த அனைத்துக்கும் மூலத்தோற்றமான இருகரங்கள் கொண்ட கிருஷ்ண உருவைக் காட்டினார்.

அர்ஜூனன்: கிருஷ்ணா, மனிதர் போன்ற உமது இத்திருவுரு கண்டு என் மனம் அமைதியுற்றது. நான் இப்போது சுய இயல்பிலுள்ளேன்.

பகவான்: அர்ஜூனா, நீ காணும் இவ்வுருவானது காண்பதற்கு கடினமானது. தேவர்களும் இதைக் காண ஏங்குகின்றனர். உன் தெய்வீகக் கண்களால் நீ காணும் இத்தோற்றமானது வேத பாராயணங்களாலோ, கடுந்தவங்களாலோ, தானங்களாலோ, வழிபாட்டினாலோ விளைவதன்று.

எனக்காற்றும் கலப்பற்ற பக்தித் தொண்டினால் மட்டுமே என்னை இவ்வாறு புரிந்து கொள்ள இயலும்; நீ உன்முன் காணும் இது போன்ற தோற்றத்தைக் காண இயலும். என்னைக் குறித்த ரகசியத்திலும் உட்புக முடியும்.

அர்ஜூனா, மனக் கற்பனைகளின் களங்கத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு, எல்லா உயிர்களையும் நேசிப்பவனும், எனது தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவனுமான ஒருவன் நிச்சயமாய் என்னை வந்தடைகிறான்.

அத்தியாயம் 12 >>
  ====++++====
 
பகவத் கீதை - அத்தியாயம் 12

பக்தி யோகம்


அர்ஜூனன்: இறைவா, வழிபாடுகளில் சிறந்தது எது? எது பக்குவமானது? உருவுடன்கூடிய உமக்கு பக்தித் தொண்டாற்றுவதா அல்லது தோன்றாத அருவ பிரம்ம பாதையை ஏற்பதா?

பகவான்: எனது திவ்வியமான உருவில் மனதை நிறுத்தி நம்பிக்கையுடன் என்னை வழிபடுவதில் ஈடுபட்டிருக்கும் பாதையையே மிகவும் பக்குவமானதாக நான் கருதுகிறேன்.

புலப்படாததும், எங்கும் நிறைந்ததும், மனதுக்கு எட்டாததும், மாறாததும், அசையாததும், நிலைத்ததும், அழியாததுமான அருவப் பிரம்மத்தை ஏற்று வழிபடுவோர் சமநோக்குடையவராய், எல்லா ஜீவர்களின் நலனிலும் ஈடுபட்டு என்னை அடைகின்றனர். ஆனாலும் உடலுடைய வாழ்வில், அருவத்தன்மை இயல்பிடம் மனதை வைத்து முன்னேறும் பாதை மிகக்கடினமானது.

பார்த்தனே, என்னில் மனதை வை. எப்போதும் என்னையே தியானித்து, என் தொண்டிலே ஈடுபட்டு, பிறழாது என்னிடம் பக்தி கொண்டு, செயல்களை எனக்காகத் துறந்து, என்னை வழிபடுவனை உடனடியாக சம்சாரக் கடலிலிருந்து காப்பாற்றுபவனாக நான் இருக்கிறேன்.

என்மீது மனதை நிறுத்தி உன் அறிவை எல்லாம் என்னில் ஈடுபடுத்து. இவ்வாறாக நீ என்னுடன் எப்போதும் வசிப்பாய் என்பதில் சந்தேகமில்லை.

தனஞ்செயா, அவ்வாறு பிறழாது என்மீது உன் மனதை நிறுத்த முடியாவிடில், பக்தி நெறிகளைக் கைக்கொள். இவ்விதமாய் என்னை அடையும் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்.

பக்தி நெறிகளையும் கடைப்பிடிக்க முடியாவிடில், எனக்காக மட்டும் செயல்பட முயற்சி செய், இதனால் நீ பக்குவமடையலாம்.

இதையும் நீ செய்ய முடியாவிடில், செயலின் விளைவுகளைத் துறக்க முயற்சி செய். இவ்விதம் ஆன்மாவில் நிலைபெறலாம்.

அதுவும் முடியாவிடில், அறிவை விருத்தி செய். ஆனால் அறிவைவிட தியானமும், தியானத்தை விட செயலின் பலனைத் துறத்தலும் சிறந்தன. இதனால் மன அமைதி பெறலாம்.

பொறாமையற்ற, எல்லா ஜீவராசிகளுக்கும் நண்பனான, தன்னை உரிமையாளனாகக் கருதாதவனான, பொய் அகங்காரத்திலிருந்து விடுபட்டவனான, இன்ப துன்பங்களில் சமமானவனான, எனது தொண்டில் எப்போதும் திருப்தி கொண்டவனான, அறிவும், மனதும் என்னில் உடன்பாடு கொண்ட எனது பக்தன் எனக்கு மிகப் பிரியமானவன்.

யாருக்காக உலகம் வருந்துவதில்லையோ, யார் உலகத்தால் வருந்துவதில்லையோ, பயம், இன்ப துன்பங்களில் தடுமாறாத அத்தகு மனிதன் எனக்கு மிகப் பிரியமானவன்.

எந்த விருப்புமில்லாத தூயவனும், திறமைசாலியும், கவலையற்றவனும், பலனுக்காக முயலாதவனுமான பக்தன் எனக்கு மிகப் பிரியமானவன்.

இன்ப துன்பத்தால் பாதிக்கப்படாதவனும், கவலைப்படாதவனும், விரும்பாதவனும், சுப அசுப விஷயங்களைத் துறப்பவனுமான பக்தன் எனக்கு மிகப் பிரியமானவன்.

நண்பரிடத்தும், பகைவரிடத்தும், மானத்திலும், அவமானத்திலும், இன்ப துன்பங்கள், வெப்பம் குளிர், புகழ்ச்சி இகழ்ச்சி இவைகளில் நடு நிலையானவனும், களங்கங்களிலிருந்து விடுபட்டவனும், அமைதியானவனும், தங்கும் இடத்திற்காக கவலைப்படாதவனும், அறிவில் நிற்பவனுமான எனக்குத் தொண்டாற்றும் பக்தன் எனக்கு மிகப் பிரியமானவன்.

அர்ஜூனா, பக்தித் தொண்டின் அழிவற்ற பாதையைப் பின்பற்றி பெரு நம்பிக்கையுடன் தன்னை ஈடுபடுத்தி, என்னையே இறுதி இலக்காக ஏற்பவன் எனக்கு மிகமிகப் பிரியமானவன்.

அத்தியாயம் 13 >>
 ====++++====
 
பகவத் கீதை - அத்தியாயம் 13

க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்


அர்ஜூனன்: பகவானே, இயற்கை (ப்ரக்ருதி), அனுபவிப்பவர் (புருஷர்), க்ஷேத்ரம் (களம்), க்ஷேத்ரக்ஞன் (களம் அறிபவன்), ஞானம், ஞானத்தின் இறுதி இவைகளை நான் அறிய விரும்புகிறேன்.

பகவான்: குந்தி மைந்தா, இவ்வுடலே க்ஷேத்ரம். இதை அறிபவன் க்ஷேத்ரக்ஞன். எல்லா உடல்களிலும் நானே அறிபவனாக இருக்கிறேன். உடல், அதன் உரிமையாளர் இதனைப் புரிந்து கொள்வதே ஞானம். இதுவே என் அபிப்பிராயம்.

(உடலே க்ஷேத்ரம். அதனுள் உடலை அறியும் உரிமையாளனும் (ஜீவன்), உரிமையாளனை அறியும் எல்லாமறிந்த பரமான்மாவும் வாழ்கின்றனர். இதில் ஜீவன், பரம புருஷ பகவானின் சக்தி அல்லது பகவானின் ஆன்மீக சரீரத்தின் அங்கத் துணுக்காவான். பரமான்மாவோ, பகவானின் பிரதிநிதி அல்லது அவரது சுயவிரிவு ஆவார்.

இனி க்ஷேத்ரம், அதன் மாற்றங்கள் - க்ஷேத்ரஞன், அவனது தன்மைகள் பற்றி சுருக்கமாக கூறுகிறேன். இவை முனிவர்களால் ஆய்ந்து சொல்லப்பட்டவை.

ஐந்து பூதங்கள், அகங்காரம், அறிவு, குணங்களின் தோன்றா நிலை, பத்து புலன்கள், மனம், ஐந்து புலன் விஷயங்கள் மற்றும் விருப்பு, வெறுப்பு, இன்பதுன்பம், உடலமைப்பு, உணர்வு, திட நம்பிக்கை இவைகளே க்ஷேத்ரமும், அதன் தோற்றமும் ஆகும்.

அடக்கம், பெருமை கொள்ளாமை, அஹிம்சை, பொறுமை, நேர்மை, சத்குருவை ஏற்றல், தூய்மை, நிலைபிறழாமை, புலனடக்கம், புலனுகர்வில் துறவு, பொய் அகங்காரமின்மை, தீமைகளை கவனித்தல் (பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி போன்றவை), மனைவி, மைந்தர், இல்லம் மற்றும் பிறரிடம் பற்றின்மை, இன்ப துன்பங்களில் நடுநிலை, என்னிடம் மாறாத தூய பக்தி, தனியிடத்தை நாடுதல், கூட்டத்திலிருந்து விலகியிருத்தல், ஆன்மீக விஞ்ஞானத்திற்கு முக்கியத்துவம் தருதல், பூரண உண்மைக்காக ஆன்ம விசாரணைகள் செய்தல் - இவைகளே ஞானம் எனப்படும். இவைகளுக்கு எதிரானவை அஞ்ஞானமாகும்.

எதையறிவதால் நித்திய அமுதத்தை சுவைப்பாயோ, அறிய வேண்டிய அதனைக் கூறுகிறேன். துவக்கமற்றது அது. எனக்கு கீழ்ப்பட்டது. பிரம்மம் அல்லது ஆன்மா எனப்படுவது; ஜடவுலகின் காரண விளைவுகளுக்கு அப்பாற்பட்டது.

(மூன்று விதமான பிரம்ம ஞானங்கள் - செயற்களமான இயற்கையும் பிரம்மமே. இட இயற்கையை ஆண்டு அனுபவிக்க விரும்பும் ஜீவான்மாவும் பிரம்மமே. இவையிரண்டின் உண்மை ஆளுனராக உள்ள பரமான்மாவும் பிரம்மமே.

மேலும் எல்லா இடங்களிலும் கரங்கள், கால்கள், முகங்கள், கண்கள் இவற்றுடன் பரமான்மா இருக்கிறார். அவர் எல்லாவற்றையும் கேட்கிறார். அவரே புலன்களின் மூலமாயிருந்தாலும் புலன்களற்று இருக்கிறார். அனைவரையும் காப்பவராயினும் பற்றற்றவர். குணங்களுக்கு இறைவனாய் இருந்தும் குணங்களற்றவர். அசையும், அசையா அனைத்திலும் உள்ளும் புறமும் உள்ளார். தூரத்திலும் இருக்கிறார், அருகிலும் இருக்கிறார், எனினும், ஜடப் புலன்களால் அவரைக் காணவோ, அறியவோ இயலாது.

அவர் ஜீவர்களில் பிரிந்திருப்பதாய் தோன்றினாலும், பிரிவற்றவர். உயிரினங்க்களைப் பாதுகாவலனாயும், அழிப்பவராயும், அபிவிருத்தி செய்பவராயும், பிரகாசங்களுக்கு மூலமாயும் இருக்கிறார். இருளுக்கு அப்பாற்பட்டவராயினும், தோன்றாதவராய் இருக்கிறார். ஞானம், ஞானத்தின் லட்சியமான அவர், அனைவரின் இதயத்திலும் இருக்கிறார்.

இவ்வாறாக க்ஷேத்ரம், அதை அறிபவன், ஞானம் அனைத்தும் சுருக்கமாக என்னால் விவரிக்கப்பட்டன. என் பக்தர்கள் மட்டுமே இவைகளைத் தெளிவாய் அறிந்து, எனது இயற்கையை அடைய இயலும்.

இந்த ஜட இயற்கையும், உயிரினங்களும் துவக்கமற்றவை. ஆனால் அவை இரண்டின் மாற்றங்களும் (ஆரம்பம், வளர்ச்சி, தேய்வு, முடிவு), குணங்களும் - ஜட இயற்கையிலிருந்தே உண்டாகின்றன, ஆன்மாவிற்கு சம்பந்தமில்லை.

செயல்கள், விளைவுகளுக்கு காரணம் ஜட இயற்கையாகும். ஆனால் இன்பதுன்பங்களுக்கு காரணம் உயிரினங்கள் மட்டுமே. அவன் இயற்கையின் தொடர்பால் முக்குணங்களின்படி பல சரீரங்களில் வாழ்ந்து, நன்மை தீமைகளைத் துய்க்கிறான்.

இருப்பினும் இவ்வுடலில் உன்னதமான ஓர் அனுபவிப்பாளர் இருக்கிறார். அவரே பரம புருஷர், உரிமையாளர், அனுமதிப்பவர், மேற்பார்வையிடுபவர், பரமான்மா ஆவார்.

இயற்கை, உயிர்வாழி - இரண்டுக்கும் இடையேயான இயற்கைக் குணங்களின் விளைவுகள் இவை தொடர்பான உண்மைகளைப் புரிந்து கொள்பவன் நிச்சயமாக விடுதலை பெறுகிறான். எந்த நிலையிலும் அவன் மீண்டும் பிறப்பதில்லை.

தியானத்தால் சிலரும், ஞான விருத்தியால் சிலரும், பலனோக்காத செயல்பாட்டினால் சிலரும் பரமாத்வாவை உணர்கின்றனர்.

ஆன்மீக அனுபவங்கள் இல்லாவிடிலும், பிறரிடம் கேட்டறிந்து இறைவனை வழிபடுகின்றனர். அவர்கள் கேட்பதற்கான ஆவலால் மாத்திரம் பிறப்பு, இறப்பெனும் சுழலில் சிக்காது உயர்கின்றனர்.

பாரதர்களின் தலைவா, சராசரங்களில் நீ காண்பவை எல்லாம் க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன் இரண்டின் கலவையே.

எல்லா உயிர்களிலும் ஜீவான்மாவைத் தொடர்பவராக பரமான்மாவைக் காண்பவனும், அவர்கள் அழிவற்றவர்கள் என்பதை அறிந்து கொள்பவனுமே உண்மையில் காண்பவனாவான். அவன் மனத்தால் தன்னை தரமிழக்கச் செய்து கொள்வதில்லை, தெய்வீக இலக்கை அடைகிறான்.

செயல்களுக்கெல்லாம் காரணம் ஜட இயற்கையால் ஆன உடலே, ஆன்மா அல்ல என அறிபவன் உண்மையைக் கண்டவனாகிறான்.

பரமாத்வாவிற்கு சொந்தமில்லாத, ஜடத்தோற்ற வேறுபாடுகளைக் காணும் நிலையைக் கடந்து விடும்போது ஒருவன் பிரம்ம நிலையை அடைகிறான். உயிரினங்கள் பரந்து இருப்பதையும் காண்கிறான்.

அர்ஜூனா, நித்தியமான, தெய்வீகமான, குணங்களுக்கு அப்பாற்பட்டதான ஆன்மா, ஜடத்தொடர்பால் உடல் பெற்றாலும் அது எதையும் செய்வதோ, சிக்குவதோ இல்லை.

எங்கும் நிறைந்துள்ள ஆகாயம் தனது நுட்பமான இயற்கையால் களங்கமற்று இருப்பது போல, பிரம்ம உணர்வில் திளைக்கும் ஆன்மாவும் ஜட தேகத்தால் களங்கமடைவதில்லை.

பரத மைந்தா, கதிரவன் அகிலமெல்லாம் பிரகாசிப்பது போல், ஆன்மா உணர்வால் உடலெங்கும் பிரகாசிக்கிறது.

உடலுக்கும், அதன் உரிமையாளனுக்கும் இடையேயான இந்த வேறுபாட்டினை அறிந்து கொண்டவனும், விடுபடும் முறையை அறிபவனுமான ஒருவன் பரம இலக்கை அடைகிறான்.

அத்தியாயம் 14 >>
 ====++++====
 
பகவத் கீதை - அத்தியாயம் 14

குண‌த்ர‌ய‌ விபாக யோகம்


ஸ்ரீ பகவான் : அர்ஜூனா மீண்டும் ஞானங்களில் உயர்ந்ததைக் கூறுகிறேன். இதையறிந்த முனிவர்கள் உயர்ந்த பக்குவத்தைப் பெற்றுள்ளனர். இஞ்ஞானத்தைப் பெறும் ஒருவன் எனது இயற்கையைப் போல் தெய்வீக இயற்கையை அடையலாம். அவன் படைப்பின்போது வருவதுமில்லை, அழிவின்போது அழிவதுமில்லை.

பரத மைந்தா, மஹத்தத்துவம் எனும் மொத்த ஜட இருப்பே பிறப்பின் மூலம். அனைத்தும் அதிலிருந்தே தோன்றின.

எல்லா உயிரினங்களும் பிறப்பால் சாத்தியமாக்கப்படுகின்றன. அவற்றுக்கு விதையளிக்கும் தந்தையாக நான் இருக்கிறேன்.

ஜட இயற்கை என்பது சத்வ, ரஜோ, தமோ குணங்களால் ஆனது. இக் குணங்களே இயற்கைக்குள் புகுந்துள்ள அழிவில்லாத தேஹியை தேஹத்துடன் பிணைக்கின்றன.

பாபமற்றவனே, குணங்களில் சத்வம் தூயது. பாப விளைவுகளிலிருந்து அதுவே விடுவிக்கிறது. இக்குணத்தினால் தான் ஞான விருத்தி கிடைக்கிறது. எனினும் இக்குணம் ஒருவனை இன்ப நினைவுகளுக்கு அடிமையாக்குகிறது.

ரஜோ குணம் அடங்காத ஆசையினாலும் விருப்பத்தாலும் நிரம்பியது. இது ஒருவனை பலன் நோக்கும் செயல்களுக்கு அடிமையாக்குகிறது.

தமோ குணம் உயிரினங்களின் மயக்கத்துக்குக் காரணமாவதுடன், பித்தம், சோம்பல், உறக்கம் போன்றவற்றுக்கு அடிமை ஆக்குகிறது.

சத்வ குணம் இன்பத்திற்கும், ரஜோ குணம் செயலின் பலனுக்கும், தமோ குணம் பித்த நிலைக்கும் ஒருவனை அடிமையாக்குகின்றன.

பரத மைந்தா, சத்வ குணம் சில சமயங்களில் ரஜோ குணத்தைத் தோற்கடிக்கின்றது. வேறு சில சமயங்களில் தமோ குணம், ரஜோ குணத்தைத் தோற்கடிக்கிறது. குணங்களுக்குள் உயர் நிலைக்கான போட்டி இருந்து கொண்டே இருக்கிறது.

உடலின் ஒன்பது கதவுகளும் ஞானத்தால் பிரகாசப்பட்டு இருக்கையில் சத்வ குணத்தின் தோற்றமானது உணரப்பட முடியும்.

ரஜோகுணம் ஓங்கும் போது பெரும் பற்று, அடங்காத ஆசை, ஏக்கம், கடின உழைப்பு இவைகள் உள்ளன.

தமோகுணம் மேலோங்கும் போது பித்தம், மயக்கம், சோம்பல், இருள் ஆகியவை உண்டாகும்.

சத்வ குணத்திலிருக்கையில் உடலை விடுபவன் புனிதமான மேல் கிரஹங்களை அடைகிறான். ரஜோ குணத்திலிருக்கையில் இறப்பவன் பலனோக்கு செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களிடையே (பூவுலகில்) பிறவி எடுக்கிறான். தமோ குணத்தில் இருக்கையில் இறப்பவனோ மிருக இனத்தில் பிறவியெடுக்கிறான்.

சத்வ குண செயல்கள் ஒருவனைத் தூய்மைப்படுத்துகின்றன. ரஜோ குண செயல்கள் துக்கம் தருகின்றன. தமோ குண செயல்கள் அறிவிலித்தனமாக அமைகின்றன.

சத்வ குணத்தில் ஞானம் விருத்தி, ரஜோ குணத்தில் பேராசைப் பெருக்கம், தமோ குணத்தில் அறிவின்மை, பித்தம், மயக்கம் போன்றவை உண்டாகின்றன.

சாத்வீகி படிப்படியாக மேல்கிரஹத்திற்குச் செல்கிறான். ரஜோ குணத்தவன் பூவுலகில் மீண்டும் பிறக்கிறான். தமோ குணத்தவன் கீழ் கிரஹங்களுக்கு இழிகிறான்.

குணங்களுக்கு அப்பாற்பட்டு செயல்கள் எதுவுமில்லை. ஆனால் பரம புருஷர் குணங்களுக்கு அப்பாற்பட்டவர். இதை நீ அறியும்போது எனது ஆன்மீக இயல்பினை அடைவாய். (குணங்களில் மேம்படுவாய்).

குணத்தால் உடலைப் பெற்றாலும், குணங்களிலிருந்து உயர்வு பெறுவானாகில் ஒருவன் ஜடத்துயரங்களிலிருந்து விடுபட்டு, இவ்வாழ்விலேயே அமிர்தத்தைச் சுவைக்கலாம்.

அர்ஜூனன் : இறைவா, அங்கனம் குணத்தில் உயர்ந்தவனின் அறிகுறிகள் எவை? அவந்து நடத்தை எவ்வாறிருக்கும்? அவன் எவ்வாறு உயர்கிறான்.

ஸ்ரீ பகவான் : முக்குணங்களின் வெளிப்பாடுகளான பிரகாசம், பற்று, மயக்கம் இவைகள் தோன்றும்போது அவற்றை அடைய ஏங்காதவனும், குணங்களின் ஜட‌ விளைவுகளுக்கு அப்பாற்பட்டு அலட்சியமாய் இருப்பவனும், உறுதியானவனும், குணங்களே செயல்படுகின்றன என அறிபவனும், இன்பதுன்பங்களையும், புகழ்ச்சி, இகழ்ச்சிகளையும் சமமாகப் பாவிப்பவனும், மான அவமானத்தில் மாறுபடாதவனும், மண், கல், பொன் இவற்றை சம நோக்கில் காண்பவனும், நண்பனையும் எதிரியையும் ஒரே பாங்கில் நடத்துபவனும், பலன் தரும் செயல்களைத் துறந்தவனும் ஆன மனிதன் குணங்களில் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்.

எந்த நிலையிலும் பிறழாது எனக்காக முழு பக்தித் தொண்டாற்றுபவன், முக்குணங்களைக் கடந்து பிரம்ம நிலையை எய்துகிறான்.

அத்தியாயம் 15 >>
 ====++++====
 
பகவத் கீதை - அத்தியாயம் 15

புருஷோத்தம யோகம்


பகவான் : மேலே வேரும், கீழே கிளைகளும் உடைய ஒரு ஆலமரம் உள்ளது. வேதப் பதங்களே அதன் இலைகள். இம்மரத்தை அறிபவன் வேதங்களை அறிபவனாவான். முக்குணங்களால் கிளைகள் வளர்கின்றன. புலன் விஷயங்கள் சிறு கிளைகளாகும். வேர்கள் கீழ் நோக்கிப் பிரிகின்றன. அவை பலனை எதிர்பார்க்கும் செயல்களுடன் கட்டப்பட்டுள்ளன.

இம்மரத்தின் உண்மைத்தோற்றம் இங்கில்லை. இதன் துவக்கமோ முடிவோ, அஸ்திவாரமோ யாராலும் புரிய முடியாதது. எனினும் பற்றின்மை எனும் கோடாரியால் இதனை வீழ்த்த வேண்டும். இதனால் எங்கு சென்றால் மீண்டும் திரும்புவதில்லையோ அங்கு, யாரிடமிருந்து அனைத்தும் துவங்குகின்றதோ, சிந்தனைக்கு எட்டாக் காலம் தொட்டு எல்லாம் தங்கியிருக்கிறதோ, அந்த முழு முதற்கடவுளைச் சரணடைய வேண்டும்.

மயக்கம், பொய், அகங்காரம், பொய் உறவுகள், காமம், இருமைகள் இவற்றிலிருந்து விடுபட்டவனே நித்யத்தை அறிந்தவன். இறைவனைச் சரணடைவதைப் புரிந்தவன் அவனே, அவனே அவரது தேசத்தை அடைகிறான்.

அத்தேசமானது, சூர்ய சந்திரராலும், பிற ஒளியாலும் ஒளியூட்டப்படுவதில்லை. அங்கு சென்றவன் மீண்டும் இங்கு திரும்புவதில்லை.

ஜடவுலகில் வாழும் உயிரினங்கள் அனைவரும் எனது நித்தியமான பின்னப்பகுதிகளாவர். கட்டுண்ட காரணத்தால் மனம் முதலான ஆறு புலன்களால் கஷ்டப்படுகின்றனர்.

காற்றானது வாசனையைச் சுமந்து செல்வது போல், ஓருடலிலிருந்து மற்றொரு உடலுக்கு உணர்வுகளை உயிர்வாழி சுமந்து செல்கிறான். இங்கனம் சென்றதும் அவனது மனதுக்குப் பொருத்தமான கண், காது, மூக்கு, நாக்கு, தோல் இவற்றைத் தனதாக்கியபடி உரிமையுடன் விஷயங்களை அனுபவிக்கிறான்.

உயிர்வாழி எங்கனம் உடலை விட்டுப் போகிறான் என்பதையும், குண மயக்கத்தால் எத்தகைய சரீரத்தை அடுத்துப் பெறுவான் என்பதையும் மூடர்களால் அறிய இயலாது. அறிவைப் பயின்றவர்களே இதனை அறிய முடியும். ஆன்ம உணர்வில் நிலைத்திருப்பவன் இதனைத் தெளிவாகக் காணலாம். அவ்வுணர்வு இல்லாதவன் முயன்றாலும் நடப்பதைக் காண இயலாது.

ஜடவுலக இருளை நீக்கும் கதிரவனின் ஒளி என்னிடமிருந்தே தோன்றுகிறது. சந்திரன், நெருப்பு ஆகியவற்றின் ஒளியும் என்னிடமிருந்தே வருகிறது.

நான் ஒவ்வொரு கிரகத்தினுள் நுழைவதாலும், எனது சக்தியாலும் கிரகங்கள் தமது சுழற்பாதையில் செல்கின்றன. நானே சந்திரனாகி தாவரங்களுக்கு வாழ்வு ரசத்தை வழங்குகிறேன். (தாவரங்களிலிருந்து நாம் பெறும் சுவையான பொருட்களின் சுவைக்குக் காரணமாக வாழ்வு ரசம் உள்ளது). உயிர்களின் உடலில் உதரக்கனலாய் இருந்து உள், வெளி மூச்சுக் காற்றால் நான்கு விதமான உணவுகளை நானே செரிக்கச் செய்கிறேன். (நான்குவித உணவுகள் - பக்ஷயம் மெல்லுதல், போக்யம் விழுங்குதல், லேஹ்யம் நக்குதல், சோஷ்யம் உறிஞ்சுதல்)

ஒவ்வொருவரின் இதயத்திலும் நான் உள்ளேன். என்னிடமிருந்தே நினைவும், ஞானமும், மறதியும் உண்டாகின்றன. வேதங்களால் நானே அறியப்பட வேண்டியவன். வேதாந்தத்தை இயற்றியவனும், அறிபவனும் கூட நானே.

இழிபவர், இழியாதவர் என இருவகை மனிதர்கள் உள்ளனர். ஜடவுலகில் அனைவருக்கும் இழியும் வாய்ப்பு உண்டு. ஆன்மீக உலகில் இழியும் வாய்ப்பில்லை.

இவ்விருவருக்கும் அப்பாற்பட்டு உலகிற்குள் புகுந்து அவற்றைக் காப்பவரான ஈஸ்வரன் இருக்கிறார். இழிபவர், இழியாதவர் இவ்விருவருக்கும் அப்பாற்பட்டு சிறந்தவனாக நான் விளங்குவதால் உலகாலும், வேதங்களாலும் நான் அந்த ஈஸ்வரனாக, புருஷோத்தமனாக கொண்டாடப்படுகிறேன்.

சந்தேகமின்றி புருஷோத்தமனாக என்னை ஏற்பவன் எல்லாமறிந்தவன். அவன் முழு பக்தித் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான்.

குற்றமற்றவனே, வேதங்களின் மிகவும் ரகசியமான பகுதி இதுவே. உனக்கு இப்போது அது வெளிப்படுத்தப்பட்டது. இதை அறிபவனே அறிஞன். அவன் தன் முயற்சிகளில் பக்குவம் பெற்றவன்.

அத்தியாயம் 16 >>
பகவத் கீதை - அத்தியாயம் 16

தெய்வ அசூர சம்பத் யோகம்


பகவான் : பரதனின் மைந்தனே, அஞ்சாமை, தன் இருப்பில் தூய்மையாய் இருத்தல், இணக்கம், ஈகை, தன்னடக்கம், ஞானவிருத்தி, யாகம், வேதம் படித்தல், தபஸ், எளிமை, அகிம்சை, வாய்மை, சினமின்மை, துறவு, அமைதி, புறங்கூறாமை, இரக்கம், பேராசையின்மை, இனிமை, நிதானம், சலிப்புறாமை, தைரியம், பொறை, வலிமை, தூய்மை, சூதின்மை, செருக்கின்மை இவைகள் தெய்வீகக் குணங்களாகும்.

பகட்டு, அகந்தை, வீண் அபிமானம், கோபம், கொடூரம், அஞ்ஞானம் முதலானவை அசுரக் குணங்களாகும்.

தெய்வீகக் குணங்கள் ஒருவனை விடுபடுத்துகின்றன. அசுரக்குணங்கள் சிறைப்படுத்துகின்றன. பாண்டுபுத்திரா, வருந்தாதே. நீ தெய்வீகக் குணங்களுடன் பிறந்துள்ளாய்.

மனிதர்களிலும் தெய்வீகம், அசுரத்தனம் என இருவிதம் உண்டு. அசுரத்தன்மையை விளக்குகிறேன்.

அசுரர்கள் நன்மை, தீமைகளை அறியார். தூய்மை, வாய்மை, ஒழுக்கம் அவர்களிடத்தில் காணப்படாது.

இவ்வுலகம் பொய் என்றும், ஆதாரமற்றது என்றும், உலகை இயக்கும் கடவுளை இல்லை என்றும், காமத்தால் உலகு படைக்கப்பட்டது, அதைத்தவிர வேறேதும் இல்லை என்றும் அசுரர் கூறுகின்றனர். இதனால் அவர்கள் அறிவிழந்தவர்களாய் தன்னையும் கொன்று, உலகையும் அழிப்பதற்கான லாபமற்ற கொடூரமான செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் நிறைவேறாத காமம், ஆடம்பரம், பெருமை, பொய்க்கவுரவ‌ம் இவற்றால் மயங்கி, நிரந்தரமற்றவைகளில் மனம் மயங்கி தீய செயல்களில் ஈடுபடுகின்றனர்.

சாகும் வரை இவர்கள் காமத்தாலும், கவலையாலும், கோபத்தாலும் புலனுகர்வுக்காக தவறான முறையில் செல்வத்தைச் சேர்க்கின்றனர். அறியாமையால் "இது என்னால் அடையப்பட்டது. திட்டமிட்டபடி மேலும் செல்வம் சேர்ப்பேன், இது என்னுடையது, எதிர்காலத்தில் இது இன்னும் பெருகும், அவன் எனக்கு எதிரி, அதனால் கொன்று விடுவேன், நானே தலைவன், நானே சுகம் காண்பவன், பலசாலி, பக்குவமானவன், செல்வாக்குடையவன், தான யாகம் செய்வேன், இவ்வாறு இன்பமாயிருப்பேன்" இவை போன்றவை அசுரர்களின் எண்ணங்கள் ஆகும்.

எண்ணக் குழப்பங்களாலும், மோகத்தாலும் காம போகத்தில் பற்றுள்ள இவர்கள் நரகில் வீழ்கின்றனர்.

திமிராலும், வளத்தாலும், பொய் கவுரவத்தாலும் மயங்கிக் கிடக்கும் இந்த அசுரத் தன்மையினர், நெறிமுறை இன்றி யாகமுஞ் செய்வர். பொய்யான தன்னுணர்வு, பலம், பெருமை, காமம், கோபம் இவற்றில் மயங்கிப் போன இவ்வசுரர்கள் தமக்குள்ளும் பிற உயிர்களுக்குள்ளும் வாழும் பரமாத்மாவின் மீது பொறாமையுற்று உண்மைக்கு எதிரான நிந்தனைகள் புரிகின்றனர்.

மிகவும் தரந்தாழ்ந்த, பொறாமை, குறும்புகள் நிறைந்த இவர்கள் கடல் போன்ற ஜட இருப்பின் பலவிதமான அசுர யோனிகளுள் என்னால் தள்ளப்படுகின்றனர். மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து, என்னை அடையமுடியாத கீழ் நிலையை அடைகின்றனர்.

ஆன்மாவை அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லும் மூன்று நரக வாசல்கள் காமம், கோபம், லோபம் ஆகியவை. அறிவாளிகள் இவற்றைத் துறக்க வேண்டும். இதிலிருந்து தப்பிய ஒருவன், தன்னை அறிவதற்கு சாதகமான செயல்களைச் செய்து, படிப்படியாக உயர்ந்து பரம இலக்கை அடைகிறான்.

காமத்தால் சாஸ்திர நெறிகளைப் பொருட்படுத்தாது, மனம் போனபடி வாழ்பவன் ஆன்ம பக்குவத்தையோ, சுகத்தையோ, பரம இலக்கையோ அடைவதில்லை. ஆகையால் நல்வினை, தீவினைகளை அறிய சாஸ்திர விதிமுறைகளைக் கடைப்பிடித்து உயர முயல வேண்டும்.

அத்தியாயம் 17 >>
 ====++++====
பகவத் கீதை - அத்தியாயம் 17

சிரத்தா த்ரய யோகம்


அர்ஜூனன் : கிருஷ்ணா, சாஸ்திர நெறிகளுக்கு முரணாக மனக்கற்பனையுடன், ஆனால் நம்பிக்கையுடன் வழிபடுபவன் எக்குணத்தைச் சேர்ந்தவன்? சத்வமா, ரஜஸா, தமஸா?

உடலுடைய ஆன்மாவுக்கு குணங்களுக்கேற்ப நம்பிக்கையும் மூவகைப்படுகிறது. அதுபற்றிக் கேட்பாயாக.

மனநிலைக்கேற்ப நம்பிக்கையும், அதன் விருத்தியும் அமைகின்றது. நம்பிக்கையே அவன்.

சத்வ குணத்தவர் தேவர்களையும், ரஜோ குணத்தவர் அசுரரையும், தமோ குணத்தவர் பேய்களையும், இறந்தவர்களையும் வணங்குகின்றனர்.

சாஸ்திரங்களில் சிபாரிசு செய்யப்படாத கடுந்தவங்களையும், விரதங்களையும், தற்பெருமையாலும், கர்வத்தாலும், காமத்துடன், பற்றுடன் செய்பவர்கள் ரஜோ குணத்தவராவர். அவர்கள் தமது உடலையும், உடலுள் வாழும் பரமான்வையும் துன்புறுத்துவதால் அசுரர் என்றறிவாயாக.

உணவும் குணங்களுக்கேற்ப மூவகைப்படும். யாகம், தவம், தானம் கூட அப்படியே. இவ்வேற்றுமைகளைக் கேள்.

சத்வ ஆகாரம் வாழ்நாளை நீட்டிக்கும். தூய்மை, பலம், சுகம், சுகாதாரம் மற்றும் திருப்தி தரும். மேலும் அவை இனிமையாகவும், ரஸமுள்ளதாகவும், சுவையுடையவாகவும் உள்ளன.

மிகவும் கசப்பான, புளிப்பான, உப்பான, காரமான, உலர்ந்த, எரிகின்ற உணவுகள் ரஜோ குணத்தைச் சேர்ந்தவை. இவை வலி, மனத்துன்பம் மற்றும் வியாதியைத் தரும்.

காலம் கடந்த, சுவையற்ற, பழைய வாசனையுள்ள, எச்சிலான, தூய்மையற்ற உணவு தமோ குணத்தாலானது.

சாஸ்திர நெறிகளுக்கு ஏற்ப எப்பலனையும் பாராது செய்யப்படும் யாகம் சத்வ குணத்தாலானது.

மேல்கிரகம் செல்வதற்காகவும், இகவுலக லாபம் கருதியும் செய்யப்படும் யாக மதச்சடங்குகள் ரஜோ குணத்தாலானவை.

சாஸ்திர நெறிகளை ஏற்காது, பிரசாத வினியோகமின்றி, வேத மந்திர உச்சாடனமின்றி, புரோகித தட்சணை தரப்படாது, நம்பிக்கையின்றி செய்யப்படும் யாகம் தமோ குணத்தாலானது.

இறைவன், அந்தணர், குரு, தாய்தந்தை போன்ற பெரியோரை வணங்குதல், தூய்மை, எளிமை, பிரம்மச்சர்யம் ஆகியவை தேக தவம் ஆகும்.

உண்மையை நன்மை தரும்படியும், மனம் நோகாதபடியும் பேசுவது, வேதம் ஓதுதல் இவை வாக்குத்தவம் ஆகும்.

சாந்தம் எளிமை, கம்பீரம், சுய கட்டுப்பாடு, எண்ணத்தூய்மை இவை மனத்தின் தவமாகும்.

சுயநோக்கமின்றி, பரமபுருஷரின் திருப்திக்காகச் செய்யப்படும் இத்தவங்கள் சத்வ குணத்தாலானவை.

மதிப்பு, மரியாதை, வணக்கம் பெறுவதற்காக ஆடம்பரமாகச் செய்யப்படும் தவங்களும், விரதங்களும் ரஜோ குணத்தாலானவை. நிலையற்றவை.

மூடத்தனமாகத் தன்னைத் துன்புறுத்தியோ, பிறரைத் துன்புறுத்தவோ செய்யும் தவ விரதங்கள் தமோ குணத்தாலானவை.

தக்கநேரத்தில், தக்க இடத்தில், தக்க நபருக்கு எப்பலனும் பாராது, கடமை போல் செய்யப்படும் தானம் சத்வ குணத்தாலானது.

ஏதேனும் பலன் பார்த்தோ, பலனிச்சையுடனோ, விருப்பமின்றியோ கொடுக்கப்படும் தானம் ரஜோ குணத்தாலானது.

தகுதியற்ற இடத்தில், தகுதியற்ற நேரத்தில் தகுதியற்றவருக்கு மரியாதையின்றி, கவனமின்றி தரப்படும் தானம் தமோ குணத்திலானது.

ஓம், தத், ஸ‌த் எனும் மூன்று எழுத்து அமைப்புக்களும் படைப்பு முதற்கொண்டு இறைவனைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வேத உச்சாடனத்தின் போதும், யக்ஞத்தின் போதும் பரம புருஷரின் திருப்திக்காக ஆன்மீகவாதிகளால் இவை உச்சரிக்கப்பட்டன.

ஓம் எனும் சப்தத்துடன், ஆன்மீகிகள் இறைவனை அடைவதற்காக யாக, தான, தவங்களை ஆரம்பிக்கின்றனர்.

தத் எனும் சப்தத்துடன், உலகச் செயல்களிலிருந்து விடுபடும் எண்ணத்துடன் யாக, தான, தவங்களைப் புரிய வேண்டும்.

ஸத் என்பது பக்தி யோகத்தின் இலக்கான பூரண உண்மையான இறைவனைக் குறிப்பதாகும். உண்மையில் யாகம், தானம், தவம் போன்ற செயல்கள் அனைத்தும் இறைவனைத் திருப்திப்படுத்த மட்டுமே செய்யப்படுகின்றன.

ப்ருதாவின் மைந்தா, இறைவன் மீது நம்பிக்கையின்றி செய்யப்படும் யாக, தான, தவச் செயல்கள் எவையும் நிரந்தரமானவையல்ல. அவை 'அஸத்' எனப்படும். மரணத்திற்குப் பின்னும் கூட அச்செயல்கள் உதவாது.

அத்தியாயம் 18 >>
 ====++++====
பகவத் கீதை - அத்தியாயம் 18

மோட்ச சன்யாஸ யோகம்


அர்ஜூனன் : கேசியை அழித்தவரே, தியாகத்தையும் துறவையும் பற்றி அறிய விரும்புகிறேன்.

பகவான் : பலனை விரும்பி செய்யும் செயல்களின் பலனை, தான் அனுபவிக்காமல் விட்டுக் கொடுப்பது தியாகம் என்றும், அச்செயல்களையே விட்டு விடுவது சன்யாசம் என்றும் பெரியோர்களால் அழைக்கப்படுகிறது.

எல்லாவிதமான பலன் தரும் செயல்களையும் துறக்குமாறு அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் யாகம், தானம், தவம் போன்ற தியாகச் செயல்கள் என்றுமே துறக்கப்படக்கூடாது என முனிவர்கள் கூறுகின்றனர்.

மஹாத்மாக்களைக் கூட தூய்மைப்படுத்துவதால் யாகம், தானம், தவம் போன்ற தியாகச் செயல்கள் என்றுமே துறக்கப்படக்கூடாது; பலன் பாராது ஒரு கடமையைப் போல இவை செய்யப்பட வேண்டும் என்பதே என் அபிப்ராயம்.

விதிக்கப்பட்ட கடமைகளை ஒருவன் துறக்கக்கூடாது; மோகத்தால் துறந்தால் அத்துறவு தமோ குணத்தாலானது.

கடமைகளை, உடல் வருத்தத்திற்குப் பயந்து துறந்தால், அது ரஜோ குணமாகும். இதற்கு துறவின் பலன் கிட்டாது.

செய்வதற்காக மட்டுமே, விதிக்கப்பட்ட கடமையைப் பலனில் பற்றின்றி செய்பவனது துறவு, சத்வ குணத்தாலானது.

சத்வ குணத்தவன், மங்கலச் செயல்களில் பற்று வைப்பதோ, அமங்கலச் செயல்களை வெறுப்பதோ இல்லை. செயல்பாடுகளிலும் அவனுக்கு சந்தேகம் வருவதில்லை.

உடலுடையவனுக்கு செயலைத் துறப்பது கடினம். எனவே செயலின் பலனைத் துறப்பவனே தியாகி எனப்படுவான்.

தியாகமற்றவனுக்கு இறப்பிற்குப் பின் சுவர்க்க, நரக அல்லது நடுநிலை எனும் மூவித கர்ம விளைவுகள் உண்டாகின்றன. சன்யாசிக்கு அவைகள் இல்லை.

பலவானே, செயலுக்கு முழுவடிவு தரும் ஐந்து காரணிகள் : இடம், இடமளிப்பவன், இந்திரியங்கள், இஷ்டம், இறுதியில் இறைவன் என ஸாங்க்ய தத்துவம் தெரிவிக்கிறது.

உட‌ல் ம‌ன‌ம் வாக்கினால் எதைச் செய்தாலும் அவை ச‌ரியான‌தோ அல்ல‌து த‌வ‌றான‌தோ இந்த‌ ஐந்து கார‌ணிக‌ளாலேயே உருவாகின்ற‌ன‌. இக்கார‌ணங்க‌ளைக் க‌ருதாது, த‌ன்னைக் கார‌ண‌மாக‌க் க‌ருதுப‌வ‌ன் அறிவாளி அல்ல‌; விஷ‌ய‌ங்க‌ளை உள்ள‌ப‌டி காண்ப‌வ‌னும‌ல்ல‌.

பொய் அக‌ங்கார‌மின்றி, ப‌ற்றின்றி இருப்ப‌வ‌ன் உல‌க‌த்தாரைக் கொன்றாலும் கொல்லாத‌வ‌னாவான். த‌ன் செய‌ல்க‌ளால் அவ‌ன் ப‌ந்தப்ப‌டுவ‌தில்லை.

அறிவு, அறிவின் இல‌க்கு, அறிப‌வ‌ன் இவையே செய‌லைத் தூண்டுப‌வை. க‌ருவி, க‌ர்ம‌ம், க‌ர்த்தா இவை செய‌லுக்கான‌ இருப்பிட‌ங்க‌ளாகும்.

முக்குண‌ங்க‌ளுக்கு ஏற்ப‌ அறிவு, செய‌ல் ம‌ற்றும் செய‌ல்ப‌டுவோர் இருக்கின்ற‌ன‌ர்.

வேறுப‌ட்ட‌ உயிரின‌ங்க‌ளில் வேற்றுமையின்றி ஒரே ஆன்மீக‌ இய‌ற்கை (ஆன்மா) இருப்ப‌தாய் காணும் அறிவு ச‌த்வ‌ குண‌த்திலான‌தாக‌க் க‌ருத‌ப்ப‌டுகிற‌து.

வெவ்வேறு உட‌ல்க‌ளில் வெவ்வேறான‌ உயிரின‌ங்க‌ள் இருப்ப‌தாக‌ அறியும் அறிவு ர‌ஜோ குண‌த்தினாலான‌தாக‌க் க‌ருத‌ப்ப‌டுகிற‌து.

உண்மையைப் ப‌ற்றிய‌ அறிவின்றி, ஒரு காரிய‌த்தையே பிடிவாத‌மாய் பிடித்துக் கொண்டு, அதையே எல்லாமாக‌ அறியும் அறிவு த‌மோ குண‌த்தாலான‌து.

பற்றின்றி, விருப்பு வெறுப்பின்றி, கடமையாகக் கருதி, பலன் விளைவுகளைத் துறந்து ஆற்றப்படும் செயல் சத்வ குணத்திலானதாகக் கருதப்படுகிறது.

பெரும் ஆசையுடனும், பெரும் முயற்சியுடன், பொய் அகங்காரத்துடன் ஆற்றப்படும் செயல்கள் ரஜோ குணத்திலானதாகக் கருதப்படுகிறது.

பின்விளைவயும், பந்தப்படுவதையும் பாராது அறியாமையுடனும், பிறருக்கு தீமை தரும்படியும் துவங்கப்பட்ட செயல்கள் தமோ குணத்திலானதாகக் கருதப்படுகிறது.

பற்று நீங்கியவனாய், பொய் அகங்காரமற்றவனாய், உற்சாகம் ஊக்கமுடையவனாய், வெற்றி தோல்விகளில் நடுநிலை கொண்டவனாய் செயல்படுபவன் சாத்வீகன் ஆவான்.

செயலின் பலனில் இச்சை கொண்டவனாய், அதனை அனுபவிக்க விரும்புகிறவனாய், பேராசை, பொறாமை கொண்டவனாய், தூய்மையற்றவனாய், மகிழ்வும் சோர்வும் கொள்பவனாய் செயல்படுபவன் ரஜோ குணத்தவன் ஆவான்.

சாஸ்திர விதிகளுக்கு எதிராய் நடப்பவனாய், அறிவற்றவனாய், முரடனாய், ஏமாற்றுபவனாய், புறங்கூறுபவனாய், சோம்பேறியாய், கடுகடுப்பு கொண்டவனாய், காலம் தாழ்த்துபவனாய் செயல்படுபவன் தமோ குணத்தவன் ஆவான்.

அர்ஜுனா, முக்குணங்களுக்கேற்ப செயலாற்றுபவனது விவேகமும், மன உறுதியும் மூவகைப்படும்.

செய்யத்தகுந்தது - தகாதவை எவை, பயம் கொள்ளத்தக்கது - தகாதது எவை, பந்தப்படுத்துவது - விடுபடுத்துவது எவை. இவைகளை முன்கூட்டியே அறியும் விவேகம் சத்வ குணத்திலானது. (நல்லது நல்லதாகவும், கெட்டது கெட்டதாகவும் தெரிகின்றது).

அங்கனம் பகுத்தறிய இயலாத, தர்ம அதர்மங்களின் போக்கினையறியாத ஒருவனின் விவேகம் ரஜோ குணத்திலானது. (நல்லது கெட்டது தெரியாது).

அதர்மத்தை தர்மமாகவும், தர்மத்தை அதர்மமாகவும் அறியும் விபரீத விவேகம் தமோ குணத்தாலானது. (நல்லதெல்லாம் கெட்டதாகவும், கெட்டதெல்லாம் நல்லதாகவும் தெரியும்).

மாறா உறுதியுடன், மனம், வாழ்வு, புலன் செயல்கள் இவற்றைக் கட்டுடன் வைத்திருப்பவனது உறுதி சத்வ குணத்திலானது.

அறம், பொருள், இன்பம் இவற்றின் பலன்களை பற்றுடன் விடாமல் வைத்திருப்பவனின் மன உறுதி ரஜோ குணத்திலானது.

அதிக உறக்கம், கனவு, அச்சம், கவலை, கடுப்பு, பிடிவாதம் கொண்டவனின் மனவுறுதி தமோ குணத்தாலானது.

கட்டுண்ட ஆன்மாக்களின் மூவித சுகங்களைப் பற்றி அறிவாயாக.

முதலில் விஷம் போன்றும், பிறகு அமிர்தம் போன்றும் அனுபவிக்கப்படும் சுகம் சத்வமானது.

விஷயத்தொடர்பில், முதலில் அமிர்தம் போன்றும், முடிவில் விஷம் போன்றும் அனுபவிக்கும் சுகம் ரஜோ குணத்திலானது.

தன்னுணர்வுக்குத் தடையாயும், துவக்க முதல் இறுதி வரை மயக்கத்துடனும், சோம்பலுடனும் அனுபவிக்கும் சுகம் தமோ குணத்திலானது.

தேவர் உலகிலும், இவ்வுலகிலும் ஜட இயற்கையின் முக்குணங்களிலிருந்து விடுபட்டவர் எவருமிலர்.

குணங்களுக்கும், அதன் தன்மைக்கேற்பவும் செயல்படுபவர்களாயும் (ஸ்வபாவம்) மக்கள் - அந்தணர், ஆள்வோர், வணிகர், உழைப்போர் என நால்விதமாக உள்ளனர்.

மன அடக்கம், புலனடக்கம், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, விவேகம், இறைவன் இருப்பதை ஏற்று நடத்தல் - இவை அந்தணரின் இயல்பும் அதற்கேற்ற செயல்களுமாகும்.

தீரம், வீரம், உறுதி, வளமை, புறங்காட்டாமை, ஈகை, இறைமை ஆகியவை ஆள்வோருக்கான இயல்புகள்.

விவசாயம், பசுக்களைக் காத்தல், வளர்த்தல், வியாபாரம் இவை வணிகரின் இயல்புகள். இட்ட பணியைச் செய்தல் உழைப்போருக்கான இயல்புகள் ஆகும்.

அவரவர் தமது இயல்புக்கேற்ப செயல்படுவதால் மட்டுமே வாழ்வில் திருப்தியும், பக்குவமும் அடையலாம்.

எல்லா உயிர்களின் மூலமாயும், எங்கும் நிறைந்தும் இருப்பவருமான இறைவனை, தம் கடமைகளை சரிவர செய்தபடி வழிபடுவதால் ஒருவன் படிப்படியாக நல் நிலையை அடையலாம்.

நிறைவாய் ஆற்றப்படும் பிற தர்மத்தை விட - குறைவாய் ஆற்றப்பட்டாலும் சொந்த தர்மமே சிறந்தது. ஏனெனில் சொந்த தர்மத்தின் விளைவுகள் ஒருவனுக்கு பாவத்தைத் தருவதில்லை.

குற்றம் நிறைந்ததாயினும் தனது இயல்பான தர்மத்தை விட்டுவிடக் கூடாது. ஏனெனில் தீயைப் புகழ் சூழ்ந்திருப்பது போன்று எல்லா முயற்சிகளையும் குற்றம் சூழ்ந்துள்ளது.

விஷயங்களில் பற்றின்மையாலும், சுகங்களில் நாட்டமின்மையாலும் துறவின் அதே பக்குவத்தைப் பெறலாம்.

குந்தி மகனே, எப்படி செயல்பட்டால் பிரம்ம நிலையை அடையலாம் என்பதை சுருக்கமாகச் சொல்கிறேன்.

தூய அறிவுடன், உறுதியான மனதுடன், புலன் விஷயங்களைத் துறந்து, தனித்து வாழ்பவனும், சிறிதே உண்பவனும், உடலையும், நாவையும் அடக்கி தியானம், வைராக்கியத்துடன், கர்வம், வலிமை, பெருமை, காமம், கோபம், உடமையுணர்வு இல்லாதவனாயும் இருப்பவன் - நிச்சயமாக பிரம்மத்தளத்திற்கு உயர்த்தப்படுகிறான்.

அவன் உடனடியாக பரப்பிரம்மத்தை உணர்கிறான். அவன் இழப்பிற்காக வருந்துவதுமில்லை. எதையும் அடைவதற்காக ஏங்குவதுமில்லை. சம நோக்கு உடையவனாய் என்மீது தூய பக்தியைப் பெறுகிறான்.

பக்தித் தொண்டால் மட்டுமே என்னை உள்ளபடி ஆறிந்து எனது நாட்டிலுள் நுழைய முடியும்.

செயல்களில் ஈடுபட்டாலும் என் பக்தன் எனது கருணையால், எனது பாதுகாப்பில் அழிவற்ற பரமபதத்தை அடைகிறான்.

எனவே என்னையே சார்ந்து, எனது பாதுகாப்பில் செயல்படு. இதனால் என்னைப் பற்றிய முழு உணர்வுடையவனாய்.

எனது உணர்வினால் மட்டுமே எனது கருணையைப் பெற்று, எல்லா துன்பங்களையும் கடக்க முடியும். அகங்காரத்தால் இதை நீ ஏற்க மறுத்தால், உன்னை நீ இழப்பாய்.

என் பேச்சைக் கேளாமல், நீ போரிட மறுத்தால், உன் வீரம் வீணாகும். மேலும் நீ தவறாக வழி நடத்தப்பட்டு, உன் இயற்கையே உன்னைப் போரிட வைத்துவிடும். மயக்கத்தால் நீ செய்ய மறுப்பதை உன் ஸ்வபாவமே செய்ய வைத்துவிடும்.

அர்ஜூனா, முழுமுதற் கடவுள் ஒவ்வொருவரின் இதயத்திலும் இருந்தவாறு, இயந்திரம் போன்ற உயிரினங்களின் பயணத்தை வழி நடத்துகிறார். முழுவதும் அவரைச் சரணடை. அவரது கருணையால் தெய்வீக அமைதியையும் நித்திய தலத்தையும் அடைவாய்.

ஞானங்களிலெல்லாம் ரகசியமானதை உனக்குச் சொல்லி விட்டேன். இனி நீ ஆராய்ந்து உன் விருப்பப்படியே செய்.

என்னையே நினைத்து, என் பக்தனாயாவாக‌. என்னை வழிபட்டு உன் வணக்கங்களை எனக்கு சமர்ப்பிப்பாயாக. இவ்விதமாக நீ என்னிடம் தவறாது வந்து சேர்வாய். நீ எனக்கு நண்பன் என்பதால் இந்த வாக்குறுதியைத் தருகிறேன்.

எல்லா மதங்களையும், அவற்றின் மீதான உனது அபிமானங்களையும் விட்டு என்னைச் சரணடைந்தால், எல்லா பாப விளைவுகளிலிருந்தும் உன்னை நான் விடுவிக்கிறேன். நீ பயப்படத் தேவையில்லை.

தவமில்லாதவன், பக்தியற்றவன், எனக்குத் தொண்டாற்றுவதில் பொறாமையுள்ளவன் இவர்களுக்கு இந்த ரகசிய ஞானம் கூறப்படலாகாது.

பக்தர்களிடம் இந்த பரம ரகசியத்தை விளக்குகிறவனுக்கு, பக்தித் தொண்டு உறுதியாகிறது. அவன் முடிவில் என்னை அடைகிறான். அவனை விட எனக்கு விருப்பமான தொண்டன் உலகில் யாருமில்லை. எவரும் ஆகவும் முடியாது.

தர்மங்கள் நிறைந்த இவ்வுரையாடலைக் கற்பவன், அறிவால் என்னை வழிபடுகிறான் என நான் அறிவிக்கிறேன்.

பொறாமையின்றி, நம்பிக்கையுடன் இதைக் கேட்பவன், பாப விளைவுகளினின்றும் விடுபட்டு, நல்லோர் வாழும் உலகை அடைகிறான்.

தனஞ்சயா, கவனத்துடன் கேட்டாயா? உன் மயக்கம் நீங்கியதா?

அர்ஜூனன் : அச்யுதா, என் மயக்கம் தெளிந்தது; உமது கருணையால் எனது நினைவைப் பெற்றேன்; உறுதியானேன்; உமது சொற்படி நடக்கச் சித்தமாயிருக்கிறேன்.

சஞ்சயன் : இவ்வாறு மகாத்மாக்களான ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜூனனும் உரையாடியதைக் கேட்டேன். அற்புதமான இவ்விஷயங்களைக் கேட்டதால் என் ரோமம் சிலிர்க்கின்றது. வியாஸ தேவரின் கருணையால் யோகிகளின் இறைவனான ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜூனனிடம் நேரடியாகக் கூறிய மிக ரகசியமான விஷயங்களை நான் மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்து கணம் தோறும் இன்பமடைகிறேன். மன்னா, பகவானின் அற்புத உருவை எண்ணி நான் வியப்புடன் மகிழ்கிறேன்.

யோகிகளுக்கெல்லாம் இறைவனான ஸ்ரீகிருஷ்ணரும், சிறந்த வில்வீரனான அர்ஜூனனும் இருக்குமிடத்தில், நிச்சயமாக செல்வமும், வெற்றியும், அசாதாரணமான திறனும், நீதியும் இருக்கும் என்பது எனது அபிப்ராயமாகும்.
 ====++++====